ப முதல் போ வரை

பாடல் பட்டியல்

பகவத்தின் ஜோதி ஸ்வரூபம் பகவத்வஜத்தினைப் பணிவோம் அது பகவாக் கொடி இதுபார் பண்பாட்டுப் பள்ளியில் பயில்​வோர்க​ளே பணிவுடன் ராஷ்ட்ர ஆராத​னை ​செய்​வோம் பரமபூஜிதமான பகவாக்கொடி பரிபூரண ​சே​வை புரிந்திட யாவரும் வாரீர் பாதத்தி​​லே த​​லை​வைத்​தோம் தா​யே தா​யே பாரத ​தேச மகான்கள் பிறந்த பரம்ப​ரை ​தோன்றிய பாலக​ரே பாரத அன்னையின் கலிதீர்த்திடவே பாரத தேவியின் சீரருள் கோரி பாலகர் கூடுகிறோம் பாரத நாட்​டைப் பாரில் உயர்த்திட துறவிகளாய் நாம் பாரத நாட்​டைப் பாரிலுயர்த்திட ஒன்றுபடு ஒன்றுபடு பாரத நாட்டின் ​பெரு​மையும் வலி​மையும் பாருலகறியச் ​ பாரத நாட்டின் வரலாற்றினி​லே பாரத நாட்டைப் பாடுவோமே பாரத நாடிது திருக்​கோயில் பாரத நாடே பார்புகழ் நாடே பாரத மண்ணில் பிறந்தது ​பேறு என்​றே உணர்ந்திடு​வோம் பாரதத் தாய் நெற்றியிலே பாரதத்தா​யே பாரதத்தா​யே பாரதத்தா​யே பாரதத்தாயை பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம் பாரதத்தின் வீரரே வீர தீர சூரரே பாரதத்து மக்களின்று ஒன்று கூடுவோ​ம் பாரதத்தின் ஒரு​மைகாக்க வீரர் நாமும் கூடு​வோம் பாரதநாடு என்னுடை நாடு, என்று தினம் தினம் நீ அதைப் பாடு பாரதமெங்கள் ஜனன பூமியாம் பாரதமே ஒரு கணமும் உன்னை மறந்தினிமேல் இருப்போமோ பாரதீஸ்வரி பாபநாசினி பாரில் எல்லா தேசங்களில் பாரின் பண்பு கீத​மே ஹிந்து வாழ்வின் சார​மே பாரினில் சிறந்த பாவனமான புகழுறும் பாரத நாடே பாரினில் புகழ்வீரர் பலரும் பணிந்திட்ட நம் பாவன குருவே பூஜை ஏற்றிடு புத்துணர்வூட்டும் கர்ஜ​னை ​செய்​தே புதிய பாரதம் தலையெடுக்க புது யுகத்​தை நிறுவ எங்கும் புத்துணர் ​வெழுப்பு​வோம் புது வரலாற்றி​னைப் ப​டைக்கின்றான் புனித நந்நாளில் இன்று பூஜை செய்கிறோம் பொங்கல் திருநாள் தந்திடும் மகிழ்ச்சி பொங்கல் திருநாளும் வந்த​தே போற்று​வோம் ​போற்று​வோம் சக்தி​யைப் ​போற்று​வோம் ********************************************************************************************** பாடல் பட்டியல் **********************************************************************************************

பகவத்தின் ஜோதி ஸ்வரூபம்

பகவத்தின் ஜோதி ஸ்வரூபம் ஜெகமெங்கும் ஜொலிக்கும் ப்ரகாசம் மாதவர் வணங்கிடப் பொலிந்தாய் பல மன்னவர் பணிசெய்ய உயர்ந்தாய் நீ மானிட வாழ்வின் விகாசம் செந்நிற ரண களமதிலே பலர் சிதைந்திட கவந்தங்கள் நடஞ்செய் ஜெயகாளியின் உக்ர ஸ்வரூபம் அர்ஜூனன் ரதத்தினில் பறந்தே பல அற்புத நிகழ்ச்சிகள் புரிந்தாய் நீ ஆத்ம விசார மஹேசம் ஹிமயமும் குமரியும் அடங்க வளர்ஹிந்து சமாஜத்தின் ஜீவன் நீ எங்களின் லக்ஷிய கார்யம் உலகமே பெருநிலை அடைய உயர் உண்மையை விளக்கிடும் பொருளாம் நீ உன்னதமான தீபம் பாடல் பட்டியல் **********************************************************************************************

பகவத்வஜத்தினைப் பணிவோம் அது

பகவத்வஜத்தினைப் பணிவோம் - அது பாரத நாட்டின் ராஷ்ட்ர த்வஜமே காஷாய த்வஜம் எங்கள் த்வஜம் - அது கர்ம நல் வீரர்கள் காத்திட்ட த்வஜமே தியாக சின்னமுள்ள த்வஜம் - அதைத் தாழ்ந்து தினமும் தொழுது பணிவோம் சத்ரபதி சிவாஜியும் - புகழ் ராணாப்ரதாபனும் கோவிந்த குருவும் நானாவும் லக்ஷ்மியும் போலே - பல ராஷ்ட்ர புருஷர்கள் போற்றிய த்வஜமே ஹல்திகாட் யுத்தத்திலேயும் - பின்பு பானிபட் மகாயுத்தத்திலேயும் வீரஸ்வர்க்கம் எய்திட்ட - பல வீரபுருஷர்கள் தாங்கிய த்வஜமே ஹிந்து சமூகம் ஓங்கிடவே - நாங்கள் ஒற்றுமை வழியே வழி என்பதறிந்தோம் நல்சக்தி சீலமும் பெற்று - எங்கள் நல்லுயிர் ஈந்தும் த்வஜத்தினைக் காப்போம் பாடல் பட்டியல் **********************************************************************************************

பகவாக் கொடி இதுபார்

பகவாக் கொடி இதுபார் - நமது பகவாக் கொடி இதுபார் மன்னர் மன்னர்களும் - பாரத மாதவரிஷி முனிவர் இன்னல் பலவேற்று - காத்த இன்பக் கொடி இது பார் வானம் உற ஓங்கி - வையகம் வானென் றழைத்திடவே தானம் தரும நெறி - வீரம் தாங்கிய கொடி இது பார் அன்பும் அஹிம்சையுடன் - ஆற்றல் ஆண்மை தீரமுடன் வன்பகை வென்றிடவே - என்றும் வாழ்த்தும் கொடி இது பார் ஹிந்துக்கள் நாமெல்லாம் - சொந்த பந்துக்களாய் வாழ சந்ததம் சிந்தையுறும் - நமது தியாகக் கொடி இது பார் வெஞ்சமர் முனைகளிலும் - ஓதும் வேதக் கலைகளிலும் அஞ்சேலென அபயம் - அளிக்கும் அன்னைக் கொடி இது பார் உடலுயி ருள்ளளவும் - உலகில் உழைத்திடச் சமுதாயக் கடமை புரிந்திடவே - வணங்கும் காவிக் கொடி இது பார் பாடல் பட்டியல் **********************************************************************************************

பண்பாட்டுப் பள்ளியில் பயில்​வோர்க​ளே

  பண்பாட்டுப் பள்ளியில் பயில்வோர்களே - ஒரு பண்பாளன் குணங்களைக் கேளுங்களேன் பொன்னாட்டு பணிக்கென்றே வாழ்வோர்களே முன்னோடி வாழ்வதனைப் பாருங்களேன் (பண்பாட்டுப்) புகழாசை சிறிதேனும் இல்லாதவன் - கொடும் அகங்காரம் ஒரு போதும் கொள்ளாதவன் குறை கண்டு மனிதர்களைத் தள்ளாதவன் - அவர் நிறைபோற்றி நெஞ்சத்தை வெல்வானவன் (பண்பாட்டுப்) தேசத்தை உயிராகக் கொள்வானவன் - அருந் தியாகத்தால் தர்மத்தைக் காப்பானவன் மோகத்தை போகத்தை வெல்வானவன் - மக்கள் இதயத்திலே இடம் கொள்வானவன் (பண்பாட்டுப்) லக்ஷியத் தீ எரிகின்ற உள்ளம் கொண்டோன் கடும் தவயோக வாழ்வாலே குறிக்கோள் வெல்வான் அச்சத்தால் நிலைதன்னில் பிறழாமலே - அவன் தொடர் கொள்ளும் துயர்வென்று முடிசூடுவான் (பண்பாட்டுப்) பாடல் பட்டியல் **********************************************************************************************

