பாடல் பட்டியல்
மலை வளையும், தலை குனியும் மலையில மகுடம் வச்சு கடலில பாதம் வச்சு மக்கள் வாழ்வில் வளங்கள் மலர மக்கள் சக்தி நிறுவ வாரீர் மனித குலத்தின் மன இருளகற்ற அருணோதய ஒளி தர வந்தோம் மனிதனை மனிதன் ஆக்கிடவல்ல ஸர்வ கலாசாலை மனிதா நீ மகத்தானவன் மஹா ஸங்க்ராந்தியின் மேன்மையுங் கேளிர் மாணவர் உலகப் பேரொளியாலே மாதவத்தினால் பாரதத்திலே புத்துணர்வு பாய்ச்சி மாதவா! நின் தாள் பணிந்தோம் மாதா கீ ஜய் பாரத மாதா கீ ஜய் மாமலை யாழ்கடல் எல்லையில் கொண்ட முழக்கிடுவோம் ஒன்றாய்க்கூடி பகவாக் கொடி நம் உயிர்நாடி ரக்ஷாபந்தன் திருநாளாம் பாரத ஒருமைப் பெருநாளே ராக்கி கட்டுவோம் நல்ல ராக்கி கட்டுவோம் ராஷ்ட்ர சக்தியின் ஜீவன் உன்னை லக்ஷிய மிதனுடன் ஒன்றிய தொண்டன் லட்சியமொன்றே உயிரெனக் கொண்ட லட்சியமே வடிவெடுத்த லட்சியப் பாதையில் முன்னேறி வரும் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தேமாதர கீதம் சொல்லி வந்தே பணிவோம் பாரதி பாதம் வருக வருக உலகமெல்லாம் வாழ்த்தும் யோகியே வாசமுள்ள பாசமலர் கேசவனே வாராய் வாரும் வீரர் ஒன்றாய்க் கூடி வானுலகை விஞ்சிடும் வேதபூமி பாரதம் விண்ணவர் போற்றும் பகவாக் கொடியின் வீர கேசவர் காலடியைப் பின் தொடர்ந்து செல்கிறோம் வீர கேசவர் வந்துள்ளார் வீரனே வெகுண்டெழுந்திடு வெற்றி வெற்றி வெற்றி என்று வீரர்களே வாருங்கள் வெற்றியே வெற்றியே வேதாரண்யம் கரையில் வேளை வந்தது காளையர் எழவே வேற்றுமையில் ஒற்றுமை ********************************************************************************************** பாடல் பட்டியல் **********************************************************************************************
மலை வளையும், தலை குனியும்
மலை வளையும், தலை குனியும், நதி நிற்கும் தடை கண்டே எனின் இளமை ஒடுங்காது அபாயத்தில் நடுங்காது குரு கோவிந்தன் இரு புதல்வர் சின்னஞ் சிறுவர் இளந்தளிர்கள் எனின் சிங்கத்தின் குட்டியினர் தர்மத்தின் தீரக்காவலர்கள் அடல் ஏறாகச் சீறிட்டார் கர்ஜித்தார் கால பைரவன் போல்: "ஒருக்காலும் தலை வணங்கோம் எந்நாளும் கொள்கை விடமாட்டோம் எம் தேசம் எங்கள் உயிராகும் எம் தர்மம் எங்கள் உயிராகும் குரு தசமேசர் உயிர் ஆவர் ஸ்ரீ குருகிரந்தம் உயிராகும்" ஜோராவர் வீறுடன் முழங்க பத்தேசிம்மன் கர்ஜனை செய்தான் "சுவர் தனையே எழுப்பிடுக கல்லாலே மூடி அடைத்திடுக எம் மூச்செல்லாம் உணர்ச்சி தரும் எங்கள் பிணமும் எழுச்சி தரும் இந்தச் சுவர்கள் முழக்கமிடும் என்றென்றும் வீர கோஷமிடும் எங்கள் தாய் நாடு வென்றிடுக எம்மாருயிர் தர்மம் வென்றிடுக குருதசமேசர் வென்றிடுக ஸ்ரீ குருகிரந்தம் வென்றிடுக" பாடல் பட்டியல் **********************************************************************************************மலையில மகுடம் வச்சு கடலில பாதம் வச்சு
