Pages

Pages

ஜ முதல் ஹி வரை

பாடல் பட்டியல்

ஜய பாரதம் என்றே வானவர் வாழ்த்தி வணங்க ஜய ஜய ஹிந்துஸ்தானம் என்றே ஜன்ம பூமி நம் பாரதம் ஜெய் பவானி ​ஜெய் ​ஜெய் ஸ்வ​தேசம் என்ப​தே தியானம் ஹர ஹர பம்பம், நாடு காக்கும் வீரர் நாம் ஹிந்து இன்​றே ஒன்றுபடு ஹிந்து என்ற ​தேசியம் எழுந்த​மைந்த ​தெங்கு​மே ஹிந்து என்ற மந்திரம் ஹிந்து என்று சொல்லுவோம் ஹிந்து சங்க சத்தியத்தின் ஹிந்து சமய மக்க​ளெல்லாம் ஒன்று ​சேரு​வோம் ஹிந்து சமுதாய வாழ்வின் குலைவிற்கு காரணம் ஹிந்து தர்ம ​பேரி​கை ஹிந்து தர்மத்தி​னை சமயத்​தைப் பண்பி​னை ஹிந்து பூமியின் ​மைந்தர் நாம் ஹிந்து ராஷ்ட்ரக் ​கோயிலி​னை புது​மை ​செய்த மன்னவா ஹிந்து ராஷ்ட்ரத்தைப் புனரமைத்திடும் ஹிந்து ராஷ்ட்ரமிது ஹிந்து ​மைந்தர் நாம் ஹிந்து​வைப் ​போ​லெழுந்தான் கதி​ரோன் ஹிந்துக்கள் தாயகம் ஹிந்துஸ்தானம் ஹிந்துத்வம் என்பது ஹிந்து பூமி ஹிந்து ஜனம் ஹிந்துவாய் வாழ்​வோம் ஹிந்துவி னுள்ளே அணு அணு தோறும் ஹிந்துஸ்தானம் தன் நிலை ஹிந்துஸ்தானம் ஹிந்து தர்மம் ராஷ்ட்ர சங்க​மென்று நாம் ********************************************************************************************** பாடல் பட்டியல் **********************************************************************************************

ஜய பாரதம் என்றே வானவர் வாழ்த்தி வணங்க

( " ஜய பாரத ஜிஸகி " - என்ற மெட்டு ) ஜய பாரதம் என்றே வானவர் வாழ்த்தி வணங்க ஜய வாழ்வு நடத்திய வீரர் வழிவந்தோர் நாம் அகிலாண்ட சராசர மெல்லாம் எதிரொலி செய்ய அண்டத்தோர் பணிவுடன் கைகுவித்தே துதி செய்ய அறை கூவியழைத்தார் கோடிக் குரல்கள் முழங்க "ஆம் ! அகண்ட ஹிந்து ராஷ்ட்ரம் எங்கள" தென்றே அழியா நம் முந்தையர் பெருமை உணர்ந்தோர் நாமே அறிவுதயம் உலகில் முதலாய் ஆகியதிங்கே அரும்வேத அறிவினால் மோகம்மாய்த்து உயர்ந்ததுமிங்கே உலகோரின் விலங்கின வாழ்வினை மாற்றியமைத்தே உயர் மானிடராயவர் வாழ்ந்திட வழிசெய்தோம் நாம் உலகுக்கே வாழ்வின் ஜோதியளித்தோர் நாமே அருங்கலைகள் அனைத்தும் அறிந்தே முன்னணி நின்றோம் அலையலையாய் இடர்வர அஞ்சா நெஞ்சு படைத்தோம் வெறிகொண்ட எதிரியர் படைகள் நடுங்க அடித்தோம் வீரம் அதுமறவோம் மனந்தனில் என்றும் கொள்வோம் எழுந்திடுவோம் உலகினுக்கறிவு புகட்டிட நாமே பாடல் பட்டியல் **********************************************************************************************

ஜய ஜய ஹிந்துஸ்தானம் என்றே

  ஜய ஜய ஹிந்துஸ்தானம் என்றே சங்கொலி செய்திடுவோம் உலகம் முழுவதும் ஒளி வீசிய தேசம் உண்மை அறிவை உருவாக்கிய தேசம் உன்னத பாரத தேசம் எந்நாளும் ஒன்றெனவே செல்வோம் எழுந்தே ஒன்றாய் முன் செல்வோம் பாரத நாடும் பகவாக் கொடியும் ஹிந்து சமாஜமும் இனி ஒரு நாளும் தாழ்வடையாமல் பாரினில் ஓங்க கூடி உழைத்திடுவோம் எல்லோரையும் சாவை அணைத்திடுவோம் சுகமோ துயரோ எது வந்தாலும் பொருளும் புகழும் நீங்கி நொந்தாலும் ஹிந்து என்ற அபிமானம் பொங்கிட வாழ்வை இணைத்திடுவோம் அவ்வாறே சாவை அணைத்திடுவோம் ஹிந்து மக்களே நாம் தொழும் தெய்வம் ஹிந்து பூமியே எங்கள் ஸ்வர்க்கம் ஹிந்து ராஷ்ட்ர நிர்மாணம் தான் உயர் லட்சிய மாக்கிடுவோம் அந்நாளை விரை வினில் நோக்கிடுவோம் இரவும் பகலும் இடையின்றி உழைத்த பரம பூஜ்ய கேசவர் காட்டிய ராஷ்ட்ரீய ஸ்வயம்ஸேவக சங்கப் பாதையில் ஏகிடுவோம் கீதையை ஓதிடுவோம் பாடல் பட்டியல் **********************************************************************************************

ஜன்ம பூமி நம் பாரதம்

  ஜன்ம பூமி நம் பாரதம் கர்ம பூமி நம் பாரதம் நம்மைப் போல் பல கோடி மக்கள் அன்னையாம் நம் பாரதம் இமய பர்வதம் பெற்று வளர்த்த பார்வதி தேவி அவள் வளங்கள் நல்கி வறுமை நீக்கும் இலக்குமித் தாயவளே அறிவை வளர்த்து ஏற்றம் தந்திடும் சரஸ்வதியும் அவளே அன்னை துர்க்கைத் தேவியின் வடிவம் பாரதத் தாயவளே (ஜன்ம பூமி) இன்பத் தமிழும் ஹிந்தியும் தெலுங்கும் அவளது வாய்மொழியே மொழிகள் பலவாய் உணர்வில் ஒன்றாய் வாழ்வது நம் வழியே அன்பும் பண்பும் அவனியில் வீரமும் படைத்தது நம் நாடே அமைதியை நாட்டும் பணியில் வெற்றியை கண்டிடும் நம் நாடே (ஜன்ம பூமி) பாடல் பட்டியல் **********************************************************************************************