பணிவுடன் ராஷ்ட்ர ஆராத​னை ​செய்​வோம்

( " ஹமகரே ராஷ்ட்ர ஆராதன் " - என்ற மெட்டு ) பணிவுடன் ராஷ்ட்ர ஆராதனை செய்வோம் உடலும் பொருளும் உயிரும் திருவடிகளில் மலராக்கி சொல்லும் செயலும் சிந்தனையும் சிரத்தை யுணர்வினில் ஒன்றிடவே பக்தியுடன் சிரம் தாழ்த்திடுவோம் பணிவுடன் ராஷ்ட்ர வந்தனை செய்வோம் (பணிவுடன்) துள்ளிடும் பிள்ளைப் பிராயத்திலும் காளை வாலிப இளமையிலும் பூரண முதுமைப் பொழுதிலுமே பணிவுடன் ராஷ்ட்ர அர்ச்சனை செய்வோம் (பணிவுடன்) நம்முடை சரிதம் நன்கறிந்தே நிலவிடும் நிலைமை நன்குணர்ந்தே நாளை வாழ்வினை நினைத்திடுவோம் பணிவுடன் ராஷ்ட்ர சிந்தனை செய்வோம் (பணிவுடன்) ஆயிரமாயிர மாண்டுகளாய் அன்னையின் பணியாம் பாதைதனில் அலையென வந்தன இன்னல் பல மலையென நின்றன இடர்களுமே (பணிவுடன்) புல்லியர் எதிரிகள் உதிரத்தால் அன்னையை அபிஷேகம் செய்தோம் தீயோர் தலைகளைக் கொய்தே நம் தாய்க்கென மாலை தொடுத்தோம் (பணிவுடன்) கொடும் கால சக்கரமும் சுழன்றிடவே அரியணையும் சிதைந்தழிந்தது காண் நம் உடல் பொருள் ஆவி யளித்தே நாட்டிடுவோம் அவள் அரியணையை (பணிவுடன்) பாடல் பட்டியல் **********************************************************************************************

பரமபூஜிதமான பகவாக்கொடி

பரமபூஜிதமான பகவாக்கொடி பாரத தேசத்தின் சின்னமாம் சுதந்திரம் வளர்த்ததும் சுயநலமற்றதும் தர்மங்கள் பலவும் தழைத்திடச் செய்ததும் சத்தியம் என்னும் படிப்பினைத்தந்து உலகினில் பறந்திட்ட பகவாக்கொடி வீரச்சமரிலே ரத்தத்தைச் சிந்தவும் மெய் ஞானம் நிறை வேதங்கள் ஓதவும் தியாக உணர்வுடன் தெய்வீக வாழ்வமைக்க நல்வழி காட்டிடும் பகவாக் கொடி முனிவர்கள் தியாகமதை கடமை யென்றெண்ணி உயரிய பண்புகளை உலகினில் தந்து உன்னதமான புகழினைப்பெற்ற எங்கள் குருவாம் பகவாக்கொடி பாடல் பட்டியல் **********************************************************************************************

பரிபூரண ​சே​வை புரிந்திட யாவரும் வாரீர்

பரிபூரண சேவை புரிந்திட யாவரும் வாரீர் பகவாக் கொடியின் சக்தி நிலைத்தது பாரீர் ஹா! நீலவானிலே ஆடி அசைந்திடும்போது நினைவுகள் தோன்றும் இதன் நிகராவது யாது இதுவே தவயோக சமாதியிலாம் பரஞ்சோதி இதுதான் ஹிந்து சமுதாயம் வணங்கிய ஆதி இவை உணர்ந்துடனே உடல் பொருளுயிரையும் தாரீர்! (பகவா) இது விசால பாரத நாட்டின் ஒரே கொடியாகும் இதை எண்ணின பொழுதே மனதின் சஞ்சலம் தீரும் இதன் மீது விரோதிகளான எல்லோரையும் வென்றோம் இக்கொடியின் கீழே நடந்த சம்பவம் ஒன்றோ இதன் ஒவ்வொரு நூலும் நவின்ற சரித்திரம் கேளீர்! (பகவா) உலகம் அதிர ரணபேரியின் யுத்தமுழக்கம் மன உறுதிகொண்டு முன்னேறுவதெங்கள் வழக்கம் ஜயமே! பயமேன்? வருவீர் நமக்கும் ஒரு தாழ்வோ? ஜன்ம பூமியைப் பணியா வாழ்வொரு வாழ்வோ? ஒரு மனதுடனே அணியாயிதன் நிழலிற் சேரீர்! (பகவா) பாடல் பட்டியல் **********************************************************************************************

பாதத்தி​​லே த​​லை​வைத்​தோம் தா​யே தா​யே

பாதத்திலே தலைவைத்தோம் தாயே தாயே பற்றெல்லாம் நீக்கிவிட்டோம் தாயே தாயே உலகினிலே உன்புகழை பாரதத் தாயே ! உயர்த்திடவே உறுதிகொண்டோம் தாயே தாயே (பாதத்திலே) எங்களுக்கு இருப்பதெல்லாம் தாயே தாயே உன்னை யன்றி வேறில்லை தாயே தாயே மனத்தினிலே வரித்து விட்டோம் பாரதத் தாயே ! மகத்தான லட்சியத்தை தாயே தாயே (பாதத்திலே) உந்தன்மக்கள் நாங்களெல்லாம் தாயே தாயே ஒரு குடும்பம் ஆகையினால் தாயே தாயே வாழ்வினிலும் தாழ்வினிலும் பாரதத் தாயே ! வாஞ்சையுடன் உதவிடுவோம் தாயே தாயே (பாதத்திலே) பேதமின்றி பழகுவதால் தாயே தாயே வேரறுப்போம் வேற்றுமையை தாயே தாயே இழிகுணத்து எதிரிகளை பாரதத் தாயே ! இனி சகியோம் ஒரு கணமும் தாயே தாயே (பாதத்திலே) ஊர்தோறும் உந்தன் புகழ் தாயே தாயே நாள்தோறும் பாடிடுவோம் தாயே தாயே எல்லோரும் ஒன்றிணைந்து பாரதத் தாயே ! ஏற்றிடுவோம் உன்பணியைத் தாயே தாயே (பாதத்திலே) பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரத ​தேச மகான்கள் பிறந்த பரம்ப​ரை ​தோன்றிய பாலக​ரே

("ஆஜ்ஹிமாலயகீ" -- என்ற மெட்டு) பாரத தேச மகான்கள் பிறந்த பரம்பரை தோன்றிய பாலகரே பாவனமாம் அவர் நாமம் உரைத்து பாரினில் நாமும் உயர்ந்திடுவோம் வேதப் பொருளை யெடுத்து வகுத்து காரிருள் நீக்கிய முனிவன் யார்? மிகஇள வயதிற் கானகம் சென்று தவத்தால் ஓங்கிய சிறுவன் யார்? நாராயணா நம வென்றே மன மாறா தோதிய புனிதன் யார்? நமனைக் கண்டு பயமில்லாமற் புன்னகை செய்த புதல்வன் யார்? அவரைப் பின்பற்றிச் சென்றே நாம் அன்னையின் அன்பை அடைந்திடுவோம் (பாவன) அர்ஜுனனுக்கு அறிவூட்டி யற்பரை அழித்திடும் ஆண்மை அளித்தது யார்? அருளொளி வீசிக் கருணையினுருவாய் ஆசையை முற்றும் ஒழித்தது யார்? அஞ்ஞானத்தை யகற்றக் காலடி யதிலே யுதயஞ் செய்தது யார்? ஆன்ம சக்தியால் இந்த நாட்டினைத் தட்டி எழுப்பிய ஞானிகள் யார்? அவரைப் பின்பற்றிச் சென்றே நாம் அன்னையின் அன்பை அடைந்திடுவோம் (பாவன) அளவிலாத துயருற்றும் அக்பரை அடக்கி விளங்கிய தீரன் யார்? அன்னியராம் முகலாயரின் அரசை அசைத்து வீழ்த்திய தீரன் யார்? ஹிந்து மதத்தை விடமாட்டேன் என இளமையில் உயிரைத் தந்தவன் யார்? ஹிந்து மாதரின் கற்பினை உலகம் போற்றத் தீயில் எரிந்தவர் யார்? அவரைப் பின்பற்றிச் சென்றே நாம் அன்னையின் அன்பை அடைந்திடுவோம் (பாவன) ஆங்கிலேயரையும் அலற வைத்துள்ள சுதந்திர யுத்தம் அமைத்தவர் யார்? ஆயிரத்தி யெண்ணூற்றைம்பத்தேழ் ஆண்டினில் ஆவி துறந்தவர் யார்? மாலைகளைப் போல் தூக்குக் கயிற்றையும் எண்ணி மகிழ்ந்து மடிந்தவர் யார்? வெஞ்சிறையிடினும் பாரத தேவியின் மலரடி நாடியிருந்தவர் யார்? அவரைப் பின்பற்றிச் சென்றே நாம் அன்னையின் அன்பை அடைந்திடுவோம் (பாவன) தெளிவாய் ஹிந்து கலாசாரத்தைப் பிற நாட்டினர்க்கெல்லாம் அறிவித்துத் தேசபக்தியே தெய்வ பக்தியென வீரகர்ஜனை புரிந்தது யார்? புண்ணிய பாரத பூமியில் வாழும் ஹிந்து மக்கள் ஒரு மனதுடனே பூரண இன்பம் பெற அழிவில்லா சங்க சக்தியைத் தந்தது யார்? அவரைப் பின்பற்றிச் சென்றே நாம் அன்னையின் அன்பை அடைந்திடுவோம் (பாவன) பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரத அன்னையின் கலிதீர்த்திடவே

