தேசீய பேரெழுச்சி மலர,
தேசபக்தர்களின் உள்ளம் களிப்புடன் பாரத மாதாவின் பூஜையில் சமர்ப்பணமாக
இயற்றப் பட்ட பாடல்கள் இவை.
இப்பாடல்களை வெவ்வேறு காலகட்டங்களில் பதிப்பித்து புத்தகமாக வெளியிட்டவர்கள், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம், தமிழ்நாடு.
எனவே இப்பாடல்களின் முழு உரிமையும் அவர்களைச் சார்ந்தது.
வெவ்வேறு காலகட்டங்களில் வெளி வந்த இவைகளை தொகுக்க வேண்டும் என்ற அவா எழுந்தது.
அந்த ஆசை நிறைவேற தங்கள் வசம் இருந்த புத்தகங்களைத் தந்து உதவியவர்கள்
01. திரு. திருஞானம்
02. திரு. பக்தவத்சலம்
03. திரு. தண்டபாணி
04. திரு. அரங்கநாதன்
குறுகிய காலத்தில் முடிக்கப் பெறும் என்று தோன்றிய முதற்கட்டத்தை எட்ட சுமார் 6 மாதங்களுக்கு மேலானது.
இத்தொகுப்பில் சுமார் 100 பாடல்களை திரு.விஜயராகவன் அவர்கள் கணிணியில் ஏற்றி தந்தார்.
இந்த முதல் நிலையை எட்டிய போது மனதில் ஆனந்தமும், நிறைவும் ஏற்பட்டது. இப்பணியில் ஈடுபடும் போது தொடர்ந்து ஒரு பெரியவரின் முகமும், குரலும் நினைவுக்கு வந்த வண்ணம் இருந்தது.
அவர், தமிழகத்தின் பொதுவாழ்வில் உள்ளவர்கள், தேசபக்தர்கள் என்று அனைவராலும் மதிக்கப்பெறுகின்ற வணக்கத்திற்குரிய வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள்.