ஜெய் பவானி ​ஜெய் ​ஜெய்

  ஜெய் பவானி ஜெய் ஜெய் ஜெய் பவானி ஜெய் ஜெய் பவானி கோஷத்துடன் வெற்றிக் கொடி நாட்டினன் சத்ரபதி சிவாஜி ஹிந்து ராஜ்யம் கண்டனன் (ஜெய்பவானி) அரக்கர் படை ஆலயத்தை அழித்து வந்த வேளையில் அழித்து வந்த வேளையில் மாதர் கற்பு மாசுபட்டு மாண்பும் அழிந்த வேளையில் மாண்பும் அழிந்த வேளையில் சிங்கம் போல சீறியே சிவாஜி வீரன் வந்தனன் ஹிந்து ராஜ்யம் நிறுவினன் சத்ரபதி ஆகினன் (ஜெய்பவானி) ஒற்றையாக நின்ற போதும் உள்ள உறுதி கைவிடாமல் உள்ள உறுதி கைவிடாமல் வெற்றி வேட்கை ஊட்டினான் பாமரர்கள் உள்ளத்தில் பாமரர்கள் உள்ளத்தில் அஞ்சி வாழ்ந்த ஹிந்து மக்கள் நெஞ்சு நிமிர்ந்து நின்றனர் அரக்கர் படை தோற்றது அறத்தின் அரசு உதித்தது (ஜெய்பவானி) அகமும் புறமும் அச்சுறுத்தும் தீய சக்தி மாய்ந்திட தீய சக்தி மாய்ந்திட பாரதத்தின் பண்பு ஆட்சி பாரிலெங்கும் பரவிட பாரிலெங்கும் பரவிட ஹிந்து மக்கள் ஒன்று கூடி பண்பு கீதம் பாடுவோம் பண்பு கீதம் பாடியே பாரினை நாம் வெல்லுவோம் (ஜெய்பவானி) பாடல் பட்டியல் **********************************************************************************************

ஸ்வ​தேசம் என்ப​தே தியானம்

  ( " பனேஹம ஹிந்தகேயோகி" என்ற மெட்டு ) ஸ்வதேசம் என்பதே தியானம் செய்யும் சன்யாசி ஆகுவமே விடாமல் தர்மவான் கொடியே விளக்கும் நேசம் எய்துவமே. நிலவும் சீலமே மாலை நிறைந்த ஞானமே ஆடை நிமிர்ந்த தியாகமென் கொடியே விளக்கும் மேன்மை நாடுவோமே (ஸ்வதேசம்) ஸதா என் ஸ்வாச பாரதமே என்முகப் பிரகாச பாரதமே எனது ரக்தம் என் தேசம் எனது வியக்தி என் தேசம் (ஸ்வதேசம்) எனது வாழ்வினில் இன்பம் எனது வான இன்பமுமே எனது வீட்டினில் இன்பம் எனது நாட்டுயர்வே தான் (ஸ்வதேசம்) பாடல் பட்டியல் **********************************************************************************************

ஹர ஹர பம்பம், நாடு காக்கும் வீரர் நாம்

  ஹர ஹர பம்பம், நாடு காக்கும் வீரர் நாம் வெற்றி வாகை சூட வேண்டி அணிவகுத்து வருகிறோம் நாட்டினை உயர்த்திடும் ஹிந்து வீரதீரர் நாம் ஹிந்து தர்ம பாரம்பரியம் ஈடிலாத பொக்கிஷமாம் யுகயுகமாய் இந்த புகழ் பரப்பும் ஆதவன் யுத்தமோ அமைதியோ, கர்ம தர்ம புரட்சியோ எதிலும் எந்த நாட்டினர்க்கும் முன்னிலை வகிப்பவர் (ஹர ஹர பம்பம்) நாற்புறமும் தீயசக்தி முற்றுகை நடத்துது தாயகத்தைக் கூறுபோட ஒன்றுகூடித் தாக்குது காளிதேவி நம்முடன் தர்மதேவன் நம்முடன் காலவெள்ளப் போக்கினைத் திருப்பவல்ல தீரர் நாம் (ஹர ஹர பம்பம்) கண்கள் தோறும் தீச்சுடர், மூச்சிலே சூறாவளி இடியைப் போலக் காலடி வைரம் பாய்ந்த தோள்களாம் நாவில் வெற்றி மந்திரம் நெஞ்சில் கால பைரவன் பகைப் படையே ஓடிடு வெற்றிச்சேனை வருகுது (ஹர ஹர பம்பம்) பாடல் பட்டியல் **********************************************************************************************

ஹிந்து இன்​றே ஒன்றுபடு

ஹிந்து இன்றே ஒன்றுபடு ஹிந்து இன்றே ஒன்றுபடு ஹிந்து இன்றே ஒன்றுபடு பரம்பொருள் ஒன்றே பலவல்ல சத்தியம் ஒன்றே இரண்டல்ல ஹரியும் ஹரனும் அருக புத்தனும் ஒன்றின் பலப்பல வடிவங்கள் சித்தாந்தங்கள் ஏராளம் சித்தர்களுமே எண்ணற்றோர் எனினும் அனைத்தும் ஒன்றாய் இணைந்த பாவன கங்கை ஒன்றேதான் (ஹிந்து) ஏழை எளியோர் நலிந்தோரை ஏற்றமளித்தே உயர்த்திடுவோம் அனைவருள்ளும் உறங்கி வாழும் அமர சக்தியை எழுப்பிடுவோம் மேலோர் கீழோர் இங்கில்லை வர்ணமும் வர்கமும் இங்கில்லை அனைவரும் அன்னையின் ஆருயிர் மைந்தர் உடன் பிறந்தோர் உறவினரே (ஹிந்து) வழிப்பறி செய்த ஓர்வேடன் வானவர் நிலைக்கு உயர்ந்தவன் படகோட்டியினைத் தழுவிய ஒருவன் சோதர பாசம் உணர்த்தியவன் மீனவப் பெண்ணின் மகன் வந்தான் வேதங்களையே வகுத்தளித்தான் பிறவியில் உயர்வு தாழ்வுகளில்லை என்றே உணர்த்திய நாடு இது. (ஹிந்து) கம்பன் பாடிய ராம கதை வில்லியின் அற்புத பாரதமும் வீடுகள் தோறும் எதிரொலி செய்யும் ஈடிணையில்லா நாடு இது நாயன்மாரும் ஆழ்வாரும் வடலுார் வள்ளல் பெருமானும் ஆன்மநேயமாம் ஒருமையுணர்வால் அமுதம் பாய்ச்சிய நாடு இது. (ஹிந்து) பாடல் பட்டியல் **********************************************************************************************

