க முதல் சே வரை

பாடல் பட்டியல்

கச்​​சை அணிந்​தே கங்கணம் பூண்​டே கண்ணா உன் சன்னிதியில் கபடிக் கபடி ஆடிடு​வோம் காவி நிறக்கொடியே சுடர் ஒளியே காவிநிறக் கொடியே காவிக்கொடியே எம் குருதேவா கூடுவோமே ஒன்றாய்க் கூடுவோமே கேசவ​னை நாம் வணங்கு​வோம் கேசவர் தம் குரலழைக்குது கேசவர் மாதவர் காட்டிய வழியில் கேசவன் பிறந்தான் நவ நாயகன் பிறந்தான் கையினில் சூலமும் வாளும் ஏந்தி சக்தி எழுந்திட்டாள் கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கொள்கை வீரர் காளையர் அணிதிரண்டது சக்தியைப் போற்றி சக்தியைப் போற்றி சங்க ​மென்னும் கங்​கை யூற்று சங்க கங்​கை ​பெருகிப் பாயுது சங்க சக்தி​யை நான் வளர்ப்​பே​னென சங்க நெறியினில் கடுகி ஏகும் நாம் சங்க முரசு முழங்கிடுது சங்கம் எனும் கங்கை நீராடிவிட்டு சங்கமேதான் சக்தியே சங்கமின்றேல் பங்கமே சங்கமொன்றே சக்தி என்று சிங்கநாதம் செய்குவோம் சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி சபதம் சபதம் வாழ்வின் ஜீவன் சிவாஜி மன்ன! நின் நி​னைவு வீறு தந்திடும் சிவாஜி மன்னன் ​பெரு​மை​யை நா​மே மகிழ்ந்து பாடிடு​வோம் சும்மாவா வந்தது சே​வை ஒரு ​வேள்வி நாமும் ஆஹுதியாய் ஆகு​வோம் **********************************************************************************************

கச்​​சை அணிந்​தே கங்கணம் பூண்​டே

கச்சை அணிந்தே கங்கணம் பூண்டே நவயுகம் நிறுவிட வாரீர்! நலிவுகள் நீக்கிட வாரீர்!! பலவீனத்தால் பல நூற்றாண்டாய் நாடு சுருங்கிடக் கண்டோம் பிரம்ம தேச காந்தார (இ)லங்கையும் பாஞ்சால வங்கமும் எங்கே? விடுதலைத் தீயில் ஆகுதியான வீரரின் வேட்கை தீர்ப்போம் அகண்ட பாரதம் அமைப்போம் (கச்சை) கோடிக் கோடி மைந்தர் நாமென மமதை கொண்டே வாழ்ந்தோம் மதமாற்றத்தால் எத்தனை கோடி எதிரிகள் ஆயினர் காணீர் அமுத மனத்தால் வலிவுக் கரத்தால் இழந்தது பெற வேண்டாமோ புதியது பெற வேண்டாமோ (கச்சை) பண்டைய பாரதம் உலகின் குருவாம் இன்றதன் நிலையும் அந்தோ பிச்சையேற்றிடும் அடிவருடியெனப் பழிப் பெயர் சூழ்ந்தது காணீர் சக்தி வளர்ப்போம் மானம் காப்போம் உலகை வழி நடத்திடுவோம் அறவழி ஏற்றிடச் செய்வோம் (கச்சை) உடலைப் பிணைத்த அந்நியன் போயினும் சுதந்திர உள்ளம் உண்டோ ஹிந்து உணர்வு இழிவு கொடிதென பேசுது பேதையர் கூட்டம் இகழ்பவர் எல்லாம் போற்றிப் பணிந்திட 'ஹிந்து'வை எழுப்பிட வாரீர் சத்தியம் நாட்டிட வாரீர் (கச்சை) கடுந் தவத்தினால் கங்கையும் வந்தாள் கடவுளும் கண்முன் வந்தான் 'சாதனை' ஒன்றே வெற்றியின் வழியாம் சலியாததன் வழி செல்வோம் லட்சிய நாட்டின் சித்திரம் நம்மை வாவென அழைக்கும் காணீர் காத்து நிற்குது காணீர் (கச்சை) பாடல் பட்டியல் **********************************************************************************************

கண்ணா உன் சன்னிதியில்

கண்ணா! உன் சன்னிதியில் நானும் இடம் பெற வேண்டும் கருணையுடன் எனக்கு அருள்வாய் காலடியில் நான் இருக்க காலமெல்லாம் தொழுதிருக்க தகுதியை எந்தனுக்கு அருள்வாய் புல்லாங்குழல் உனது கைகளில் தவழ்ந்திருக்க புண்ணியம் செய்ததென்ன வியந்தேன் காட்டிலே வாழ்ந்த அது வீட்டினை விட்டு வந்து கஷ்டம் மிக ஏற்றதனை உணர்ந்தேன். அங்கமெல்லாம் சீவிச்சீவி அறுத்தனர் துண்டு துண்டாய் அனலில் இட்டு அதை வாட்டி துளைத்தனர் உடல் முழுதும் சகித்தது அத்தனையும் கிடைத்தது கண்ணா, உன் ஸ்பரிசம்! தன்னையே எரித்துக் கொண்டு சன்னிதியில் ஒளி பரப்பும் எண்ணைய் விளக்கதனைப் பார்த்தேன் ஆயுள் உள்ள வரை ஆண்டவனின் சேவை செய்யும் அருங்குணம் தேவை என்று உணர்ந்தேன் ஊதிபத்தி எரிவதென்ன, அதற்கிங்கு தகுதி என்ன, உணர்ந்திட நானும் கொஞ்சம் விழைந்தேன் தன்னை அழித்துக் கொண்டு, தருவது நறுமணத்தை தியாகமே தகுதி என்று உணர்ந்தேன். பற்றியது கற்பூரம் சுற்றியது தட்டோடு காட்டியது உன் உருவைக் கண்ணா எரிந்தது கற்பூரம் எதுவுமே மிச்சமில்லை தெரிந்தது தேவையான தகுதி பாடல் பட்டியல் **********************************************************************************************