பாரத அன்னையின் கலிதீர்த்திடவே வீரர் நாமும் கூடிடுவோம் பாரத நாட்டின் ஒவ்வொரு அணுவும் நதியும் மலையும் எங்களதெனவே வீரமுழக்கம் செய்திடுவோம் நாம் உயிருள்ளளவும் காத்திடுவோம் (பாரத) முப்பது கோடி பாரத மைந்தர் நம்முடை சோதரர் என்றுணர்வோம் நாம் உயிரினும் இனிய பகவக் கொடியை உள்ளந்தோறும் நாட்டிடுவோம் (பாரத) உலக மனைத்தையும் வென்றிடவே நாம் உன்னத சபதம் செய்திடுவோமே சங்கவிளக்கினை கையினில் ஏந்தி தீமை யிருட்கணம் ஓட்டிடுவோம் (பாரத) அச்சமொழிப்போம் ஆண்மை வளர்ப்போம் வச்சிரம்போலே உடலை வளர்ப்போம் திரட்டிடுவோம் நாம் வீரர் படையை தாயின் சக்தி பெருக்கிடுவோம் (பாரத) பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரத தேவியின் சீரருள் கோரி பாலகர் கூடுகிறோம்

பாரத தேவியின் சீரருள் கோரி பாலகர் கூடுகிறோம் ராஷ்ட்ரீய ஸ்வயம்ஸேவக சங்கம் சாஸ்வதமும் பெறவே சார்ந்ததில் நாமுறவே தெய்வ தத்துவம் சேந்திடும் த்வஜமே திரு நிழ லதனில் ஸ்திர மனதுடனே செய்திடுவோம் சத்யம் சிறந்திடுவோம் நித்யம் (பாரத) அலை பெறும் சாகரம் அது உள்ள வரையே அகிலமெல்லாம் அதில் ஐக்கியம் பெறவே தலைவர் ஒருவரவர் உரைமறை யெனவே சரியே பணியே புரிவோம் நலமே தனது கடமை யெனவே மனது ஒருமையுடனே (பாரத) "இந்தியன்" எனும் மனக்கோழையும் நீங்க "ஹிந்து" என்ற மனமேன்மையும் ஓங்க அர்த்த மில்லா மன பேதம் பின்வாங்க ஆருயிரே தரவே வர நேரினும் அணுவளவும் தவறோம் அன்புடனே புரிவோம் (பாரத) பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரத நாட்​டைப் பாரில் உயர்த்திட துறவிகளாய் நாம்

பாரத நாட்டைப் பாரில் உயர்த்திட துறவிகளாய் நாம் உழைத்திடுவோம். அன்னையின் கோவில் நம்மேல் எழுந்திட, அஸ்திவாரமாய் ஆகிடுவோம் சிற்பம் தாங்கிய கற்கள் பலவும் சிறந்தே கோயிலை அழகிடினும். சிற்பவேலைகள் சிறிதும் இன்றி சீர்மிகு கோயிலைத் தாங்கிடுவோம் (பாரத நாட்டை) தன்னையழித்தே மரத்தை வளர்த்திடும் தன்னலங் கருதா விதையாவோம். மண்ணில் நம்முடல் மக்கியே மாயினும், மரத்தை வளர்க்க மடிந்திடுவோம். விதையின் பண்பினை வளர்த்தே நாமும், வானவர் நிலையை எய்திடுவோம், (பாரத நாட்டை) நாடாம் மரத்தை காத்திடும் வேர் நாம், நாடெங்கிலும் ஊன்றிடுவோம். மதமிகுயானைகள் வந்தே மோதினும், மரத்தினை நாமே காத்திடுவோம். பெரும்புயல்வீசி ஆட்டி அசைக்கினும் பெருவலியுடனே நிறுத்திடுவோம் (பாரத நாட்டை) பாரத அன்னையின் புத்திரர் நாமே, பொறுத்திடுவோமோ அவள் துயரம்? வேற்றுமையாலே தன்னரும்மைந்தர், வீழ்ந்திடக் கண்டே கதறிடுறாள். துன்பம் துடைத்திட துடித்தெழுவோம் நாம், அன்பின் வழியால் மைந்தரைப் பிணைப்போம். (பாரத நாட்டை) தியாகத் தீயினை மனத்துள் வளர்த்தே, தேச பக்தியை பரப்பிடுவோம். பெயர் புகழ் வெறுத்தே தொண்டு புரிந்திட பேராவல் நாம் கொண்டுள்ளோம். பாரத தர்மம் ஒன்றே தாரகம், பாரத நாடு ஒன்றே தியானம். அன்னையின் பணியிது ஒன்றே இன்பம் என்றே எண்ணி நாம் முன்செல்வோம். (பாரத நாட்டை) பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரத நாட்​டைப் பாரிலுயர்த்திட ஒன்றுபடு ஒன்றுபடு

பாரத நாட்டைப் பாரிலுயர்த்திட ஒன்றுபடு...ஒன்றுபடு ஹிந்து தர்மமிது ஓங்கி உயர்ந்திட ஒன்றுபடு...ஒன்றுபடு ஆயிரமாண்டுகள் அன்னியன் ஆட்சியில் அடிமைப்பட்டதை எண்ணிவிடு வேற்றுமை ஒன்றே காரணமென்று சாற்றும் சரித்திரம் கண்டுவிடு (பாரத) ஆயிரம் ஜாதிகள் நம்மிலே உண்டு ஆயினும் ஓரன்னை மக்களன்றோ? பேதங்கள் வந்தாலும் பேசி முடிப்போம் போரிடும் தன்மையை விட்டுவிடு (பாரத) நந்தனைத் தந்தவர் நம்மைப் பிரிவது எந்த வகையிலும் தீமையன்றோ? சிந்தனை செய்தவர் வீடு திரும்பிட சந்ததம் நல்வழி கண்டிடுவோம். (பாரத) `பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரத நாட்டின் ​பெரு​மையும் வலி​மையும் பாருலகறியச் ​

பாரத நாட்டின் பெருமையும் வலிமையும் பாருலகறியச் செய்திடுவோம் உண்மை உறுதி நன் நீதியும் நிலவிட உயிரையும் ஈந்து காத்திடுவோம். அன்பறி வொழுக்கம் அடக்கமும் பொலிந்திட அற்புத நாதம் முழக்கிடுவோம் ஆயிரமாண்டுகளாக வந்திடும் அன்னையின் இன்னலகற்றிடுவோம் பாரத நாட்டின் சக்தியை எழுப்பிட வீறுடன் ஒன்றாய்க் கூடிடுவோம் பக்தியை எழுப்பி நாட்டினைக் காக்கப் படையெனத் திரண்டு எழுந்திடுவோம் (பாரத) ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று கண்டதும் இந்நாடே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கொண்டதும் இந்நாடே. கண்டவர் போனவர் மகிழ்ந்திடப்பேணி, களிப்பை அளித்ததும் இந்நாடே மாமுனிவோரின் மாண்புறு கருத்தைக் காத்து வளர்த்ததும் இந்நாடே. (பாரத) பேரினை வேண்டோம் புகழினை வேண்டோம் தொண்டினை ஒன்றே வேண்டுவமே நற்றவ வானென நாட்டினைப் போற்றி நலம்புரி பணியாம் செய்திடுவோம் நிந்தனைவிட்டு வந்தனை செய்தே நிகழ்த்திடுவோமே தாய்ப்பணியை 'வந்தே மாதரம்' என்றிடச்சொல்லி வளர்ப்போம் நாட்டுப் பற்றினையே. (பாரத) ஏழ்மையும் தாழ்மையும் துயரும் ஒழிந்திட எண்ணிடவேண்டும் மனத்துள்ளே ஒன்றுபட்டால் நன்றென வாழ்வோம் உணர்ந்திட வேண்டும் உள்ளத்திலே நாட்டின் நலனே நம்முடை நலனும் என்றே நாளும் எண்ணிடவே சங்க சக்தியில் ஒன்றிடவேண்டி நாளொருபோதும் பணிபுரிவோம். (பாரத) பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரத நாட்டின் வரலாற்றினி​லே