ஹிந்து என்ற ​தேசியம் எழுந்த​மைந்த ​தெங்கு​மே

  ஹிந்து என்ற தேசியம் எழுந்தமைந்த தெங்குமே ஹிந்துஸ்தானம் புகழ் நிறைந்து நின்று உலகில் தங்குமே ஹிந்துஸ்தானம் தொன்றுதொட்டு ஹிந்துவால் அமைந்தது ஹிந்து தர்மப் பெருமை உலக மெங்கணும் மலர்ந்தது ஹிந்து தன்னை மறந்தபோது வேற்றுமை பிறந்தது வேறுபட்டு நின்றதாலே அடிமை நோயும் வந்தது (ஹிந்து என்ற தேசியம்) தேசியமே ஹிந்து தர்மம் என்ற இந்த சத்தியம் நேச, நல்மருத்துவனாம் கேசவனின் வைத்தியம் தேசம் ஹிந்து, தர்மம் ஹிந்து, தேச மக்கள் ஹிந்துவே பாசமுள்ள ஓர் குடும்ப சோதரர் நாம் பந்துவே (ஹிந்து என்ற தேசியம்) நண்பர் போல வந்து நலம் செய்வர்போல நடித்து நம் பண்பெலாம் சிதைத்துடன் பிறந்த பாசம் போக்கிடும் புண்புழுத்துடல் குறைக்கும் நோய் நிகர்த்த தீயர்நம் கண் அவித்துக் குருடராக்க இன்னும் இங்கிடங்கொடோம் (ஹிந்து என்ற தேசியம்) மெச்ச பாரதத்தைப் பாரின் அரியணையில் ஏற்றுவோம் அச்சம் நீங்க அனைவர் மனத் தன்புவிளக்கேற்றுவோம் உச்ச நீச பேதமெலாம் காற்றிலிட்டுத் தூற்றுவோம் இச்சகத் துயர்ந்ததிந்து ராஷ்ட்ரமென்று சாற்றுவோம் (ஹிந்து என்ற தேசியம்) பாடல் பட்டியல் **********************************************************************************************

ஹிந்து என்ற மந்திரம்

  ஹிந்து என்ற மந்திரம் சங்கம் ஒன்றே தந்திரம் வாய்மையே வெல்லும் தர்மமே வெல்லும் ஹிந்து சங்க சத்தியத்தின் சிங்கநாதம் கேட்குது ஒற்றுமை வளர்ந்து ஓங்குது வேற்றுமை பறந்து ஓடுது (ஹிந்து) இமயமலை மகுடமாகுமே குமரிமுனை பாதமாகுமே காவிரி நீரே...கங்கை தண்ணீரே குருதியிலே கலந்து பாயுதே ஒற்றுமை வளர்ந்து ஓங்குதே (ஹிந்து) காளிதாசன் கவிநயத்திலும் பாரதியின் பாட்டுணர்விலும் வள்ளுவன் மொழியே கீதையின் ஒலியே ஜீவனாக மிளிர்கின்றதே ஒற்றுமை வளர்ந்து ஓங்குதே (ஹிந்து) கட்டபொம்மன் தன்னையளித்தான் பகத்சிம்மன் இன்னுயிர் ஈந்தான் ஜாலியன் வாலா அந்தமானே சுதந்திர யாக குண்டமே (ஹிந்து) கண்ணப்பனும் தன் கண் கொடுத்தான் ததீசியும் தன்னெலும் பீந்தான் கண்ணகி கற்பே சீதையின் தூய்மை பண்பாட்டின் மூச்சாகுமே.....(ஹிந்து) பாடல் பட்டியல் **********************************************************************************************

ஹிந்து என்று சொல்லுவோம்

  ஹிந்து என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து செல்லுவோம் இந்த நாடு ஹிந்து நாடு என்று ஓங்கிச் சொல்லுவோம் அந்தணனும் ஹரிஜனனும் ஹிந்துதானய்யா அன்புடனே இதையுணர்ந்து வாழ்ந்து காட்டுவோம் ஆலயங்கள் பொதுக்குளங்கள் அனைவருக்குமே அன்பர்களே இதை மறந்தால் துன்பம் சூழுமே ஆளவந்த அன்னியர்கள் மத வெறியர்கள் மதமாற்றம் செய்ததாலே தொல்லைப்படுகிறோம் மதங்களுக்குத் தனிச் சட்டம் மோசடியன்றோ? இந்த நிலை மாறிடவே குரல் கொடுக்கின்றோம் சிறுபான்மை ஓட்டு வாங்க சிறப்பு சலுகையா? பெரும்பான்மை உரிமைகளை மிதித்து அழிப்பதா? இரண்டாந்தரக் குடிமகனாய் ஹிந்து வாழ்வதா? இந்நிலை மாற்றிடவே போர் தொடுக்கின்றோம் தட்டிக் கேட்க நேரமிது தயக்கமேனய்யா? நீதி கேட்கும் சத்தியப் போர் அணியில் சேரய்யா! பாடல் பட்டியல் **********************************************************************************************

ஹிந்து சங்க சத்தியத்தின்

  ஹிந்து சங்க சத்தியத்தின் சங்க நாதம் கேட்குது ஆய்ந்து பார்க்க நேரமில்லை அதிலிருக்கும் நன்மையை மாந்தருக்குள் சமூக வாழ்வு மாறுமிந்த பொழுதினில் சோர்ந்திடாது நமது நாட்டைத் துயிலெழுப்பும் ஓசையால் இடி இடித்து மின்னல் மின்னி இருள் கவிழ்ந்து எங்கணும் கிலி பிடித்து உலகமெங்கும் கிடுகிடுத்த வேளையில் விடுவிடுத்து ஹெட்கேவார் வேண்டி நின்று கூவினார் துடிதுடித்து உண்மை போற்றும் தொண்டர் நாமும் கூடுவோம் பாடல் பட்டியல் **********************************************************************************************