கபடிக் கபடி ஆடிடு​வோம்

கபடிக் கபடி ஆடிடுவோம் சக்தியை நாளும் வளர்த்திடுவோம் சங்கஸ்தானில் புரண்டிடுவோம் ஹிந்துஸ்தானை உணர்ந்திடுவோம் (ஹை, கபடி) சுற்றி வளைத்தே பிடித்திடுவோம் சோதர பாசம் வளர்த்திடுவோம் உடலைக் கல்லாய் ஆக்கிடுவோம் உளத்தை அடக்கி ஆண்டிடுவோம் (ஹை, கபடி) கதைகளாம் அமுதம் பருகிடுவோம் கானம் இசைத்தே மகிழ்ந்திடுவோம் சர்ச்சையால் அறிவைத் தீட்டிடுவோம் பண்புப் பதிவுகள் பெற்றிடுவோம் (ஹை, கபடி) தண்ட பிடித்தே சுழற்றிடுவோம் தசையை எஃகாய் மாற்றிடுவோம் சமதா கோஷும் சஸ்த்ராவும் பயின்றே திறமை பெற்றிடுவோம் (ஹை, கபடி) சங்கஸ்தானின் தூசுகளே அணிந்து மகிழும் திருநீறாம் வைக்கும் காலடி தவறாமல் சங்க மந்திரம் ஜெபித்திடுவோம் (ஹை, கபடி) கண்ணன் கீதையின் சாரத்தில் புரட்சி வீரர் சரிதத்தில் வந்தே மாதர கோஷத்தில் உள்ளம் உருகி இணைந்திடுவோம் (ஹை, கபடி) பாரத மாதா வாழியவே ராஷ்ட்ர லக்ஷியம் வரிந்தேற்போம் புண்ணிய பூமியின் உருவமதே அகண்ட பாரதம் அமைத்திடுவோம் (ஹை, கபடி) பாடல் பட்டியல் **********************************************************************************************

காவி நிறக்கொடியே சுடர் ஒளியே காவிநிறக் கொடியே

காவி நிறக்கொடியே, சுடர் ஒளியே, காவிநிறக் கொடியே பூதல மீதினில் ஞானச் சுடர்வீசி புகழுடன் விளங்கிடும் புனித நற்பெயருடைய (காவி நிறக்கொடியே ஆதி ரிஷிகள் தொழும் அற்புத மணிக்கொடி ஆனந்தமாகவே ஞானமதை ஊட்டி, மக்கள் சமயநிலை மனதிலுணரச் செய்து வீரர்கள் யாவர்க்கும் வெற்றிகள் ஈந்தநல் (காவி நிறக்கொடியே சுதந்திரமுடனே நம் ஸ்வதர்மம் காப்பாற்றினாய் வெல்க அறம் என்றே வீரமுழக்கம் செய் (காவி நிறக்கொடியே பாடல் பட்டியல் **********************************************************************************************

காவிக்கொடியே எம் குருதேவா

காவிக்கொடியே எம் குருதேவா காணிக்கை ஆனோம் உன் தாளில் எம் வாழ்வின் மையம் நீயாகி எம் நெஞ்சக் கோவில் கொண்டுவிடு உன் நிறத்தில் தியாகம் உறைந்திடுது உன் பக்தியில் நாடே இணைந்திடுது நீ பட்டொளி வீசிப் பறக்கையிலே நாட்டன்பாம் தீயும் ஓங்கிடுது உன் வரலாறெல்லாம் வீரமயம் உன் வாழ்வில் எண்ணில போர் கண்டாய் போரில் பலியானோர் பல கோடி பலிதானம் அல்ல பூஜையது முனிவர் ரிஷி ஞானியர் தன்மானம் முதற் பூஜை என்றும் உனக்கேதான் தூய்மை ஒழுக்கத்தின் கருவூலம் தெய்வீகப் பண்பின் வடிவம் நீ பொற்காலம் நிறுவிடும் வேட்கையுடன் பக்தர்கள் உன் கீழ் அணி திரண்டோம் உடல் மனம் பொருளெல்லாம் உன் உடைமை உன் பணிக்கே வாழ அருள் தாராய் பாடல் பட்டியல் **********************************************************************************************

கூடுவோமே ஒன்றாய்க் கூடுவோமே

கூடுவோமே ஒன்றாய்க் கூடுவோமே ஹிந்து சமூகத்தைப் பலம் பெறச் செய்யவே எங்கும் பரந்த இந்நாட்டினிலே நாம் ஒன்று என்பதைப் பறை சாற்றிடவே ஹிந்து என்ற மனப்பான்மை ஓங்கிடவே நம் கோழைத்தனங்கள் முற்றும் நீங்கிடவே வீரர்களாக நாம் பிறந்துள்ளோம் நாம் வெற்றியே அடைவோம் என்று உறுதி கொள்ளுவோம் இனி நாம் எவருக்கும் அஞ்சப்போவதில்லையே இதை எடுத்துக்காட்ட நாம் ஒன்றாய் சேருவோமே பாடல் பட்டியல் **********************************************************************************************