பாரத நாட்டின் வரலாற்றினிலே திருப்பம் நிகழ்வது காண் உலகை வென்றிடும் வேட்கை கொண்டே ஹிந்து எழுந்தான் காண் (பாரதநாட்டின்......) பல நூற்றாண்டாய் இழந்த மதிப்பினை பாரதம் மீண்டும் நிலைநாட்டும் அன்பும் அமைதியும் இன்பமும் அருளும் பாரதம் புதுயுகம் உருவாக்கும் பாரதம் படைக்கும் தர்ம நெறியினால் மானவ தர்மம் எழும் தோற்று சிதைந்த மேலையர் சிந்தனை மெல்லக் கரைந்தொழியும் (உலகை வென்றிடும்....) கிரேக்க மழிந்தது எகிப்தியமழிந்தது அமர பாரதம் வாழுதுகாண் ஆதியும் அந்தமும் அற்ற நாடிது தூய்மையின் பண்பின் காவலன் காண் போக வாதத்தின் மாளிகை சரிந்தது மாறுது வரலாறு உலகின் தாகம் தீர்த்திட வல்லது ஹிந்து கங்கையேதான் (உலகை வென்றிடும்....) பகைவர் படையை பதினேழு தடவை மன்னித்தோம் இனி தவறிழையோம் கோடிக் கோடி வீரரின் தாயினி அனாதையென்றிட அனுமதியோம் நாட்டை யழித்திடும் சூழ்ச்சி யனைத்தும் விரைவில் அகன்றொழியும் அகண்ட பாரதம் நாடினி வழங்கும் நிரந்தர ஜோதியினை (உலகை வென்றிடும்....) பத்து திசையிலும் சங்கக் கிளைகள் ஊன்றிப் பரவி தழைக்குது காண் ஹிந்து ராஷ்ட்ரத்தின் வெற்றிக் கொடியும் பட்டொளி வீசிப் பறக்குது காண் ஆட்சியால் மட்டும் நாடுயராது ஆய்ந்து உணர்வோம் தெளிவாய் விழித்தெழுந்த மக்களின் மையங்கள் நாட்டினை உய்விக்கும் (உலகை வென்றிடும்....) பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரத நாடிது திருக்​கோயில்

பாரத நாடிது திருக்கோயில் பணிவுடன் இதனை வணங்கிடுவோம் ஆண்டவன் அருளினைத் தருவது போல் அன்னை பாரதி அருள் புரிவாள் தேசமும் தெய்வமும் ஒன்றே என்று உணர்ந்திடுவோம் நன்றாய் இதனை உணர்த்திடுவோம்.....பாரத நாடிது உள்ள மனைத்தையும் ஒன்றாக்கி உயர்வு தாழ்வு பிணி நீக்கி அன்புடன் பண்பை போதிக்கும் அமுதசுரபி தான் சங்கஸ்தான் கேசவரும் மாதவரும் சென்ற பாதையில் தொடர்ந்திடுவோம் வெற்றி இலக்கை அடைந்திடுவோம்...பாரத நாடிது எட்டு திக்கிலு மிருந்து வரும் எதிரியர் சதியை முறியடிப்போம் எடுத்த காரியம் அனைத்திலுமே நிச்சயம் வெற்றி நாட்டிடுவோம் உலக அரங்கில் பாரத நாடு உன்னத நிலையை எய்திடுமே உலகம் அதிலே உய்ந்திடுமே...பாரத நாடிது அன்பு கொடுத்தோம் அந்நாளில் பண்பை அளித்தோம் அத்துடனே துன்புறு உலகின் துயரினை நீக்கி தெம்பு அளிப்போம் எந்நாளும் சங்க சக்தியின் வெற்றி நடைதான் சர்வ சக்தியின் ஆதாரம் சத்தியம் இதனை உணர்ந்திடுவோம்.. பாரத நாடிது பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரத நாடே பார்புகழ் நாடே

பாரத நாடே பார்புகழ் நாடே பகவாக்கொடி பறக்கும் நாடே கலைகளில் சிறந்த நாடு, நிலைகளில் உயர்ந்த நாடு கல்வியில் விளங்கும் நாடு, செல்வி தங்கி வாழும் நாடு வீரத்தில் சிறந்த நாடு, தீரத்தில் மிகுந்த நாடு பார்தனில் சிறந்த நாடு, நேர்மையுள்ள பாரதம் சிவாஜி பிறந்த பாரதம், யாவர் பணியும் பாரதம் அன்பு திகழும் பாரதம், இன்பம் ததும்பும் பாரதம் வறுமை வாழ்வு நீங்கவே, கொடுமைத் தொல்லை ஒழியவே சந்ததமும் ஒத்துழைத்து சங்கநாதம் செய்குவோம் ஹிந்துஸ்தான ஹிந்துக்கள் எந்த நாளும் பந்துக்கள் சேதமிலா பாரதத்தை வேகமதாய் அடைந்திடுவோம் பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரத மண்ணில் பிறந்தது ​பேறு என்​றே உணர்ந்திடு​வோம்

பாரத மண்ணில் பிறந்தது பேறு என்றே உணர்ந்திடுவோம் பாரத தாயின் பழமை பெருமை இன்றே உணர்ந்திடுவோம் வியாசன் படைத்த மாபாரதமும் வள்ளுவன் தீட்டிய முப்பால் நுாலும் வையம் முழுவதும் போற்றி வணங்கும் இலக்கியம் கண்டவளாம் (பாரதத் தாயின்) தன்னெலும்பீந்த ததீசி முனியும் தன்னையளித்த சம்யம் ராயும் தலையைக் கொடுத்த குமணன் போன்ற தியாகியர் தாயவளாம் (பாரதத் தாயின்) விஜயன் வீமன் வீரவடிவினில் புருஷோத்தமனாய் பிரதாபனாக சிவாஜி மற்றும் ஜான்ஸி ராணியாய் தீரம் காட்டினளே (பாரதத் தாயின்) நரேந்த்ரனுருவில் நானிலம் வென்றே நம்முடை நெறியின் உயர்வை நாட்டி உலகோரிடையே மங்கிய தன் புகழ் ஓங்கிடச் செய்தனளே (பாரதத் தாயின்) தியாகம் யோகம் ஞானம் வீரம் துாய்மை எளிமை அணிகளணிந்த பாரதத்தாயைப் பாரின் தலைமையில் விரைந்தே நாட்டிடுவோம் (பாரதத் தாயின்) பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரதத்தா​யே பாரதத்தா​யே பாரதத்தா​யே

பாரதத்தாயே! பாரதத்தாயே! பாரதத்தாயே! பலப்பல கோடி மக்கள் நெஞ்சிலும் அன்பு நீயே பலப்பல கோடி மக்கள் நாவிலும் பெருமை நீயே பைம்புனல் அமுதம் தோய்ந்த பண்பு நீ பரிவு நீயே பாரதத்தாயே உந்தன் பதமலர் மறக்கிலோமே (பாரத) கரும்பு நீ செந்நெல் நீயே! கதலி நீ தென்னை நீயே! காடு நீ மேடு நீயே! கமல நற் பொய்கை நீயே இரும்பு நீ பொன்னும் நீயே! எறிகடல் முத்தும் நீயே இனிய எம்தாயே உந்தன் இணையடி மறக்கிலோமே (பாரத) இமயமாமலையில் உந்தன் இணையிலா உயர்வு கண்டோம் இறங்கிய கங்கை தோறும் அழிவிலா வளமை கண்டோம் குமரி மாமுனையில் எல்லைக் கோடிலாக் கருணை கண்டோம் கோமளச் செல்வி உந்தன் திருவடி மறக்கிலோமே! (பாரத) கயிலை நீ மதுரை நீயே! காசி நீ, காஞ்சி நீயே! காவியம் கவிதை சிற்பக் காட்சியும் நீயே தாயே! தயவு நீ தருமம் நீயே! சாந்தியின் வடிவம் நீயே! சத்திய நெறியே செல்லும் தாளினை மறக்கிலோமே! (பாரத) பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரதத்தாயை பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம்

பாரதத்தாயை பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம் அர்ப்பணமாவோம் அவள் தாளினிலே தூய மலர்கள் நாம் பேசுகிறோம் நாம் பல மொழி ஆனால் பேதம் இங்கில்லை வங்கள மொழியும் இன்பத்தமிழும் எங்களதென்றிடுவோம் கவின் மலையாளம் கன்னடம் தெலுங்கு இந்தியும் எங்களதே குமரி முனையிலே தவம் செய் சக்தி இமயம் உறை ஈசன் ராமேஸ்வரமும் காசியும் அதனை வழிபடு பக்தர்களும் நர்மதை கங்கை காவிரி நதியும் ஒருமை உணர்த்திடுது ஆயிரம் சாதிகள் நம்மில் உண்டு ஆயின் நாம் ஒன்று மாநிலம் பலவாய்ப் பிரிந்திருந்தாலும் மக்கள் நாம் ஒன்று வழிபடு தெய்வம் பலவானாலும் அனைவருமே ஹிந்து தொழில் செய்தாலும் கல்வி கற்றாலும் தேசத்தின் நன்மைக்கே நாட்டின் உடைமையை நாமே அழித்தால் நஷ்டம் யாருக்கு செய் தொழிலினிலே வேறுபட்டாலும் யாதும் அவள் தொழிலாம் பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரதத்தின் வீரரே வீர தீர சூரரே