ஹிந்து சமய மக்க​ளெல்லாம் ஒன்று ​சேரு​வோம்

  ஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம் பந்தத்தோடு இணக்கமாக வாழ்ந்து காட்டுவோம் எந்தமதமும் இதற்கு ஈடு இல்லை என்னுவோம் முந்துபுகழ் ஹிந்து தர்மம் முழங்கச் செய்குவோம் ஆதிஆதி காலம் தொட்டு வந்த மதமிது ஆதிமூல நாயகனைக் கண்ட மதமிது ஓதிஓதி உண்மைதனை உரைத்த மதமிது நீதிதேவன் கோயில்கொண்டு நிலைத்த மதமிது அன்புவழி காட்டுவதும் ஹிந்து தர்மமே இன்பநிலை கூட்டுவதும் ஹிந்து தர்மமே முன்பு உலகை உயர்த்தியதும் ஹிந்து தர்மமே துன்ப நிலை நீக்கியதும் ஹிந்து தர்மமே பெற்ற தாயைப் பிறந்த மக்கள் வெறுப்பதுமுண்டா உற்ற தந்தை இல்லையென்று உரைப்பவருண்டா முற்றும் உணர்ந்து ஹிந்த தர்ம முறையறியாமல் தெற்றுக் கூறும் தீயர்மனம் திருந்தச் செய்குவோம் உனது நாடு உனது வேதம் உரிமைக்காக வா தனது மானம் தனது மதம் தர்மம் காக்க வா இனிய பூமி எங்கள் பூமி என்று சொல்ல வா புனித மதம் ஹிந்து மதம் என்று புகழ வா பாடல் பட்டியல் **********************************************************************************************

ஹிந்து சமுதாய வாழ்வின் குலைவிற்கு காரணம்

  ஹிந்து சமுதாய வாழ்வின் குலைவிற்கு காரணம் என்ன வென்று அறிவதெப்போ (ஹிந்து) சுய நலத்தாலும் அன்னியராலும் பிரிந்து பிரிந்து நாம் வேற்றுமை கண்டோம் (ஹிந்து) பாவி ஜயச்சந்திரன் சுயநலமன்றோ அன்னியனை நாட்டில் அழைத்தது மன்றோ (ஹிந்து) முப்பது கோடி ஹிந்துமக்கள் நாம் இன்று ஒன்று திரண்டெழுந்தால் எதிர்க்கவும் துணிவரோ? (ஹிந்து) =============================================== 1988 பாமாலையில் "முப்பது கோடி ஹிந்துமக்கள்" என்பது "கோடி கோடி ஹிந்துமக்கள்" என்றுள்ளது பாடல் பட்டியல் **********************************************************************************************

ஹிந்து தர்ம ​பேரி​கை

  ஹிந்து தர்ம பேரிகை எட்டுத் திக்கும் முட்டவும் விந்தையாய் முழங்குது வீறுடன் கிளம்புவோம் வெற்றி கொண்டு மீளுவோம் வெற்றி கொள்வோம் இல்லையேல் வீர ஸ்வர்க்கம் எய்துவோம் பற்றி நம் கொடியினைப் பார் வணங்கச் செய்குவோம் பக்தியோ டுயர்த்துவோம் பாரதி அருள் தரும் பார்வதி பயங்கரி தீரமைந்தர் உன்பதம் தேடி வந்தடைந்துள்ளோம் திண்மையோ டெழுந்துள்ளோம் சிங்க வாகனத்து நீ சீறியே எழுந்திடில் பொங்கும் உன் சினத்தினால் பூமியும் நடுங்குமே போர்க்கடல் கலங்குமே பர்வதம் நதி வனம் பாலையும் கடந்தெதிர் சர்வமும் விலக்கியே சங்க நாதம் செய்குவோம் சக்தியோடு சொல்லுவோம் தேச சேவை ஒன்றையே தேற்றமாகக் கொள்ளுவோம் மாசிலாத பாரதம் மாண்புகொள்ளச் செய்குவோம் மாபலம் படர்த்துவோம் பாடல் பட்டியல் **********************************************************************************************

ஹிந்து தர்மத்தி​னை சமயத்​தைப் பண்பி​னை

  ஹிந்து தர்மத்தினை சமயத்தைப் பண்பினை நாக்கில் நரம்பின்றி துாற்றுவோரே அன்னிய நாட்டுக்கு ஆரத்தி சுற்றியே அனுதினம் புகழ்ந்திடும் மர்மமென்ன ? (ஹிந்து) ஹிந்து புராணங்கள் குப்பைகள் என்று நீ நீட்டியே முழக்கியே பேசுகிறாய் மாற்று மதத்தினர் மூடத்தனத்தை நீ மூடி மறைத்திடும் மர்மமென்ன ? (ஹிந்து) அங்கேபார் ரஷ்யாவை அமெரிக்கா சீனாவை என்றே நீ காட்டிட கூசவில்லை பாரத நாட்டினைப் பாராட்டிப் பேசிட வாயை திறக்காத மர்மமென்ன ? (ஹிந்து) ஹிந்து மதத்தினை வெறுப்புக்கு ஆளாக்கி நம்பிக்கை குலைத்திட வேலை செய்வாய் மத மாற்றும் சக்திகள் வெற்றிக்கு வித்திட காட்டிக் கொடுத்திடும் மர்மமென்ன ? (ஹிந்து) வள்ளுவன் கம்பனும் சேக்கிழார் பெருமானும் சங்க இலக்கிய மேதையரும் பாசுரம் பாடிய பக்தர்களும் உந்தன் பார்வையில் தாழ்ந்ததன் மர்ம மென்ன ? (ஹிந்து) காசுக்கும் கவர்ச்சிக்கும் இரையாகி விட்ட நீ பாரத மேன்மையைப் பாட வேண்டாம் உன்னுடை பாராட்டு மாசு படுத்திடும் கொச்சைப் படுத்தியே தாழ்த்திவிடும் (ஹிந்து) எங்கள் திருநாட்டின் தர்மத்தின் மேன்மையை உலகத்துச் சான்றோர்கள் உணர்ந்து விட்டார் தன்னை உணர்ந்த எம் சோதர ஹிந்துக்கள் உலகில் அதன் புகழ் பாடிடுவார் (ஹிந்து) வருந்திடு திருந்திடு மன்னிப்புக் கோரிடு காலங்கள் மாறின கண்டு கொள்வாய் வந்திங்கு வாழ்ந்திடு வணங்கி பணிந்திடு ஹிந்து எழுச்சிக்கு ஆக்கம் கொடு (ஹிந்து) பாடல் பட்டியல் **********************************************************************************************

ஹிந்து பூமியின் ​மைந்தர் நாம்

  ஹிந்து பூமியின் மைந்தர் நாம் வந்தனை செய்வோம் அன்னையினை ராஷ்ட்ர த்வஜமாம் பகவக் கொடியை விண்ணில் உயர்த்திடுவோம் புவியில் முதிர்ந்த நாடும் இதுவே கவிகள் கனவின் உருவும் இதுவே மானிடரெல்லாம் பிறவி எடுக்க தவம் செய் நாடிதுவே (ஹிந்து) தருமம் மானிட உடலினைப் பெற்றே தவழ்ந்து நடந்து வளர்ந்த நாடு மனிதனை தெய்வம் ஆக்கிட வல்ல பண்புடை நாடிதுவே (ஹிந்து) வீர மரபிலே தோன்றியவர் நாம் உலகினை உயர்த்திடத் தோன்றியவர் நாம் நம்மை அறிந்தே எழுந்து நின்றால் நானிலம் பணியாதோ (ஹிந்து) கேசவர் காட்டிய எளிய நெறியிலே மாசிலாத மன நோன்புடனேகி கோடிக்கோடி உள்ளம் ஒன்றாய் மாலை தொடுத்திடுவோம் (ஹிந்து) பாடல் பட்டியல் **********************************************************************************************