கேசவ​னை நாம் வணங்கு​வோம்

 கேசவனை நாம் வணங்குவோம் அவர் பாதையிலே நாமும் செல்லுவோம் லக்ஷியத்தை எய்து காட்டுவோம் நாம் நிச்சயமாய் வெற்றி நாட்டுவோம். சிறுவயதில் சிங்கமென சீறிப் பாய்ந்தவர் சிறுமதியோன் வெள்ளையனைக் கலங்க வைத்தவர் நோய்தீர்க்கும் மருத்துவத்தில் பட்டம் பெற்றவர் தாய்நாட்டின் நோய்தீர்க்க சங்கம் தந்தவர் (அந்த கேசவனை) ஹிந்துக்களே ஒன்றுபட்டு வாழுவோம் என்றார் ஒன்றுபட்டு வாழ நல்ல வழிமுறை கண்டார் பேட்டை தோறும் ஒரு மணி நாம் சந்திக்க வேண்டும் சந்தித்து நாம் நாட்டு நலன் சிந்திக்க வேண்டும் (அந்த கேசவனை) மனிதர்களை உருவாக்க வழிமுறை ஒன்றே ஒருமணி நேரம் பயிற்சி பெற வாருங்கள் இன்றே இனியேனும் ஒன்றுபட்டு வாழ்ந்திட வேண்டும் இந்தநாடு ஹிந்துநாடு உயர்ந்திட வேண்டும். (அந்த கேசவனை) பாடல் பட்டியல் **********************************************************************************************

கேசவர் தம் குரலழைக்குது

கேசவர் தம் குரலழைக்குது பாச பந்தமுடைத்து வருவோம் வறுமையால் இந்நாடு வாடுது சிறுமையால் சிரம் கவிழ்ந்திறங்குது எந்த நாடிது என்ன நிலை இது என்று வாழ்வும் வளமும் ஓங்கும் எங்கு சிந்து எங்கு வங்கம் எங்கெம் முந்தையர் வாழ்ந்த பூமி எவரதில் அரசோச்சுகின்றார் என்று அதனை மீண்டும் பெறுவோம் அமர எங்கள் பெருவினத்தினை அழித்து உண்டுயிர் வாழ்பவர் யார் தாயைப் பிரிந்த சேய்களெங்கே என்று அவர் நம் வீடு சேர்வர் எங்கு அரியணை எங்கு மணிமுடி எங்கு செங்கோல் அணிகள் எங்கே வணங்கிப் பணிந்த உலகு எங்கே என்று அதனை மீண்டும் காண்போம் துயரில் நாடு தவிக்கும் போது எங்கு இன்பம் என்ன வாழ்வு நாடு வாழத் தம் வாழ்வை ஈந்திட உறுதி பூண்ட நல் மைந்தர் எங்கே பாடல் பட்டியல் **********************************************************************************************

கேசவர் மாதவர் காட்டிய வழியில்

கேசவர் மாதவர் காட்டிய வழியில் சென்றிடும் வீரர் யார்? குருவாய் பாரதம் உயர்ந்திட நாளும் வாழ்ந்திடும் ஸ்வயம்சேவகனே ................(2) ஒரு நாள் ஒரு மணி நேரம் ஓரிடம் ஒன்றாய் கூடிடுவோம் உடல் மனம் அறிவு உயர்ந்திட பலவகை பயிற்சிகள் பயின்றிடுவோம் உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதமில்லாது ஊரை இணைத்திடுவோம் குருவாம் காவிக் கொடியின் கீழே ப்ரார்த்தனை புரிந்திடுவோம் - தினமும் ப்ரார்த்தனை புரிந்திடுவோம்! (கேசவர் மாதவர்...) உள்ளம் உரை செயல் மூன்றும் ஒன்றாய் விளங்கிட வாழ்ந்திடுவோம் ஒரு மணி நேர பண்புகள் வாழ்வில் பளிச்சிட செய்திடுவோம் பதவி புகழ் தரும் போதையில் என்றும் சிக்கிடவே மாட்டோம் பொது பணத்தின் வரவு செலவுகளை நாம் கருத்துடன் கணித்திடுவோம் - வாழ்வில் கருத்திடன் கணித்திடுவோம்! (கேசவர் மாதவர்...) நல்லவர் எங்கும் உள்ளனர் என்பதை நினைவில் கொண்டிடுவோம் நல்லவர் தம்முடன் நெருங்கி இணைந்திடும் ஆற்றல் வளர்த்திடுவோம் கிராமம் மாற்றம் முன்னேற்றம் நாம் கிராம ராஜ்யமே ராமராஜ்யமாம் காட்சியைக் கண்டிடுவோம் - நல்ல காட்சியைக் கண்டிடுவோம்! (கேசவர் மாதவர்...) தேசம் தெய்வம் இருகண்களெனப் போற்றி மகிழ்ந்திடுவோம் ஹிந்து என்ற சொல் அர்த்தமுள்ளதாய் ஆகிட வாழ்ந்திடுவோம் முறையாய் இவ்விதம் நடந்திட முனைபவர் அதிகம் வளர்த்திடுவோம் குறையேதும் கூறா நிறைமனம் கொள்ளும் சக்தியை வேண்டிடுவோம் - உயர்த்தும் சக்தியை வேண்டிடுவோம்! (கேசவர் மாதவர்...) பாடல் பட்டியல் **********************************************************************************************