பாரதத்தின் வீரரே வீரதீர சூரரே பாரினில் நாம் யாவரும் பகை யகற்றி வாழ்வோம் பாக்கியம் கொண்டாடுவோம் வீரஹிந்து புத்ரரே, வெற்றி முழக்கம் கொட்டுவோம் ஹிந்து தர்மக்கொள்கையை தன்னிலையில் நாட்டுவோம் (பாரதத்தின்) உலகில் நம்மை வெல்லாத உயரிய பதவி அடைகுவோம் வெற்றி வீரம் காட்டுவோம் வேத கீதம் பாடுவோம் வேணு கானம் செய்குவோம் (பாரதத்தின்) முள் நிறைந்த பாதையென்றும் கருதி நாம் புறப்பட்டோம் காப்பதவன் கடமையே, கடமை நமது முறைமையே காட்டுவோம் திறமையே (பாரதத்தின்) காவிக்கொடி கையிலே கடமை நமது மனதிலே அன்புமிக்க மாதவர், ஆசிமொழி நினைவிலே அவனியில் விரைவிலே (பாரதத்தின்) பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரதத்து மக்களின்று ஒன்று கூடுவோ​ம்

  பாரதத்து மக்களின்று ஒன்று கூடுவோம் நாடு காக்க தர்மம் காக்க உறுதி பூணுவோம் சூளுரைத்து சபதமேற்று பணியில் மூழ்குவோம் சூழிடர்கள் வென்று நாமும் முரசு கொட்டுவோம் வீரனே வீரனே வீறுகொண்டெழு பாரதத்தின் ஒருமை காக்க உறுதி பூண்டெழு பாரினிலே தலைசிறந்த நாடு நமது நாடு பார் புகழும் வேதம் தந்த நாடு நமது நாடு வளமையான பாரதத்தில் பிறந்து வாழ்கிறோம் வலிமை கொண்டு வாழ்வதற்கு உறுதிகொள்ளுவோம் (வீரனே வீரனே) பொய்மை ஒழித்து வாழ்ந்தவர்கள் தேசம் நமது தேசம் வாய்மையே வெல்லுமென்று வாழ்ந்து காட்டும் தேசம் ஹிந்துக்களின் ஒற்றுமையாம் நமது சக்தியால் ஹிந்து ராஷ்ட்ரம் உலகரங்கில் உயர்ந்து நிற்குமே (வீரனே வீரனே) பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரதத் தாய் நெற்றியிலே

   பாரதத்தாய் நெற்றியிலே மங்கலமாய் வைத்ததொரு குங்குமத்தின் திலகம் தானே காஷ்மீரம் - அதைக் காத்திடவே காட்டிடுவோம் மாவீரம் காப்போம் காப்போம் காஷ்மீரம் காப்போம் காப்போம் காப்போம் பாரதம் காப்போம் காஷ்மீரம் காப்போம் பாரதம் காப்போம் பாரதத்தாய் பாலூட்டி சீராட்டி வளர்த்த மக்கள் அவள் பகையை முடிப்பதற்கே புறப்படுவோம் - அந்த ஸ்ரீராம பாணமென பாய்ந்திடுவோம் (காப்போம் காப்போம்) இமய முதல் குமரிவரை எங்கள் உயிர்த் தாய்நாடு எவரேனும் கை வைத்தால் விடமாட்டோம் - விஜயன் காண்டீபக் கணைபோலச் சாடிடுவோம் (காப்போம் காப்போம்) காவிக் கொடி ஏந்திடுவோம் கடல்போல ஆர்ப்பரிப்போம் பாவியரின் பகை முடிப்போம் வாருங்கள் - நம்மை பாரதத்தாய் அழைக்கின்றாள் வாருங்கள் (காப்போம் காப்போம்) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவரே வானுறையும் தெய்வத்துள் ஒன்றென்பார் வள்ளுவரும் - ஒன்றாய் இணைந்திடுவோம் செயல்படுவோம் (காப்போம் காப்போம்) பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரதத்தின் ஒரு​மைகாக்க வீரர் நாமும் கூடு​வோம்

  பாரதத்தின் ஒருமைகாக்க வீரர் நாமும் கூடுவோம் வீரர் நாமும் சபதமேற்று தர்மம் காத்து வாழுவோம் இமயம் முதல் குமரி வரை ஒன்றுபட்ட நாடிது இதயத் தூறும் அன்பு கொண்டு மக்கள் ஒன்று சேருவோம் உயர்வு தாழ்வு ஜாதி பேதம் நீக்கி நாடு வாழ்ந்திட வீரர் நாமும் சபதமேற்று ஒன்றுகூடிப் பாடுவோம் (பாரதத்தின்) அடிமைத்தளை நீங்கினாலும் அடிமை மோகம் சூழுது ஸ்வதேசம் தர்மம் இழிவு என்று பேசும் மடமை சூழுது ஸ்வதேசம் தர்மம் பெருமைகளை தேச மக்கள் உணரவே வீரர் நாமும் சபதமேற்று பெருமிதத்தைக் கூட்டுவோம் (பாரதத்தின்) அந்த நாளில் பாரதம் அவனி போற்ற வாழ்ந்ததே இந்த நாளில் பாரதம் இழிவு தாங்கி வாழுதே வீறு கொண்டு எழுவோமே பழிப்பெயரை நீக்கவே வீரர் நாமும் சபதமேற்று அவனி போற்ற உயருவோம் (பாரதத்தின்) அகமும் புறமும் அச்சுறுத்தும் பகைமை நாட்டைச் சூழுது தங்க உள்ளம் கொண்டவரை வல்லவராய் மாற்றியே தர்மசக்தி ஓங்கிட தீயசக்தி வீழ்ந்திட வீரர் நாமும் சபதமேற்று பாரதத்தை உயர்த்துவோம் (பாரதத்தின்) பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரத நாட்டைப் பாடுவோமே

  பாரதநாட்டைப் பாடுவோமே பரமானந்தம் கூடுவோமே முனிவர்கள் தேசம் பாரதமே முழங்கும் வீரர் பாரதமே பாரத நாட்டின் பேரின்பம் பார்க்கப் பார்க்கப் போம் துன்பம் (பாரத ) காலைச் சிந்தை கதிரொளியே மாலை நெஞ்சில் மதிநிலவே சாந்தம் சாந்தம் இமயமலை சார்ந்து நிற்றல் சமயநிலை (பாரத ) கங்கை ஓடும் காட்சியிலே கடவுள் நடனம் மாட்சியிலே காடும் மலையும் எங்கள் மடம் கவியும் வரையும் எங்கள் படம் (பாரத ) மயிலில் ஆடும் எம் மனமே குயிலில் பாடும் எம் குரலே பறவை அழகில் எம் பார்வை பாடும் கீதம் எம் போர்வை (பாரத ) பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரதநாடு என்னுடை நாடு, என்று தினம் தினம் நீ அதைப் பாடு

  பாரதநாடு என்னுடை நாடு, என்று தினம் தினம் நீ அதைப் பாடு சொந்தமிலாதவர் வந்ததினாலே சோர்ந்துகிடந்து போனதனாலே வந்தவர் போனவர் யாவரையும் நம்பி வாடின காலங்கள் ஓடின தம்பி இந்த தினம் முதல் பாரத நாடு என்னுடைய நாடென்ற எண்ணத்தில் கூடு (பாரதநாடு) கன்னி இமயக் கடலிடை நாடு கடவுள் நமக்கெனக் கட்டிய வீடு என்னுடை நாட்டினை நானிருந்தாள இந்த தினம் முதல் எண்ணுவேன் மீள (பாரதநாடு) பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரதமெங்கள் ஜனன பூமியாம்

பாரதமெங்கள் ஜனன பூமியாம் நேரிதற்குண்டோ காண் நேரிதற்குண்டோ காண் தென்றல் நடனம் தேர்ந்ததின்னாடு மன்றல் மிகுந்த மலர் மிகு நாடு கலகலவென்றே கானமிட்டோடும் பல நதி பாயுது காண் பாவ புண்யமே பகுத்தறி ஞானமும் தேசபக்தி அபிமானமும் ஓங்கிய சுபதேச மிதே ஜய பூமியிதே சரணமிதனையே செய்திடுவோம் பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரதமே ஒரு கணமும் உன்னை மறந்தினிமேல் இருப்போமோ