ஹிந்து ராஷ்ட்ரக் ​கோயிலி​னை புது​மை ​செய்த மன்னவா

  ஹிந்து ராஷ்ட்ரக் கோயிலினை புதுமை செய்த மன்னவா வீரனே, தலைவனே உன் நினைவினால் கிளர்ந்துளோம் தன்னந் தனியாய் எழுந்து நின்று தருமம் காக்கத் துணிந்தனை மாமலையாம் அரக்கர் அரணைத் தவிடு பொடி செய்தனை (வீரனே) நிராசை எனும் பேயினையே ஓட்டி உயிர் ஊட்டினை உறங்கிய மாசக்தியினை சாதனையால் எழுப்பினை (வீரனே) வெற்றி காண்பேன் என்று கடும் விரதம் பூண்டு உழைத்தனை தாழ்ந்து கிடந்த பகவக் கொடியை புவி வணங்கச் செய்தனை அடிமை யல்ல நாடாளும் சக்தி நமக்கு உண்டு எனும் சக்தியத்தைநாட்ட வேண்டி சத்ரபதி ஆகினை (வீரனே) ஸ்வதர்மம், தேசம், ராஷ்ட்ரமெனும் மந்திரங்கள் தந்தனை லட்சியத்தை வாழ்ந்து காட்டி அமர தீபம் ஆகினை (வீரனே) பாடல் பட்டியல் **********************************************************************************************

ஹிந்து ராஷ்ட்ரத்தைப் புனரமைத்திடும்

  ஹிந்து ராஷ்ட்ரத்தைப் புனரமைத்திடும் ஹிந்து சிம்மமே எழுந்து வா கண் விழித் தெழுந்தே பாய்ந்து வா இமய மகுடமும் பாதத்தைக் கடலும் வந்திக்கும் தாயவள் அன்புப் பாசமும் நேசமும் பிணைத்திட உலகே நம் குடும்பம் சமத்துவ ஜோதி எங்கும் பரவிட சுயநலம் துறந்து வா வா (ஹிந்து ராஷ்ட்ரத்தை) வேத ஞான விஞ்ஞான வளங்களும் முதலில் மலர்ந்ததிங்கே அறிவும் அருளும் ஆய கலைகளும் பண்பும் மலர்ந்ததிங்கே தன்மானத் தீ தேசபக்தியும் ஓங்க உழைத்திட வா வா (ஹிந்து ராஷ்ட்ரத்தை) சைவ வைணவமும் சாக்த பெளத்தமும் ஜைனமும் ஒன்றே தான் பெயர்கள் பலபல ஆயினும் இறுதி பரம்பொருள் ஒன்றே தான் நலமாய் வளமாய் அனைவரும் வாழ வேற்றுமை அகற்றிட வா வா (ஹிந்து ராஷ்ட்ரத்தை) கர்ம வீரர் அடியார் துறவியரும் நாட்டுக்கென வாழ்ந்தார் அதியுன்னத நிலை நாடு எய்திட கனவுகள் பல கண்டார் நனவு ஆகிட நானிலம் வியந்திட மோகம் களைந்தே வா வா (ஹிந்து ராஷ்ட்ரத்தை) பாடல் பட்டியல் **********************************************************************************************

ஹிந்து ராஷ்ட்ரமிது ஹிந்து ​மைந்தர் நாம்

  ஹிந்து ராஷ்ட்ரமிது ஹிந்து மைந்தர் நாம் என்று முழக்கம் செய்திடுவோம் உலகமனைத்தும் எதிர்த்து வரினும் சத்திய மிதனை நாட்டிடுவோம் அலைஅலையாய் பல அன்னியர் வரினும் நிலை குலையா மாவீரர் நாம் உலகம் உய்ந்திட ஞானச் செல்வம் வாரிவழங்கிய வள்ளல் நாம் உலகப் பேரரசாட்சி நடத்தினும் மண்வெறியில்லா மாண்பினர் நாம் தியாகமும் தவமும் நேர்மை ஒழுக்கமும் வாய்ந்த பரம்பரைத் தோன்றல் நாம் ஹிந்துவை உலகம் பாடிப்புகழ்ந்தே வாழ்த்தித் துதித்து வணங்குகையில் சொந்த சமயமும் அறமும் மறந்தே முந்தையர் பாதையை விடுப்போமோ? (ஹிந்து) ஹிந்து சிற்பியர் உழைப்பினாலே எழுந்த கோயில் பாரதமே ஹிந்து மேதையர் பேணி வளர்த்த கலைக் களஞ்சியம் பாரதமே ஹிந்து முனிவர்தம் மாதவத்தாலே உதித்த பேரொளி பாரதமே ஹிந்து வீரர்தம் உதிரத்தாலே விளைந்த நற்பயிர் பாரதமே ஹிந்து ஹிந்துவென பாரதநாட்டின் அணு அணுதோறும் முழங்குகையில் அஞ்சிக்கெஞ்சி மனவாட்டம் கொண்டே தலைகுனிந்தினி நிற்போமோ? (ஹிந்து) காசியும் கயிலையும் ராமேஸ்வரமும் நம்முடைய ஒருமை உணர்த்திடுது ராம, கிருஷ்ணர் தம் பக்தி யிழையிலே நம்முடை உள்ளம் இணைந்திடுது செப்பும் மொழி பதினெட்டிடையேயும் சிந்தனை ஒன்றே வாழ்ந்திடுது காடும், மலையும் கடந்துடைத்துநம் ஒற்றுமை அருவி பாய்ந்திடுது ஒன்று ஒன்று என பாரத நாட்டின் வரலாறெல்லாம் பேசுகையில் ஒருமை மறந்தே வலிவுகுன்றி நாம் தன்னுணர் விழந்து வீழ்வோமோ? (ஹிந்து) ஹிந்து மைந்தர் தம் உள்ளந்தோறும் தன்மானத்தீ மூட்டிடுவோம் அன்பு இழையினால் பாரதநாட்டை ஒன்று பிணைத்து நிறுத்திடுவோம் கோடிகோடி கரம் பாரதத்தாயின் தொண்டில் உயர்ந்திடச் செய்திடுவோம் கோடிகோடி குரல் பாரதத்தாயின் பண்ணிசைத்திடக் கண்டிடுவோம் பாரத நாட்டின் வீடுகள் தோறும் சங்க மந்திரம் முழக்கிடுவோம் வீறு கொள்ளுவோம் வெற்றி காணுவோம் நவயுகத்தினை நிறுவிடுவோம் (ஹிந்து) பாடல் பட்டியல் **********************************************************************************************