கேசவன் பிறந்தான் நவ நாயகன் பிறந்தான்

கேசவன் பிறந்தான் நவ நாயகன் பிறந்தான் மங்கலப் புத்தாண்டு நல்ல நாளிலே (கேசவன்) சின்னஞ்சிறு வயதினிலே பள்ளி செல்லும் பருவத்திலே வெள்ளையரசி மகுடம் தரித்த நாளும் வந்தது நாளும் வந்தது. அன்றளித்த இனிப்பதனை வீசி எறிந்த அவனுள்ளம் தன்மான மிழந்த மக்கள் நிலை கண்டு வெகுண்டது சிந்தனை செய்தான் அவன் சங்கமளித்தான் தன்னை உணர்ந்த பாரதமும் எழுந்திடச் செய்தான் (கேசவன்) பள்ளி இறுதி ஆண்டினிலே பள்ளிதனைப் பார்வையிட ஆங்கில அதிகாரியவன் வருகை தந்தனன் வருகை தந்தனன் அவனை வரவேற்றிடவே மாணவரை ஒன்றுகூட்டி 'வந்தே மாதர' முழக்க மிட்டு உணர்ச்சி தந்தனன் ஒருமையுணர்ந்தே அதில் பெருமிதம் கொண்டே ஒருங்கிணைந்த பாரதமும் விளங்கிடச் செய்தான் (கேசவன்) ஹிந்து என்று சொல்வதற்கு அஞ்சிக் கெஞ்சி வாழ்ந்தபோது இந்த நாடு ஹிந்து நாடு என்று சொன்னவன் என்று சொன்னவன் ஹிந்து மக்கள் எந்த நாளும் ஒன்றுபட்டு வாழ்வதற்கு சங்கம் என்னும் அருமருந்தை நமக்குத் தந்தவர் வாருங்கள் ஒன்றாய் இதில் சேருங்கள் இன்றே சீருடன் நம்நாடு இனி விளங்கிடச் செய்வோம் (கேசவன்) பாடல் பட்டியல் **********************************************************************************************

கையினில் சூலமும் வாளும் ஏந்தி சக்தி எழுந்திட்டாள்

கையினில் சூலமும் வாளும் ஏந்தி சக்தி எழுந்திட்டாள் பாரதனே இனி அஞ்சிட வேண்டாம் புதுயுகம் கண்டிடுவோம் (கையினில்) தருமம் தாழ்ந்து அழிந்திடும் போதில் அன்னை கோலம் கொள்வாள் தரணி நடுங்கிடத் தாண்டவ மாடி தீயோர் மாய்ந்திடச் சிரிப்பாள் அசுர புரியினை அழித்தொழித்தே அவள் ஆண்மை காட்டிடுவாள் (கையினில்) ராமனின் வில்லில் தோன்றிய அன்னை வீமனை ஆட்கொண்டிடுவாள் அர்ச்சுனன் வில்லில் பாண்டவர் படையில் தோன்றியே தருமம் காப்பாள் வானரரும் மாவீரர் ஆகிட வல்லமை தந்திடுவாள் (கையினில்) இமயமும் குமரியும் ஒன்று கூடிட சக்தி எழுந்தது காணீர் பொங்கும் கடல் போல் காளையர் திரண்டிட பகைப் படை நடுங்குது காணீர் ஈடிலாத நம் அன்னை எழுந்தாள் இன்மை யொழித்திடுவாள் (கையினில்) பாடல் பட்டியல் **********************************************************************************************

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் - காவிக் கொடியிதைக் கொண்டாடுவோம் பண்பாடுவோம் நாம் பண்பாடுவோம் - நம் பாவன குருவின் பண்பாடுவோம் உடல் மனம் பொருள் தந்து கொண்டாடுவோம் உலகின் குருவைக் கொண்டாடுவோம் பண்பால் அறத்தால் அறிவால் உயர்ந்த லக்ஷிய வடிவைக் கொண்டாடுவோம் (கொண்டாடுவோம்) ராமன் கண்ணன் சேரன் சோழன் பாண்டியன் தேரில் பறந்த கொடியிது கோவில்களிலும் திருத்தேர் மீதும் காணும் கொடியிதைக் கொண்டாடுவோம் (கொண்டாடுவோம்) நாதமும் வேதமும் பாரெங்கும் பரவ ஞானம் தரும் கொடி கொண்டாடுவோம் தியாகம் தூய்மை தொண்டினை உணர்த்தும் யாகச் சுடரிதைக் கொண்டாடுவோம் (கொண்டாடுவோம்) பாடல் பட்டியல் **********************************************************************************************

கொள்கை வீரர் காளையர் அணிதிரண்டது

கொள்கை வீரர் காளையர் அணிதிரண்டது ஹிந்து பூமியை உயர்த்த ஹிந்து மைந்தரை இணைக்க கங்கணம் அணிந்தது அணிதிரண்டது இன்சொல்லே ஆயுதம் அன்புள்ளம் கேடயம் அருந்தியாகம் கவசமாம் சுயநலத்தையும் பிளவு நஞ்சையும் களைபறித்திடும் அதர்ம சக்தியை அழித்து தர்ம சக்தியை வளர்த்து தேசபக்தி ஜோதியை ஏற்றிவைத்திடும் (கொள்கை) காண்டீபம் ஏந்தியே ஞான தீபம் ஏந்தியே உலகரசு கண்டவர் ஆணை வந்தது குரலெழுந்தது ஆசி தந்தது அஞ்சிடாத நெஞ்சுடன் கர்மயோக வீறுடன் திக்விஜயம் செய்திடும் வெற்றி கண்டிடும் (கொள்கை) ஒரு தலைவன் ஆணையில் ஒரு கொடியின் கீழிலே ஒரு முகமாய் நின்றிடும் கடுமெதிர்ப்பிலும் நிராசை நிலையிலும் விரைந்து சென்றிடும் கடமையுணர்வோங்கிடும் பகைமைகள் நீங்கிடும் ஒரு குடும்பமாகியே நாடெழுந்திடும் கொள்கை) பாடல் பட்டியல் **********************************************************************************************