  ( "பாரத்கே கண கணமே" -- என்ற மெட்டு) பாரதமே ஒரு கணமும் உன்னை மறந்தினிமேல் இருப்போமோ பணிசெய்தே எம் வாழ்வை முடிப்போம் ஹிந்துஸ்தான் விளங்கிடவே ஆதி வேதமும் உபநிஷதங்களும் அமைந்த கீதையும் ஆகமும் நீதியான இதிஹாச புராணமும் நேர்மை என்றிடும் தியாகத்தின் வடிவாகிய சற்குண ரெப்பொழுதும் வாழச்சீர் மழுங்காத மாத்ரு பூமியின் மேன்மை யொன்றையே மனதில் கருதி வணங்கிடுவோம் லக்ஷ்யத்தைச் சேர்ந்திடவே நாங்கள் எங்களையே பலி தந்திடுவோம் இந்து சமாஜம் வலிவு கொண்டு முன்பிருந்தாற்போல் இன்றாகிடவே சொந்த சுகம் கருதாமலுழைக்கும் ஸ்வயம்சேவகர் சிந்தையிலே வந்து தங்கி நிலைதந்த மஹான் ஸ்ரீமாதவரின் கீழ் ஓங்கி வரும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தியானம் செய் சன்யாசிகளாய் சங்கஸ்தானில் கூடியாடியே சத்ய சோதரராகிடுவோம் அகதி என்ற சொல் அறவே நீங்குக அனைவரும் ஒன்றாய் ஆகிடுக அண்ட சராசரம் எதிலும் பாரத அன்னையின் அருளே தந்திடுக அமரரான நம் கேசவர் காட்டிய ஆத்ம சக்தி மேலோங்கிடுக அகில லோகமும் மாதவர் உரையால் அழியா இன்பம் அடைந்திடுக அணுவளவேனும் மனம் அசையாமல் அர்ப்பணமே நாம் செய்திடுவோம் பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரதீஸ்வரி பாபநாசினி

  பாரதீஸ்வரி....பாபநாசினி பாரதமெனும் ஞானக்கோயில் ஞானாம்பிகை நீ பாரதீஸ்வரி பாபநாசினி குமரி முனை தவம் செய்யும் பகவதி நீயே காஷ்மீரப் பனிமலையைக் காக்கும் வைஷ்ணவி சிருங்க பீட சங்கரரின் ஸாரதை நீயே காளிகட்ட ராமக்ருஷ்ண பவதாரிணியே... (பாரதீஸ்வரி...) நஞ்சை உண்ட கண்டன்தந்த பாகீரதி நீ கொஞ்சு தமிழ்க் குறுமுனிவன் காவிரியும் நீ காளிங்க நர்த்தனன் ஸ்ரீ கண்ணன் யமுனை நீ வேள்விகண்ட வேதபூமி தந்த சிந்து நீயே (பாரதீஸ்வரி...) வான்மறை திருக்குறள் தந்த வள்ளுவன் நீயே வேதம் நான்கு மாபாரத வியாசனும் நீயே சிலம்பிசைத்த சேரன்தம்பி இளங்கோவும் நீயே கம்பன் காளிதாஸன் கவி பாரதியும் நீயே (பாரதீஸ்வரி...) அருந்ததி அனுசூயா ஸதி திரெளபதி நீயே சீதை கண்ணகி அன்னை சாரதாவும் நீயே 'வையத்து வாழ்வீர்காள்' ஆண்டாளும் நீயே மீராப்பிரபு கிரிதாரி மீராபாயும் நீயே (பாரதீஸ்வரி...) "ராமநன்னு ப்ரோவராவெனு" தியாகராஜன் நீ "கிருஷ்ணா நீ பேகனே பாரோ" புரந்தரனும் நீ "பஜாரேபையா" ராமகோவிந்த கபீர்தாஸன் நீயே "தோடுடை செவியன்' ஞான சம்பந்தனும் நீயே (பாரதீஸ்வரி...) தருமன் கண்ணன் வீமன் பார்த்தன் அபிமன்யுவும் நீ ஹிந்து மஹா ராஷ்ட்ரம் கண்ட சத்ரபதியும் நீ குருகோவிந்த சிம்மன் ராணா பிரதாபனும் நீ ராஜ ராஜ சோழ சேர பாண்டியனும் நீயே (பாரதீஸ்வரி...) குகனும் நீ நந்தனும் நீ திருப்பாணாழ்வார் நீ கண்கொடுத்த காளத்தி கண்ணப்பனும் நீயே டக்கர் பாபா ஜோதிர்புலே நாராயண குரு நீ தீண்டாமை நோய் தீர்த்த பீமராவும் நீயே (பாரதீஸ்வரி...) திலகர் வீர சாவர்க்கர் நேதாஜியும் நீ வீரன் வாஞ்சி குமரன் பகத்சிம்மனும் நீயே தாய்நாட்டின் திருத்தொண்டே தேவபூஜை என்று வாழ்ந்த டாக்டர் ஹெட்கேவார் குருஜியும் நீயே (பாரதீஸ்வரி...) அம்மையும் நீ அப்பனும் நீ அன்னபூரணி அகில லோக நாயகி எமை ஆண்டிடுவாய் நீ ஜகத் ஜனனி ஜகந் நாயகி சர்வேஸ்வரி நீயே அகண்ட பாரதம் காண ஆசி அளித்தாயே (பாரதீஸ்வரி...) பாரதீஸ்வரி....பாபநாசினி பாரதமெனும் ஞானக்கோயில் ஞானாம்பிகை நீ பாரதீஸ்வரி பாபநாசினி பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரில் எல்லா தேசங்களில்

  பாரில் எல்லா தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம் இதனில் நாங்கள் பிறந்துள்ளோம் இதன் உணவுண்டு வளர்ந்துள்ளோம் உயிரைக் காட்டிலும் உயர்ந்துள்ளது எங்கள் தேசம் உயர் தேசம் தனவந்தர்கள் பலர் ஆகியுள்ளார் வீரர்கள் வந்து உதித்துள்ளார் வீரமும் தீரமும் கொண்டுள்ளது எங்கள் தேசம் உயர் தேசம் வீர ராமரே அவதரித்தார் தரிசனம் தந்தார் நம் கிருஷ்ணர் அவதாரர்களின் ஜன்ம இடம் எங்கள் தேசம் உயர் தேசம் சதா சுகத்தை உவந்தளிக்கும் துக்கமே இன்றி துரத்திவிடும் தேசத்திற்காக வாழ்ந்திடுவோம் [உயிர் விடுவோம்] எங்கள் தேசம் உயர் தேசம் வானளாவும் நம் கொடியின் கீழ் நம் பெருந்தலைவர் ஆணையிடின் யாவும் அர்ப்பணம் செய்திடுவோம் எங்கள் தேசம் உயர் தேசம் பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரின் பண்பு கீத​மே ஹிந்து வாழ்வின் சார​மே

  பாரின் பண்பு கீதமே ஹிந்து வாழ்வின் சாரமே ஹிந்து வாழ்வின் சாரமே பாரில் வாழும் நாளுமே உலகம் முழுதும் ஒரு குடும்பம் உயிர னைத்தும் இறைவடிவம் உணவில் உடையில் வேறென்றாலும் உலகினர் நம் உறவினரே ஹிந்து வாழ்வின் சாரமே வஸுதைவ குடும்பகம் தீய சக்தி ஓங்கினாலும் தர்மம் என்றும் வென்றுதீரும் தர்மம் காக்கும் நல்லவரை தர்மம் என்றும் காத்துநிற்கும் ஹிந்து வாழ்வின் சாரமே தர்மோ ரக்ஷதி ரக்ஷித: சக்தி மீண்டும் உதயமானாள் கலி யுகத்தை வெல்லவேண்டி ஒன்றி ணைந்த ஹிந்து சக்தி ஒன்றி னாலே உறுதிவெற்றி ஹிந்து வாழ்வின் சாரமே சங்கே ஸக்தி கலெள யுகே உலகில் உயர்ந்த பண்பிதுவே உரைத்திடுவோம் உலகினுக்கே பண்பினாலே உலகை வென்று பாரில் பண்பை பரப்பிடுவோம் ஹிந்து வாழ்வின் சாரமே க்ருண்வந்தோ விஸ்வ மார்யம். பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரினில் சிறந்த பாவனமான புகழுறும் பாரத நாடே