ஹிந்து​வைப் ​போ​லெழுந்தான் கதி​ரோன்

  ஹிந்துவைப் போலெழுந்தான் கதிரோன் இனிய முகத்துடனே வந்தனை செய்திடுவோம் - வாழ்வில் நன்மைகள் செய்திடுவோம். கங்கை காவிரி குமரி துறைகளில் பூம்புனல் ஆடிடுவோம் ஆஹா! புதுப்புனல் ஆடிடுவோம் சங்க்ராந்தி தைப் பொங்கல் நாளினில் வாழ்த்துக்கள் கூறிடுவோம் ஆஹா! வளம் பரிமாறிடுவோம் (ஹிந்துவைப் போல்) செங்கதிர் ஒளியினை வீசிடும் பகவாக் கொடியினை ஏற்றிடுவோம் - ஏற்றி போற்றிப் பணிந்திடுவோம் மங்கல மஞ்சள் கரும்புடன் பொங்கல் மகிழ்வுடன் வழங்கிடுவோம் - களத்தில் மனம் களித்தாடிடுவோம் (ஹிந்துவைப் போல்) தாயினும் மேலாம் ஆவினம் கன்று காளையைத் தொழுதிடுவோம் - நமது தர்மத்தைக் காத்திடுவோம் ஓய்வொழிவறியா உழைப்பினை நல்கும் உழவரைப் போற்றிடுவோம் - உழைப்பால் தேசத்தை உயர்த்திடுவோம் (ஹிந்துவைப் போல்) பாடல் பட்டியல் **********************************************************************************************

ஹிந்துக்கள் தாயகம் ஹிந்துஸ்தானம்

  (செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற மெட்டு) ஹிந்துக்கள் தாயகம் ஹிந்துஸ்தானம் இது ஹிந்துக்கள் கட்டிய கோயிலடா பாரதத் தாய் இங்கு தெய்வமடா இந்த பக்தியில் சக்தி பிறக்குதடா! உதிரத்தைப் பாலாக்கி ஊட்டி விட்டாள் - எங்கள் உள்ளத்தில் தர்மத்தை மூட்டி விட்டாள் நாவினில் சுவையாக நாசியில் மூச்சாக நாடி நரம்பில் நிலைத்து விட்டாள் தெய்வ வடிவங்கள் பலகோடி ஆனாலும் தெய்வ சக்தி எங்கள் தாயவளே எந்தக் கோயிலிலும் காட்சியளிப்பவள் எம்முயிர் பாரத தேவியடா! விடுதலை வந்தது என்று சொல்லி - நம்மை ஆடவைத்தார், பள்ளுப்பாட வைத்தார். ஆடி முடிந்ததும் ஆலயம் போனால் அங்குள்ள கோரத்தை என்ன வென்போம்? பாரதத் தாயவள் கைகள் இரண்டையும் பாதகர் யாரவர் வெட்டியவர்? ரத்தம் கசிந்தவள் கதறிடும் காட்சிகள் இரவு பகலாகத் தாக்குதடா! என்ன அநியாயம்,என்ன அக்கிரமம்! எவரிந்தப் பேய்ச் செயல் செய்தவர்கள்? பாசமும் பக்தியும் நன்றியும் கொன்றவர் பெற்றவளை விற்ற பேதைகள் யார்? மாற்று மதத்தினர் வன்முறையைக் கண்டு மூர்க்கரின் கால்களில் வீழ்ந்தவர்கள் தெய்வத்தை வெட்டியே பங்கு கொடுத்தார் தேசப்பகைவர்க் கிடம் கொடுத்தார். பேயறைந்தவன் போல் ஏனடா நிற்கிறாய்? பழியைத் துடைத்திட வந்திடடா சூடம் கொளுத்திடு சூளுரை செய்திடு சூரத்தன மெல்லாம் காட்டி விடு வெட்டுண்ட அங்கங்கள் இணைத்திடுவோம் இனி வெட்டுப்படாமலே காத்திடுவோம் பிறமதம் சென்றவர் தாய்மதம் வந்திடப் பேரியக்கம் உருவாக்கிடுவோம் இந்தக் கண்ணால் இதைக்காணவேண்டும் என இந்தக் கணமே துணிந்திடுவோம் பித்துப் பிடித்தவன் போலிந்த வித்தினைப் பத்துத் திசையிலும் ஊன்றிடுவோம் பாடல் பட்டியல் **********************************************************************************************

ஹிந்துத்வம் என்பது ஹிந்து பூமி ஹிந்து ஜனம்

  ஹிந்துத்வம் என்பது ஹிந்து பூமி ஹிந்து ஜனம் ஹிந்துத்வம் என்பது ஹிந்து சாமி ஹிந்து மனம் சோறுபோடும் வயல் நமக்கு பூமாதா, ஹிந்துத்வம், ஆரமுதப் பசு நமக்கு கோமாதா, ஹிந்துத்வம் நீரமுத நதி நமக்கு கங்கையம்மன் ஹிந்துத்வம் பாசத்துடன் நமை வளர்க்கும் இயற்கையன்னை ஹிந்துத்வம்! (ஹிந்துத்வம் என்பது ) படிப்புக்கு ஆதி தேவதை சரஸ்வதி இது ஹிந்துத்வம் பணத்துக்கு அதி தேவதை லட்சுமி இது ஹிந்துத்வம் பலத்துக்கு அதி தேவதை துர்க்கை இது ஹிந்துத்வம் உலகத்து நாயகியே பெண்தான் இது ஹிந்துத்வம்! (ஹிந்துத்வம் என்பது ) எல்லையற்ற பரம்பொருளே எங்கும் நின்று நிலவுவதால் எல்லோரும் நம்மவரே என்கின்ற சத்தியத்தை வள்ளுவரும் சேக்கிழாரும் கம்பர் அவ்வை பாரதியும் தெள்ளு தமிழ்ப் பாடலாக தந்ததுதான் ஹிந்துத்வம்! (ஹிந்துத்வம் என்பது ) ஹிந்துத்வம் என்பது ஹிந்து வீரம் ஹிந்து அன்பு ஹிந்துத்வம் என்பது ஹிந்து தர்மம் ஹிந்து பண்பு ஹிந்துத்வம் என்பது ஹிந்து குடும்பம் ஹிந்து வீடு ஹிந்துத்வம் என்பது ஹிந்து கோயில் ஹிந்து நாடு! (ஹிந்துத்வம் என்பது ) தீண்டாமை, சாதி, மோதல், மதமாற்ற மோசடிகள் தீண்டாமல் தேசத்தை தீவிரமாய் காத்திடுவோம் வேண்டாத பழக்கங்களோ வீணான சுயநலமோ தீண்டாத வாழ்க்கைதான் நமக்கெல்லாம் ஹிந்துத்வம்! (ஹிந்துத்வம் என்பது ) பாடல் பட்டியல் **********************************************************************************************