சக்தியைப் போற்றி சக்தியைப் போற்றி

சக்தியைப் போற்றி சக்தியைப் போற்றி சக்தியைப் போற்றி வணங்கிடுவோமே சக்தியின் தாளில் அர்ப்பணமாவோம் சக்தியின் வடிவம் ஆகிடுவோமே ராவணன் தலைகள் பத்தே ஆயினும் ராமனின் தலையும் ஒன்றே ஆயினும் ராவணன் மாய்ந்தான் ராமனே வென்றான் தர்மம் அன்றும் வென்றது கண்டோம் நூறு கெளரவர் எதிரே நிற்க ஐந்தே பாண்டவர் போர் புரிந்தாலும் பாண்டவர் வென்றே கெளரவர் தோற்க தர்மம் வென்றதை தரணியும் கண்டது மக்களைத் திரட்டி சக்தியை எழுப்பி மக்கள் வாழ்வில் மங்கலம் பெருகிட நல்லவர் வல்லவர் ஆகிடச் செய்தே அறவழி உலகம் அமைத்திடுவோமே பாடல் பட்டியல் **********************************************************************************************

சங்க ​மென்னும் கங்​கை யூற்று

சங்க மென்னும் கங்கை யூற்று எங்கும் பொங்கிட சபதமேற்போம் தூய்மை யூட்டும் புனித நீரிது துயர் துடைக்கும் அமுதவாரி பாலை நிலத்தை சோலையாக்கும் பாலும் தேனும் ஓடவைக்கும் அன்பு வெள்ளம் பெருகவைக்கும் இன்ப வாழ்வைப் பாதுகாக்கும் (சங்க) கங்கை தோன்றல் எளிது அல்ல கடுந் தவத்தில் முனைய வேண்டும் கண்டிராத இடர்கள் சாடும் கண்கலக்கும் மோகம் மூடும் பகீரதனின் நினைவு உந்த பாய்ந்து செல்லும் தீரராவோம் (சங்க) சங்க பணிக்கே நேரமெல்லாம் சங்க எண்ணம் சிந்தையெல்லாம் கடுமுழைப்பின் வலிமையாலே கடுமெதிர்ப்பைக் கரையவைப்போம் சங்க கங்கை அவதரிக்க சர்வ தியாகம் செய்துயர்வோம் (சங்க) தேவை இதனை உணர்ந்து விட்டோம் தேவை யாகும் விலை கொடுப்போம் எதிர்ப்பின் வலிமை கண்டு கொண்டோம் எங்கள் கையே ஓங்கி நிற்கும் வெற்றி கண்டே தீர வேண்டும் வீரர் எழுந்தோம் சூளுரைத்தே! (சங்க) பாடல் பட்டியல் **********************************************************************************************

சங்க கங்​கை ​பெருகிப் பாயுது

சங்க கங்கை பெருகிப் பாயுது நவ பகீரதன் புகழ்பரப்பி வெற்றி கீதம் நிதமும் பாடுது மலைகள் பாறைகள் தடைபிளந்தே சின்னஞ்சிறிய அருவி பிறந்தது அச்சமூட்டும் குகைகள் வழியே அச்சமின்றிப் பாய்ந்து வந்தது சொர்க்க கங்கை விரிந்து பரந்தே பெருங்கடல் என வடிவெடுத்தது (சங்க) கொடிய தடைகள் சுவர்கள் எதுவும் வழிமறித்திட இயலவில்லை. சீறும் சிவனின் சடைமுடியிலும் சிக்கி மறைந்தே மாயவில்லை ஜன்னு ரிஷியின் செவியின் வழியே ஜான்னவி அவள் பாய்ந்து வந்தாள் (சங்க) புனித கங்கை மகிமையாலே வளம் கொழிக்கும் நாடனைத்தும் புண்ய பாரத அன்னை மேனியை அலங்கரிக்குது வண்ணக் கோலம் பாலைவனமாய் வெற்று நிலமாய் சில இடங்கள் தவிக்கலாமோ? (சங்க) பயணம் இன்னும் முடியவில்லை பாதை நடுவில் ஓய்வு ஏனோ? லட்சியக் கடல் தனில் கலக்கத் தயங்கி மயங்கி நிற்பதேனோ? இடையறாத கடுந்தவத்தின் காவியத்தில் வரிகளாவோம் (சங்க) பாடல் பட்டியல் **********************************************************************************************

சங்க சக்தி​யை நான் வளர்ப்​பே​னென

சங்க சக்தியை நான் வளர்ப்பேனென முன் வருவோர் வேண்டும் மாபெரும் தியாகியர் படை வேண்டும். புத்தனைப்போலே பாசம் விடுத்தே சுகனைப் போலே போகம் வெறுத்தே நாட்டுத் தொண்டிலே பித்தராகிடும் பக்தர்தம் படை வேண்டும் (மாபெரும்) எதிர்ப்பு வெள்ளம் கண்டஞ்சாது எதிர்த்து நீந்தும் தீரர் வேண்டும் வெற்றி தோல்வியில் வீழா துழைக்கும் வீரர்தம் படை வேண்டும் (மாபெரும்) பகீரதன் போல் தளராதுழைத்து பிரதாபனைப் போல் துன்பம் ஏற்று சிவராஜன்போல் வெற்றி கண்டிடும் சாதகர் படை வேண்டும் (மாபெரும்) சொல்லின் இனிமையால் ஒழுக்கத் துாய்மையால் உள்ளத் தெரியும் லக்ஷியத் தீயால் நாட்டு மக்களைக் கூட்டி இணைக்கும் நிபுணர் தம்படை வேண்டும் (மாபெரும்) சோதனைக் காலம் வந்தது இன்று வாதனை மிகுந்தே நாடழைக்குது எவ்விலை கொடுத்தும் அன்னையை மீட்கும் செல்வர்தம் படை வேண்டும். (மாபெரும்) பாடல் பட்டியல் **********************************************************************************************