  பாரினில் சிறந்த பாவனமான புகழுறும் பாரத நாடே நேரில்லை இதற்கிணை நிமிர்ந்து நிற்க உலகில் எந்த நாடும் மாரத வீரர் மலிந்த நந்நாடு மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன் நாடு பூரண ஞானம் பொலிந்த நந்நாடு புத்தர்பிரான் அருள் பொங்கிய நாடு மக்கள் உயிரையே தன்னதென் றெண்ணிய மன்னர் மன்னர்கள் வாழ்ந்த பொன்னாடு ஆத்திரம் கொண்ட அந்நியர் படையை அடித்து விரட்டிய வீரர் நாடு போர்க்களமதனில் சோர்ந்தே நின்று மோகம் சூழ்ந்த பார்த்தனுக்கன்று எழுந்து நிற்பாய் என்றே கூறி கீதையருளிய கண்ணன் நாடு பாரத சக்தியை எழுப்பிட வேண்டி பந்தமகற்றி நல்யோகம் புரிந்த கர்மயோகியாம் கேசவர் வாழ்ந்தே தியாகம் பரப்பிய புண்ணிய நாடு துறவறம் மூலம் மோட்சம் வேண்டேன் தொண்டின் மூலம் இன்பம் காண்பேன் என்றே கூறிய லக்ஷிய புருஷர் மாதவர் வாழ்ந்த மணித் திருநாடு தியாக சிந்தையும் தூய உள்ளமும் தன்னல மறுக்கும் தன்மையும் கொண்ட சங்க சக்தியில் ஒன்றாய்க் கூடி சிரத்தையுடன் நாம் பணி புரிவோம் பாடல் பட்டியல் **********************************************************************************************

பாரினில் புகழ்வீரர் பலரும் பணிந்திட்ட நம்

  பாரினில் புகழ்வீரர் பலரும் பணிந்திட்ட நம் பாரதநாடே! பாரதநாடே!! பாரதநாடே!!! வீர சிவாஜி பிறந்ததிந் நாடு தீரர் பலரும் ஆண்ட நன்னாடு பாரத வர்ஷம் என்னும் பொன்னாடு வரநதியுடன் விளங்கும் நாடு இந்த நாடு ஹிந்து நாடு ஹிந்து மக்களின் சொந்த நாடு சந்ததமும் சேவை செய்ய சந்தோஷமாய் சேர்ந்து வாரீர் பகவக் கொடி பறந்திடவே ஏகமனதாய் வீறுகொண்டு வேகமுடன் நம் மொற்றுமைக் கேகிடுவோம் என்றும் நாமும் பாடல் பட்டியல் **********************************************************************************************

பாவன குருவே பூஜை ஏற்றிடு

பாவன குருவே பூஜை ஏற்றிடு ! பாவன குருவே பூஜை ஏற்றிடு ! கோட்டை கொத்தளம் கோவில் தோறும் மேவிப் பறந்தே ஆட்சி புரிந்தாய் மன்னரும் தாழ்ந்து பணிந்து வணங்கிட தன்னிகரில்லா தனிநிலை பெற்றாய் போர்க்களந்தனிலே புன்சிரிப்புடனே வாழவும் வீழவும் வல்லமை தந்தாய் கடற் பெரும்படையை கைப்பிடி வீரர் அடித்து விரட்டிடும் ஆற்றல் தந்தாய் கண்ணைப் பறித்திடும் சிற்பம் சமைப்போர் விண்ணை முட்டிடும் ஆலயம் அமைப்போர் மனது குவிந்தே கலைத்தவம் செய்தே அமரர் ஆகிட ஆசியளித்தாய் கல்வியும் செல்வமும் சக்தியும் படைத்தோர் வாழ்வினை வேள்வியாய் ஆக்கிடச் செய்தாய் தொண்டில் இன்பம் கண்டிடச் செய்தாய் எளிமையில் மோகம் கொண்டிடச் செய்தாய் வஞ்சமும் களவும் சூதும் அறியா வானவர் வாழும் நாடு படைத்தாய் இமயமும் குமரியும் ஒன்று பிணைத்தே ஒரு மனம் ஓருடல் கொண்டிடச் செய்தாய் உடலும் பொருளும் ஆவியும் எல்லாம் உந்தன் உடைமை நீயே மன்னன் உந்தன் பூஜையில் மலராய் ஆகிட ஆசியளித்தே ஊக்கிடுவாய் நீ பாடல் பட்டியல் **********************************************************************************************

புத்துணர்வூட்டும் கர்ஜ​னை ​செய்​தே

புத்துணர்வூட்டும் கர்ஜனை செய்தே பொங்கி எழுந்தது இளரத்தம் ஹிந்து நாடிது சிலிர்த்தெழுந்தது இதுவே இறைவனின் திருவுள்ளம் (பொங்கி எழுந்தது..) மிகச்சிலர் வந்தே ஆக்கிரமித்து மிகப்பல கொடுமைகள் செய்தனரே தன்னுணர் வற்று திகைத்த நாமோ தாரா ளத்தால் ஏமாந்தோம் அன்னியர் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் அண்ணன்-தம்பி பகையானோம் (பொங்கி எழுந்தது..) ஜாதிகள், மொழிகள், வர்க வேற்றுமை போலி கெளரவம் எத்தனையோ அவரவர் பகுதி நலனைக் காட்டி சுயநலம் பெருக வழிசெய்தோம் எங்கும் தேசீய எண்ணம் வளர்த்தே பிளவுகள் போக வகைசெய்வோம் (பொங்கி எழுந்தது..) நம்மவர் வழிபடும் முறைகள் பலப்பல தனித்தனி அல்லநம் தனிச்சிறப்பே பேதமில்லாத பண்பாடொன்றே ஜீவநதி யாய் அமுதூட்டும் மெய்ப்பொருள் காட்டும் மாபெரும் தர்மம் மங்கல வாழ்வின் ஆதாரம் (பொங்கி எழுந்தது..) லட்சியம் ஒன்றே வாழ்வின் சாரம் பீஷ்மரின் சபதம் நமதாகும் உள்ளம் கனிய பரிவுடன் பழகி மாபெரும் சக்தி காட்டிடுவோம் பாரதத்தாயை உலகம் பணிந்திட புனிதக் கொடியை உயர்த்திடுவோம் (பொங்கி எழுந்தது..) பாடல் பட்டியல் **********************************************************************************************

புதிய பாரதம் தலையெடுக்க

புதிய பாரதம் தலையெடுக்க புதிய தலைமை மலரவேண்டும் பரத தேவி கலங்குகின்றாள் பரத மைந்தர் வீழ்ச்சி கண்டு நறுமலர்ச்சி காண வேண்டின் நல்லவர் அணிதிரள வேண்டும் நேர்மையாளர் வீர நெஞ்சர் நம்ப இயலும் நாணயத்தோர் தொண்டு செய்ய விரதம் பூண்டோர் தூயவர் அணிதிரள வேண்டும் தன்னலத்தை தள்ளி வைத்தே தாயகத்தின் நலன் விழைவோர் பதவி மோகம் சிறிதுமற்ற பண்பினர் அணிதிரள வேண்டும் அரசபோகம் சூழ்ந்த போதும் அறத்தின் நெறியை மறந்திடாதோர் புகழுரைக்கே மயங்கிடாதோர் புனிதர்கள் அணிதிரள வேண்டும் வேஷம் பொய்மை தந்திரத்தால் கோஷத்தால் திசை திருப்பிடாதோர் விலைக்கு வாங்கிட இடங்கொடாதோர் வீரர்கள் அணிதிரள வேண்டும் உள்ளும் புறமும் உயர்ந்து நிற்போர் உள்ளத் திண்மையில் மேரு போன்றோர் திறமை வளரத் தவமியற்றும் தகைமையாளர் திரள வேண்டும் பாடல் பட்டியல் **********************************************************************************************

புது யுகத்​தை நிறுவ எங்கும் புத்துணர் ​வெழுப்பு​வோம்

  புது யுகத்தை நிறுவ எங்கும் புத்துணர் வெழுப்புவோம் அடிமை வாழ் வொழிந்ததின்று அன்னியன் அகன்றனன் அன்னையைப் பிணைத்து வைத்த சங்கிலி அறுந்தது அன்னியரை நம்பி வாழும் அவல நிலை மாற்றுவோம் (புது யுகத்தை) விண்ணளாவ பாரதியின் ஆலயம் அமைத்திட வானவர் தம் நாடு போல பாரதத்தை ஆக்கிட தேசபக்தி தீச்சுடரை உள்ளம் தோறும் ஏற்றுவோம். (புது யுகத்தை) பாதையிலே பாதகர்கள் நிற்பதை உணர்ந்துளோம் வீரமைந்தர் குடிப்பிறந்தோர் தீமைகண்டு தளர்வரோ உளந்தனிலே வலிமை யுண்டு உணர்வினிலே திரளுவோம், (புது யுகத்தை) கண்துஞ்சாக் காவலராய்க் காத்திடுவோம் நாட்டினை பிளவு நஞ்சு பரவும் நாட்டில் ஒருமை அமுதம் பாய்ச்சுவோம் நாட்டுக்காக வாழவீழத் தியாக உணர் வூட்டுவோம். (புது யுகத்தை) பாடல் பட்டியல் **********************************************************************************************