ஹிந்துவாய் வாழ்​வோம்

  ஹிந்துவாய் வாழ்வோம் - காப்போம் ஹிந்துஸ்தான மிதை வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் ஹிந்துவாய் வாழ்வோம் - காப்போம் ஹிந்துஸ்தான மிதை உண்ணும் உணவிலும் உடுக்கும் உடையிலும் வீட்டினை அமைப்பதிலும் - நம்முடை வீட்டினை அமைப்பதிலும் ஹிந்துப் பண்பினைக் காத்து அன்னிய மோகம் வெறுத்து (ஹிந்துவாய்) ஜாதிகள் பேசி தாழ்ந்தது போதும் பேதத்தை விட்டிடுவோம் - நாமினி ஒன்றாய் வாழ்ந்திடுவோம் ஹிந்து என்பதில் பெருமிதம் ஹிந்து என்றே அறிமுகம் (ஹிந்துவாய்) பிறவியில் உயர்வு தாழ்வுகள் சொல்வது பேதமை என்றிடுவோம் - தீண்டாமை பாவம் என்றிடுவோம் ஹிந்து அனைவரும் ஓரினம் உணர்ந்தால் உயரும் நம் இனம் (ஹிந்துவாய்) சுதந்திர வாழ்வும் ஜனநாயகமும் சமதர்மக் கொள்கைகளும் - சோஷலிச சமதர்மக் கொள்கைகளும் ஹிந்து வாழ்ந்தால் வாழும் ஹிந்து தாழ்ந்தால் அழியும் (ஹிந்துவாய்) சிறுநரி ஓலம் கேட்டே சிங்கம் தயங்கி விடலாமோ? - தளர்ந்து ஒதுங்கி விடலாமோ? "என்னுடைய தர்மம் உயர்ந்தது' என்றே உரக்க முழங்கிடுவோம் - "நான் ஒரு ஹிந்து" என்றிடுவோம் (ஹிந்துவாய்) பாடல் பட்டியல் **********************************************************************************************

ஹிந்துவி னுள்ளே அணு அணு தோறும்

  ஹிந்துவி னுள்ளே அணு அணு தோறும் இயங்கி நிற்கும் ஹிந்து நானே 1. சிரித்து திரிபுரம் எரித்த சிவனின் சீற்றத் தீ நான் அறிந்திடு வீரே சமரை முழக்கி உலகை நடுக்கிய உடுக்கை ஒலி நான் உணர்ந்திடுவீரே ரண சண்டிகையின் தாகத்தீ நான் துர்க்கைத் தாயின் பேய் சிரிப்பொலி நான் இறுதியை உணர்த்தும் யமனின் குரல் நான் இடுகாடதனில் எரியும் தீ நான் இதயந்தனிலே கொண்டிடும் தீயால் இப்புவியெல்லாம் எரிக்க வல்லேன் இனியொரு நாளில் நிலம் நீர் வானம் அனைத்தும் எரிகினும் வியப்பொன்றில்லை 2. அஞ்சேல் என்றே அருள் வரம் அளித்திட ஆதியில் இங்கே தோன்றியவன் நான் பாலினை அமுதினை உண்டோர் மாய்ந்தார் நஞ்சைப் பருகியும் நான் அமரன் காண். நஞ்சின் தீயால் நானிலம் வெந்தே நாசம் நாசம் என்றே கதறி என்னைப் பாடிப் பூஜை செய்ய எடுத்தே நஞ்சைக் குடித்தே தாகம் தீர்த்தே உலகைக் காத்தேன் நானே நானே நானாய் நாராயணனாய் நீலகண்டனாய் வந்தேனிதனில் ஐயம் சற்றும் இல்லை அறிவீர் 3. அனைத்துலகுக்கும் அமர அறிவினை அளித்த உயர்குரு நானென்றறிவீர் பிரம்ம ஞானமும் முக்தி மார்க்கமும் காட்டி உணர்த்திக் கண் திறந்தேன் நான் என்னுடைய வேதம் என்றும் அமரம் வேத ஜோதியோ என்றும் தீவிரம் உலகோர் மனதின் இருட்கண மெல்லாம் ஒரு கணமுமிதன் முன் நின்றிடுமோ "ஓம் ஓம்" எனவே ஒலிக்கும் என் குரல் விண்ணை முட்டிக் கடலைக் கலக்கி நாற்றிசை எங்கும் விரவிப் பரவி நானிலமெங்கும் அகமகிழ் வூட்டும் 4. உலகின் வீரர் வாழ்வுப் பாதையில் தோல்விகள் கண்டே தயங்கி நின்று அனைத்து மிழந்தே கண்ணீர் சிந்தி சோகம் கொண்டே திகைத்த போது வந்தேன் ஆங்கே கருணை கொண்டு ஞான விளக்கை கையினில் ஏந்தி திசை யறியாத மாந்தர் எழுந்தார் தீர்ந்தார் உறக்கம் நடந்தார் நெறியில் உலகச் சூழலில் சிக்கி மயங்கி பாதையி(ன்) நடுவே வீழ்ந்திடு வோரை பாதை காட்டியே நெறி நடத்திடக் கொண்டேன் உறுதி என்பணி அதுவே 5. அந்த காரமே சூழ்ந்த உலகினில் ஒளியூட்டிட்ட தேசுடையோன் நான் என்னுடை மேன்மை எண்ணம் கொண்டே என்றோ நான் இப் புவிதனை யழித்தேன்? என்னுடை ஆருயிர் அளித்தெனு மென்னைச் சரணடைந் தோரைக் காத்தவன் நானே என்னுடை வாக்கை நம்பா விடிலோ சாட்சி கூறிடச் சரிதம் உண்டு. பாரத நாட்டின் ஒவ்வொரு அணுவும் பல நூற்றாண்டின் உறக்கம் விழித்தே "வெல்க ! ஹிந்து" என்றே இன்று அதிர முழக்கின் வியப்பொன்றில்லை 6. காவிய மோவியம் தீட்டிய கரமிது கலையெலாம் பயின்ற வல்லுனக் கரமிது வாளினை ஏந்திய வீரக் கரமிது அனைத்தும் துறந்த வைர மனமிது காலடி தோன்றிக் காஷ்மீர் ஏகி வேத வலிமையை நாட்டியவன் நான் பவானி தந்த வாளினை ஏந்தி பாரத தர்மம் நாட்டியவன் நான் வாணிபத்தாலே பொருட்குவை சேர்த்தேன் திக் விஜயத்தால் புகழ் பல சேர்த்தேன் வாரி வழங்கி யாகம் செய்தேன் மரவுரி தரித்துக் கானகம் சென்றேன் 7. உலகினை எல்லாம் அடிமை கொண்டிட என்றேனும் நான் எண்ணிய துண்டோ? "மனத்தை அடிமை ஆக்கிடு" என்றே ஆகா! பண்புப் பாட மளித்தேன் ராமன் கிருஷ்ணனின் பெயர்கள் பரப்பிட அநீதி என்றும் புரிந்த துண்டோ? உலகத்தோரை ஹிந்து வாக்கிட நரபலி என்றும் வாங்கிய துண்டோ? மசூதி சர்ச்சு மாடங்களையே என்றேனும் நான் அழித்த துண்டோ? "பூமியை" அல்ல அனைத்து மனிதரின் "மனத்தை" வென்றிட உறுதி பூண்டுளேன் 8. இதயத் தூறிடும் உதிர மளித்தே உலகத்தோரை ஊட்டி வளர்த்தேன் மாந்தரிலே நான் பேதங் காணேன் விரிந்து பரந்தது எந்தன் உள்ளம் உலகம் உதைத்து விரட்டிய மாந்தரை நீட்டிய கரத்தொடு ஏற்றிட்டேன் நான் கொள்ளையடித்தவர் சுரண்டிட விட்டேன் அக்ஷய பாத்திரம் குறைவு படாதிது என்னுடை வைரம் கவர்ந்தே சென்று பரங்கியர் அமைத்த அரச மகுடமும் நாளை இக்கால்களில் வீழ்ந்திடுமாயின் வியப்பொன்றில்லை வியப்பொன்றில்லை 9. வீரமைந்தன் நான் என்னுடை அன்னை தீக்குளித்தனள் பலபல முறைகள் அக்பரின் மைந்தரைக் கேட்டிடுவாய் நீ "மீனா பஜாரும் நினைவுண்டோ?" வென "சித்தூர் கோட்டையில் சீறி எழுந்த தீப்பிழம்புமே நினைவுண்டோ?" கேள்! ஆகா! ஆயிரம் அன்னையர் ஆங்கே அக்கினி புகுந்து அமரர் ஆயினர் அந்தத் தீயும் அணைந்திட வில்லை அணு அணுதோறும் காத்துள்ளேன் அதை என்றாயினும் அது எரிமலை போலே தீக்கக்கிடினும் வியப்பொன்றில்லை 10. "நான் ஒரு அணு" பெருங்கடல் என் ஹிந்து சமாஜம் நான் ஒரு சிறு துளி திவிலை அணுவே எங்கள் உறவு என்றும் வாழும் நான் உறுப்பு இது என் சமாஜம் உடல் பொருளெல்லாம் இதனிடம் பெற்றேன் என்னுடை ஜீவன் இதனுடைத்தே தான் எல்லாம் இதற்கென அர்ப்பணம் செய்வது ஒன்றே எந்தன் உரிமை ஆகும் சமாஜம் இதனில் இரண்டற இணைந்தேன் சமாஜம் இதனின் சேவகனே நான் சமாஜம் வாழ்ந்திட என்னை நானே பலியாக்கிடுவேன் அச்சம் இல்லை பாடல் பட்டியல் **********************************************************************************************