சங்க நெறியினில் கடுகி ஏகும் நாம்

( " மாத்ரு மந்திரமே " என்ற மெட்டு ) சங்க நெறியினில் கடுகி ஏகும் நாம் கர்ம வீரராய் ஆகுவோம் அன்னை பாரத தேவியின் திரு அடிதனில் மலர் ஆகுவோம் நாம் அன்னையை அரியணையில் அமர்த்திட ஆத்ம அர்ப்பணம் செய்குவோம் கர்ம கங்கணம் பூணுவோம் முள்ளும் கல்லும் நிறைந்த பாதையை மலரணை யென கொள்ளுவோம் நாம் புன்முறுவலுடன் தீயில் குதித்தே புனித பலியாய் ஆகுவோம் புண்ய பூமியை உயர்த்துவோம் அன்னையின் கைக்கருவியாகி ஆக்கினை தனை பூர்த்தி செய்வோம் அன்னை காட்டும் நெறியில் ஏகி அமர பாரதம் ஆக்குவோம் அண்டம் வணங்கிடச் செய்குவோம் வீணில் கழிக்க ஓர் கணமும் இல்லை விடுவோம் பொல்லாச் சோம்பரினையே அன்னை பாரதி அலறிடும் குரல் கேட்கும் நாமும் செவிடரோ அருமை மைந்தர் அல்லவோ வீரர் கண்ட கனவுகளை நம் வாழ்வில் நனவாய் ஆக்குவோம் நாம் வெற்றி முழக்கம் விண்ணை முட்டிட காவிக் கொடியினை ஏற்றுவோம் கண்மணி எனப் போற்றுவோம் பாடல் பட்டியல் **********************************************************************************************

சங்க முரசு முழங்கிடுது

சங்க முரசு முழங்கிடுது நம்மைக் கூவி யழைத்திடுது ஹிந்து மக்கள் நாம் இங்கு கூடுவோம் சக்தி படைத்தோர் ஆவோம் உறவினர் போல அன்பு கொள்ளுவோம் ஒற்றுமை மந்திரம் ஒலிப்போம் (சங்க) அனுதினம் கூடி ஓடி யாடுவோம் அன்புடன் பாடி மகிழ்வோம் காசு பணங்களைக் கருதிடாத நம் சங்கப் பணி மிக எளிது (சங்க) நாட்டை உயர்த்திப் பண்பினைக் காப்பது நம் முயிர் லட்சியமாம் சங்க முறையிது ஒன்றே முறையாம் சர்வமுமி தற்களிப்போம் (சங்க) பாடல் பட்டியல் **********************************************************************************************

சங்கம் எனும் கங்கை நீராடிவிட்டு

சங்கம் எனும் கங்கை நீராடிவிட்டு ஜன தேவனைக் காணப் பயணம் தொடர்ந்தோம் பக்திப் பெருக்கோடு நாட்டுக் குழைக்க சக்தித் துடிப்போடு பயணம் தொடர்ந்தோம் உயிர்த்தோழர் நட்பில் வீட்டை மறந்தோம் உயிரொன்று உடல்நூறு என்றே மகிழ்ந்தோம் நிமிடம் போல் நாட்கள் பறந்தோடக் கண்டோம் சங்கத்தின் அமுதத்தை அள்ளிக் குடித்தோம் நானாக வந்திங்கு நாமாக ஆனோம் சங்கக் கடல் தன்னில் துளியாக ஆனோம் புனிதப் பெரும் நாள் ஊரேகும் இந்நாள் புதுவாழ்வு விரதத்தை ஏற்கின்ற பொன்னாள் சங்கத் திருக்கோவில் கட்டிப் படைக்க இனி இந்நாடே நம் கர்மபூமி நாட்டோர் அதில் வந்து பக்தர்களாகி நாட்டுக் குழைக்கின்ற தொண்டர்க ளாவர் வீடேக மனமில்லை உறவைப் பிரிந்து பலகற்றும் பலகேட்டும் அன்பில் திளைத்தோம் வளர்த்தாக வேண்டும் சங்கத்தை ஊரில் வேலை அழைக்கின்றதால் போகவேண்டும் முதியோர்கள் ஆசான்கள் நல்லாசி வேண்டும் மோகத்தில் பாசத்தில் சிக்காது வாழ்வோம் பகைவர் கணைகள் எமை வீழ்த்திடாது வெல்லும் வரை நாங்கள் அயரா துழைப்போம் பாடல் பட்டியல் **********************************************************************************************

சங்கமேதான் சக்தியே சங்கமின்றேல் பங்கமே

சங்கமேதான் சக்தியே; சங்கமின்றேல் பங்கமே சங்கமென்றும் ஓங்கவே பங்கம் முற்றும் நீங்கவே சங்கத்தில் நாம் சேருவோம் (சங்கமேதான்) ஏற்றி பயம் ஓட்டியே, தேற்றி ஒன்றாய்க் கூட்டியே முற்றும் வீரம் காட்டியே, வெற்றிக் கொடியை நாட்டுவோம் ஒற்றுமையாய் கூடுவோம் (சங்கமேதான்) பாருலகம் தன்னதில், பாரத நாட்டதன் பந்தமும் அகற்றியே; சந்ததம் கொண்டாடுவோம் சந்ததமும் பாடுவோம் (சங்கமேதான்) பாடல் பட்டியல் **********************************************************************************************