புது வரலாற்றி​னைப் ப​டைக்கின்றான்

  புது வரலாற்றினைப் படைக்கின்றான் புத்துயிர் எங்கும் அளிக்கின்றான் பாரதத் தாயின் பாத மலரிலே மலராகிடும் இளைஞன் இளம் வயதினிலே காடேகி இன்னுயிர் சீதையை இழக்கின்றான் இலங்கை அரக்கன் கொடுங்கோலழித்தே அறத்தின் அரசை அமைக்கின்றான் மறத்தின் தீமை தகர்க்கின்றான் [புது வரலாற்றினைப்] மாரதர் முன்னே கதறுகிறாள் மானம் இழந்தே பாஞ்சாலி மெளனம் காக்கும் முதியோரிடையே காளை கண்ணன் வருகின்றான் கற்பினுக் கபயம் தருகின்றான் [புது வரலாற்றினைப்] பெருங்கடல் கடந்து செல்கின்றான் பேரரசாட்சி அமைக்கின்றான் புவியில் பாரத கொடியினை நாட்டி புகழைக் காலில் குவிக்கின்றான் புனிதத் தாயைப் பணிகின்றான் [புது வரலாற்றினைப்] பசியால் குழந்தை மடிகின்றது பட்டமகிஷியும் துடிக்கின்றாள் சுதந்திர தேவியின் புனிதம் காக்க பலியாகின்றான் பிரதாபனும் ஒளியாகின்றான் காரிருளில் [புது வரலாற்றினைப்] 'துாக்கு மேடையே மணமேடை தாக்கி யழிப்போம் அன்னியரை எங்கள் அன்னை கைவிலங்கொடிப்போம்' என்று கிளர்ந்தது புரட்சி கனல் ஒன்றி மகிழ்ந்தது வரலாற்றில் [புது வரலாற்றினைப்] பாடல் பட்டியல் **********************************************************************************************

புனித நந்நாளில் இன்று பூஜை செய்கிறோம்

புனித நந்நாளில் இன்று பூஜை செய்கிறோம் பூஜையாகிற நல்ல மலர்களாகிறோம் இந்த நாள் வரை நான் தந்ததோர்ப் பணம் குருவே உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம் ஜெய ஜெய பகவா குருவே ஜெய ஜெய பகவா ஜெய ஜெய பகவா கொடியே ஜெய ஜெய பகவா என்று தோன்றினை எனவே கூறவும் இயலா தொன்மை வாய்ந்தவா குருவே தொழுதெழுகின்றோம் எந்த நாளும் உந்தன் புகழ் ஓங்கி உயர்ந்திட குருவே உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம் ஜெய ஜெய பகவா குருவே ஜெய ஜெய பகவா ஜெய ஜெய பகவா கொடியே ஜெய ஜெய பகவா குருதி சிந்தியே விடுதலைக் கோட்டை கட்டினார் - அந்தக் கோட்டை உச்சியில் அழகாய் உன்னை நாட்டினார் உறுதி கொண்டோம் உலகரங்கில் உன்னை உயர்த்திட அதனால் உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம் ஜெய ஜெய பகவா குருவே ஜெய ஜெய பகவா ஜெய ஜெய பகவா கொடியே ஜெய ஜெய பகவா தியாகத்தின் உரு நீ குருவே தூய்மையின் உரு நீ தர்மம் காக்கும் போரில் சாட்சியாகி நின்றவன் நீ தர்மம் காக்கவே நாங்கள் அணி திரண்டுள்ளோம் குருவே உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம் ஜெய ஜெய பகவா குருவே ஜெய ஜெய பகவா ஜெய ஜெய பகவா கொடியே ஜெய ஜெய பகவா செல்வத்தைத் தந்தேன் உடலின் உழைப்பினை தந்தேன் திறமைகள் அனைத்தும் உனக்கே அர்ப்பணம் செய்தேன் என்ன தந்தபோதும் மனம் அமைதியற்றதால் அதனால் உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம் ஜெய ஜெய பகவா குருவே ஜெய ஜெய பகவா ஜெய ஜெய பகவா கொடியே ஜெய ஜெய பகவா பாடல் பட்டியல் **********************************************************************************************

பொங்கல் திருநாள் தந்திடும் மகிழ்ச்சி

  பொங்கல் திருநாள் தந்திடும் மகிழ்ச்சி கரும்பின் இனிப்பைப் போன்றதுவே பகலும் இனிமேல் அதிகம் நமக்கு இருளும் பயந்தே ஓடுது பார் கெட்ட குணங்கள் நம்மை விட்டே ஓடிடும் இந்த நாள்முதலே நல்ல குணங்கள் நம்முள் வளர்த்தே நல்லவராக உயர்வோமே (பொங்கல் திருநாள்) உயிர்கள் வாழ சூரிய தேவன் தன்னைத் தானே அழிக்கின்றான் நாமும் மற்றவர் நலனுக்காக கஷ்டங்களையே தாங்கிடுவோம் சூரியதேவன் ஓய்வே இன்றி அவனது பணியைச் செய்கின்றான் நாமும் ஓய்வை மறந்தே நமது பணியைச் செய்து உயர்வோமே (பொங்கல் திருநாள்) கர்வம் சிறிதும் கொள்ளாமல் (அந்த) சூரிய தேவன் உழைக்கின்றான் கர்வம் நம்மை அழித்துவிடுமே நாமும் இதனை அறிவோமே நல்ல சேவை செய்தே நாமும் நல்ல வாழ்க்கை வாழ்ந்திடுவோம் ஆனால் கர்வம் அண்டிவிடாமல் விழிப்புடன் நாமும் செயல்படுவோம் (பொங்கல் திருநாள்) பாடல் பட்டியல் **********************************************************************************************

பொங்கல் திருநாளும் வந்த​தே

பொங்கல் திருநாளும் வந்ததே - இனி எங்கெங்கும் நம்வாழ்வில் ஒளிவீசும் நாட்கள் சந்தோஷம் பொங்கவே சொல்வோம் - இன்று வந்தனை செய்வோம் சூரிய தேவனை (பொங்கல் திருநாளும்) சுயநலம் நம்மை விட்டோட- என்றும் பிறர்நலம் பேணியே கூடியே வாழ்வோம் - ஓர் ஒப்பில்லா மாற்றம் கொணர்வோம் - அது ஒளிவீசச் செய்யும் நம் சோதரர் வாழ்வில் (பொங்கல் திருநாளும்) இருள் நீங்கி அறிவொளி பரவ - நல் அருள் கிட்டும் நமக்கு ஆதவன் மூலம் பாரத நாடிது உயரும் - இந்தப் பாருக்கு தலைமை தாங்குவ துறுதி! (பொங்கல் திருநாளும்) இன்னல்கள் நாட்டை விட்டகல - நம் சேவைகள் யாவும் நாட்டிலே பெருகிட அன்னையின் பணியில் இணைவோம் - அதன் பின்னே நமக்கு வேறுபேறு உண்டோ (பொங்கல் திருநாளும்) பாடல் பட்டியல் **********************************************************************************************

போற்று​வோம் ​போற்று​வோம் சக்தி​யைப் ​போற்று​வோம்

போற்றுவோம் போற்றுவோம் சக்தியைப் போற்றுவோம் ஏற்றுவோம் ஏற்றுவோம் சக்தி தீபம் ஏற்றுவோம் யோக ஞான வீர தீர சக்தி போற்றுவோம் நாட்டு மக்கள் ஒன்று பட உறுதி பூணுவோம் நாட்டுப் பற்று உணர்வு கொண்ட சக்தி வளர்ப்போம் நாசம் செய்யும் வீணர்களும் ஓய்ந்து மாய்கவே நானிலத்தில் தர்மமொன்றே என்றும் வெல்லுமே (போற்றுவோம்) பத்துதலை இராவணனாய் அதர்மம் நின்றது தர்மம் காக்க ராம பாணம் சென்று வென்றது கெளரவர்கள் கயமைப் பாதை ஏற்று நின்றதால் பாண்டவர்கள் பார்வியக்க வெற்றி கண்டனர் (போற்றுவோம்) நமதுதேசம் ஹிந்து தேசம் என்ற உணர்வையே நமது மக்கள் பெற்றிடவே பணியில் மூழ்குவோம் ஹிந்து என்ற தத்துவத்தை மனதில் நாட்டியே ஹிந்து ராஷ்ட்ரம் வெல்கவென்று ஓங்கி சொல்லுவோம் (போற்றுவோம்) ********************************************************************************************** பாடல் பட்டியல் **********************************************************************************************