ஹிந்துஸ்தானம் தன் நிலை

ஹிந்துஸ்தானம் தன் நிலை எங்கு தான் மறைந்ததோ ! ஹிந்து தர்ம சத்தியத்தின் உண்மை எங்கு போயிற்றோ பாரதத்தின் வீரத் தன்மை பார்தனில் ஒழிந்ததோ பாரதத்தின் ஞான சக்தி பாழடைந்து விட்டதோ ஆண்மை கொண்ட நாடு இன்று ஆண்மை அற்று வாழவோ அச்சமில்லா நாடு இன்று அஞ்சி நின்று வாழ்வதோ துன்பமில்லா நாடு இன்று துக்கமுற்று வாழ்வதோ வீர மக்கள் வாழ்ந்த நாடு வாட்டமுற்று வாழ்வதோ பிச்சை யீந்த நாடு இன்று பிச்சை யேற்று வாழ்வதோ பெருமை கொண்ட நாடு இன்று பெருமையற்று வாழ்வதோ எழுந்திடுவோம் நாமும் இன்று தேச சேவை செய்யவே என்றும் மக்கள் நாடு ஓங்கி தீமையற்று வாழவே தாயின் துன்பம் நீங்க நாமும் ஒன்றுபட்டு வாழ்வோமே பேயைப் போன்ற துன்பம் போக்க நாமும் ஒன்றாய்க் கூடுவோம் பாடல் பட்டியல் **********************************************************************************************

ஹிந்துஸ்தானம் ஹிந்து தர்மம் ராஷ்ட்ர சங்க​மென்று நாம்

  ஹிந்துஸ்தானம் ஹிந்து தர்மம் ராஷ்ட்ர சங்கமென்று நாம் என்றும் பாடும் தன்மை கொள்ள கங்கணத்தைக் கொண்டுள்ளோம் ஒற்றுமை அற்று நாங்கள் ஓடி நின்ற காலமும் இன்றுடன் ஒழிந்து போக கங்கணத்தை கொண்டுள்ளோம் (ஹிந்து) உயர்வு தாழ்வு எங்களுக்குள் இல்லையென்றுகாட்டவே ஒன்றுகூடி இன்று நாமும் கங்கணத்தை கொண்டுள்ளோம் (ஹிந்து) ஹிந்துஸ்தானில் உள்ள ஹிந்து மக்கள் ஒன்று சேர்ந்திட ஹிந்து தர்மம் ஓங்க இன்று கங்கணத்தை கொண்டுள்ளளோம் (ஹிந்து) பாரத்தின் வீர சக்தி பார்தனில் ஜ்வலித்திட வீரர் நாமும் ஒன்று கூடி கங்கணத்தைக் கொண்டுள்ளோம் (ஹிந்து) காணும் ஹிந்து மக்களெல்லாம் காவிக்கொடியின் கீழிலே ஒன்று கூட நாமும் ஓங்க கங்கணத்தைக் கொண்டுள்ளோம் (ஹிந்து) தியாக சிந்தை வீரசக்தி தோன்ற சேவை செய்திடும் ஊக்கம் யாவும் தோன்ற இன்று கங்கணத்தைக் கொண்டுள்ளோம் (ஹிந்து) ********************************************************************************************** பாடல் பட்டியல் **********************************************************************************************