சங்கமொன்றே சக்தி என்று சிங்கநாதம் செய்குவோம்

சங்கமொன்றே சக்தி என்று சிங்கநாதம் செய்குவோம் எங்குமே இதன் ஜோதி கொண்டே ஏறுபோல ஏகுவோம் களையிழந்த நம் நாட்டினிலே கதிரொளி யூட்டும் சக்தியிது தம்மை மறந்தே துயிலுறுவோரைத் தட்டி எழுப்பும் சக்தியிது தம்மை யுணர்ந்தே ஈடிணையில்லாத் தீரராக்கிடும் சக்தியிது எங்குமே இதன் ஜோதிகொண்டே ஏறுபோல ஏகுவோம் பகீரதன் போல் தவம் செய்தே பாரதநாட்டின் அணுதோறும் புத்துயிரூட்டிடக் கங்கணம் கொண்ட கர்ம வீரரின் சக்தியிது நந்தவனமென பாரத நாட்டை ஆக்கிட வந்த சக்தியிது எங்குமே இதன் ஜோதி கொண்டே ஏறுபோல ஏகுவோம் முப்பது கோடி மைந்தர்களின் முனைந்த தோள்களின் சக்தியிது அறுபது கோடி கைகள்கொண்ட அமரபுருஷனின் சக்தியிது ஒன்றே உள்ளம் லட்சியமொன்றே என்று துணிந்த சக்தியிது எங்குமே இதன் ஜோதிகொண்டே ஏறுபோல ஏகுவோம் விலங்கு போல வாழ்கின்றார் வையக மாந்தர் எல்லோரும் வேதசக்தியும் வீரசக்தியும் வேண்டும் வேண்டும் விரைவினிலே அண்டமெங்குமே சக்தி வலிமையால் அரசு நாட்டிடும் சக்தியிது எங்குமே இதன் ஜோதிகொண்டே ஏறுபோல ஏகுவோம் சோதரரே நாம் கூடிடுவோம் சக்தியின் புகழைப் பாடிடுவோம் சக்தியின் தாளில் அர்ப்பணமாகி சக்தியின் வடிவாய் ஆகிடுவோம் திக்கெட்டிலுமே கொடிநாட்டிடுவோம் தாயின் சேவை செய்திடுவோம் எங்குமே இதன் ஜோதிகொண்டே ஏறுபோல ஏகுவோம் பாடல் பட்டியல் **********************************************************************************************

சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி

சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி கிராம மனைத்தும் தவ பூமி சிறுமிய ரெல்லாம் தேவியின் வடிவம் சிறுவ ரனைவரும் ராமனே சிறுவ ரனைவரும் ராமனே கோயிலைப்போலே உடல்கள் புனிதம் மாந்தரனைவரும் உபகாரி சிங்கத்துடனே விளையாடிடுவோம் ஆவினம் எங்கள் அன்புத்தாய் காலையில் ஆலய மணிகள் முழங்கும் கிளிகள் கண்ணன் பெயர் பாடும் (சிறுமியரெல்லாம்) உழைப்பால் விதியை மாற்றும் மண்ணிது உழைப்பின் நோக்கம் பொது நலமே தியாகமும் தவமும் கவிகள் பாட்டின் கருவாய் அமையும் நாடிது கங்கை போலே துாய ஞானம் ஜீவநதியெனப் பாய்ந்திடும் (சிறுமியரெல்லாம்) போர்க்களந் தனிலே எங்கள் வீரர் புனித கீதையை ஓதுவர் ஏர்முனையின் கீழ் தவழ்ந்து வருவாள் எங்கள் அன்னை சீதையே வாழ்வின் முடிவாய் விளங்குவதிங்கு இறைவன் திருவடி நீழலே (சிறுமியரெல்லாம்) பாடல் பட்டியல் **********************************************************************************************

சபதம் சபதம் வாழ்வின் ஜீவன்

சபதம் சபதம் வாழ்வின் ஜீவன் பீஷ்ம சபதம் செய்துயர்வோம் சபதம் ஏற்றே சாதனை புரிந்தால் சுவையும் கூடும் வாழ்வினிலே ஒன்று பட்டாலே உண்டு வாழ்வு உண்மை இதனை உணர்ந்த ஹிந்து உலகில் தலைமை ஏற்கும் காட்சி காண வேண்டி சபதமேற்போம் (சபதமேற்றே) வளங்கள் பலவும் மலிந்த நாடு வறுமை நிலையில் வாடும் விந்தை சுதேசியத்தால் சுபிட்சமான நாடாய் ஆகிட சபதமேற்போம் (சபதமேற்றே) சபதமேற்றல் கடினமன்று நிறைவேற்றுவதோ எளிது அன்று ஹரிச்சந்திரன் பகீரதன் போல் பூர்த்தி செய்வோம் விரதம் இதனை (சபதமேற்றே) பாடல் பட்டியல் **********************************************************************************************

சிவாஜி மன்ன! நின் நி​னைவு வீறு தந்திடும்

சிவாஜி மன்ன! நின் நினைவு வீறு தந்திடும் சிவாஜி மன்ன! நின் நினைவு வீறு தந்திடும் அபார சக்திவாய்ந்த வீரர் தன்னலத்தில் மூழ்கினர் அன்னியன் கீழ் அடிமையாகி அஞ்சிக்கெஞ்சி வாழ்ந்தனர் அச்சம் போக்கி சுதந்திரத்தின் வேட்கை தந்தனை (சிவாஜி) அன்னையர் தம் கற்பிழந்து அவலமாகி நின்றனர் ஆலயத்தின் அழிவு கண்டு உள்ளம் நொந்து வாடினர் ஆண்மையூட்டி சிம்மமாக்கி இழிவகற்றினை (சிவாஜி) சிறு படையால் பகைப்படையை புழுதியாக மாற்றினை சிறுவரை மாவீர ராக்கி சீரிய நாடெழுப்பினை சீறிப்பாயும் ராம பாண மாக வந்தனை (சிவாஜி) ஹிந்துவின் உறக்கம் நீக்கி மெய்யுணர் வளித்தனை சொந்த அரசு நிறுவிக் காட்டி நெஞ்சு விம்ம வைத்தனை தர்ம சக்தி வென்று தீரும் என்று ணர்த்தினை (சிவாஜி) ஒற்றையாக உறுதி பூண்டு காவிக் கொடியுயர்த்தினை வெற்றிவேலைப் போல தாக்கி இடர்மலை தகர்த்தனை வெற்றி வாகை சூடி வீர வாழ்வு வாழ்ந்தனை (சிவாஜி) பாடல் பட்டியல் **********************************************************************************************

சிவாஜி மன்னன் ​பெரு​மை​யை நா​மே மகிழ்ந்து பாடிடு​வோம்

சிவாஜிமன்னன் பெருமையை நாமே மகிழ்ந்து பாடிடுவோம் வீர சிவாஜி வரலாற்றை நாம் வியந்து போற்றிடுவோம் போற்றி வீரம் வளர்த்திடுவோம் நாட்டில் வீரம் வளர்த்திடுவோம் அரக்கர் கூட்டத்தின் அடக்குமுறைகளால் மக்கள் அரண்ட காலம் மங்கையரும் தம் மானமிழந்தே கதறித் துடித்த காலம் ஆலயங்களும் கயவர் கைகளால் சிதைந்து அழிந்தனவே சீறி எழுந்தே சிறுமை ஒழித்தே தர்மம் காத்திட்டான் சிவாஜி மன்னன் பகவாக் கொடியைப் பாரிலுயர்த்திட்டான் பகவாக் கொடியை உயர்த்திட்டான் (சிவாஜி மன்னன்) பாமரர் பாலர் அனைவரையும் அவன் வீரராக்கிவிட்டான் தேசபக்தியும் கடமை உணர்வும் ஊட்டி வளர்த்துவிட்டான் மாமலை போன்ற அரக்கர் படையினை வென்றது நம் படையே அஞ்சிக் கிடந்த ஹிந்துக்களுமே தலை நிமிர்ந்து நின்றார் தர்மம் என்றும் வென்றே தீரும் சத்தியம் நிலைத்ததுவே பாரில் சத்தியம் நிலைத்ததுவே (சிவாஜி மன்னன்) பாடல் பட்டியல் **********************************************************************************************

சும்மாவா வந்தது

சும்மாவா வந்தது? சுதந்திரம் என்பது சும்மாவா வந்தது? எத்தனை எத்தனைத் தடியடியைத் தாங்கினர் எத்தனை எத்தனை செக்கிழுத்து வாடினர் துாக்குமேடை ஏறிநின்ற காளையர்கள் எத்தனை தாக்குகின்ற குண்டினாலே உயிரிழந்தோர் எத்தனை (சும்மாவா) ஆசிகூறி வாழ்த்திடவே அஞ்சிடுவார் பெரியோர் மாசுபேசி மயக்கிடவே முனைந்துநிற்கும் சுற்றம் இருந்தபோதும் லக்ஷியத்தில் வீறுநடைபோட்டு இன்னுயிரைத் தந்தவர்கள் எத்தனையோ எத்தனை ! (சும்மாவா) போரிலே இறங்கிவிட்டால் இன்னல்சூழும் தெரியும் பெற்றதாய் பசித்திருப்பாள் பிள்ளைக்கது புரியும் அன்னயைர்க்கு அன்னையான பாரதியின் துயர்துடைக்க தன்னைத்தானே அழித்துக்கொண்டோர் எத்தனையோ எத்தனை (சும்மாவா) பாடல் பட்டியல் **********************************************************************************************

சே​வை ஒரு ​வேள்வி நாமும் ஆஹுதியாய் ஆகு​வோம்

சேவை ஒரு வேள்வி நாமும் ஆஹுதியாய் ஆகுவோம் லட்சியமாம் பெருங்கடலில் நதிகள் போல சேருவோம் நதிகள் போல சேருவோம் மக்கள்நலம் காப்பதே தேசகீத சாரமே தொண்டுவிரதம் பூண்டோர்தான் பணியின் ஆணி வேர்களே. (சேவைஒரு..) ஏற்றத்தாழ்வு எண்ணம்நீக்கி எல்லோரும் வாழுவோம் உடன்பிறந்தோர் உணர்வாலே விருப்புவெறுப்பு வீழவே திசையெலாம்பிர காசமாக ஞானதீபம் ஏற்றுவோம் லட்சியமாம் சிகரம் அடைய வேகமாய் முன்னேறுவோம் (சேவைஒரு..) அரும்பு விரிந்து சிரிப்பதுபோல் அழகாகப் பழகுவோம் அலையலையாய் இடைஞ்சலா அவைதாண்டி ஏகுவோம் புகழ்ச்சி இகழ்ச்சி வெற்றிதோல்வி ஊக்கம்ஏக்கம் சரிசமம் பணிமீதே நமக்கென்றும் சிநேஹமான கரிசனம் (சேவைஒரு..) நலிந்தோர்க்குப் பணிவிடை, இறைவன் பூஜை தத்துவம் வார்த்தை ஜாலம் அல்ல இது வாழ்நாளின் பெருந்தவம் சிந்தை சொல்லில் செயலிலே என்றும் இசைவு பூணுவோம் இந்த உலகு வணங்குகின்ற இனியதேசம் காணுவோம் (சேவைஒரு..) ********************************************************************************************** பாடல் பட்டியல் **********************************************************************************************