மலையில மகுடம் வச்சு கடலில பாதம் வச்சு மாகாளி உருவில் நின்றாய் எங்கள் ஆத்தா! காளியாத்தா மாகாளி உருவில் நின்றாய் எங்கள் ஆத்தா! உன்னை நான் பாரதத்தாய் என்றழைப்பேன் எங்கள் ஆத்தா எல்லையில எதிரிவந்து தொல்லை தரும் வேளையில எல்லையம்மன் உருவில் நீயும் வாளெடுத்து நிக்கையிலே! - பாரதாத்தா இல்லையங்கு எதிரியர்கள் ஓடிவிட்டார் அடி ஆத்தா! உழைப்பு மிகுந்திருந்தால் உணவுக்குப் பஞ்சமில்லை வாரி வழங்கிடுவாய் எங்கள் ஆத்தா - பாரதாத்தா! உன்னை நான் மாரியம்மன் என்றழைப்பேன் எங்களாத்தா கல்விக்கதிபதி நீ, கலைமக உன்பேரு கற்றிடுவார் உலகத்து மக்களெல்லாம் உன்னிடத்தில்! - பாரதாத்தா கற்ற உந்தன் மக்களெல்லாம் சென்றிடுவார் எட்டுதிக்கும் எத்தனை வடிவெடுத்து எங்களை நீ ஆண்டாலும் அத்தனை வடிவிலுமே காண்பதுன்னை எங்களாத்தா - பாரதாத்தா பித்தனாய் உன் புகழை பாடிடுவேன் எங்கள் ஆத்தா பாடல் பட்டியல் **********************************************************************************************மக்கள் வாழ்வில் வளங்கள் மலர மக்கள் சக்தி நிறுவ வாரீர்
மக்கள் வாழ்வின் வளங்கள் மலர மக்கள் சக்தி நிறுவ வாரீர் வேன மன்னன் கொடுமை ஆட்சியை வேருடன் அழித் தொழித்த மக்கள் அறத்தின் செங்கோல் நிமிர்த்தி வைத்தே அமைதி வாழ்வை அமைத் தளித்தார் (மக்கள்) கண்ணன் எடுத்தான் விஸ்வரூபம் கண் திறந்தது பார்த்தனுக்கு திகைத்து நிற்கும் நாட்டினுக்கு திசையளிக்கும் மக்கள் சக்தி (மக்கள்) அறத்தின் வழியில் அரசு செல்ல அங்குசம் தான் மக்கள் சக்தி நல்ல பண்புகள் பூத்துக் குலுங்க நீரும் உரமும் மக்கள் சக்தி (மக்கள்) நல்ல நாட்டின் முதுகெலும்பாய் நல்ல மக்கள் தாங்கி நிற்பர் நிறைவும் நேர்மையும் கொழிக்கும் நிலையை காத்து நிற்கும் காவல் தெய்வம் (மக்கள்) லஞ்சம் ஊழல் கொள்ளை லாபம் வஞ்சகம் வன்முறையின் ஆட்டம் வெறி பிடித்த சுயநலங்கள் மக்கள் எழுந்தால் பிடிக்கும் ஓட்டம் (மக்கள்) அடக்கு முறைக்கே அஞ்சிடாதோர் கடமை வீரர் துாய நெஞ்சர் நாடு தெய்வம் என்றுணர்ந்தோர் நல்லவர் அணிதிரள வேண்டும். (மக்கள்) பாடல் பட்டியல் **********************************************************************************************மனித குலத்தின் மன இருளகற்ற அருணோதய ஒளி தர வந்தோம்
மனித குலத்தின் மன இருளகற்ற அருணோதய ஒளி தர வந்தோம் நடுங்கி ஒடுங்கி ஒதுங்கிய மக்கள் விதியை மாற்றிட நாம் வந்தோம் நமது உழைப்பின் வியர்வையாலே பாலையை சோலையாக்கிடுவோம் கல்லும் முள்ளும் நிறைந்த நிலத்தை வளங்கொழிக்கச் செய்திடுவோம் ஓய்வொழிவறியா உழைப்பினாலே செல்வச் செழிப்பைப் பெருக்கிடுவோம் (நடுங்கி ஒடுங்கி) அடுத்தவர் உணவை பறித்து உண்ணும் இழிசெயல் என்றும் செய்யோம் நாம் எனினும் எங்கள் உரிமை இழந்தே நடைபிணமாக வாழோம் நாம் நம்முடைய நலனை பிறர் நலத்துடனே இணைத்து வாழ்ந்திட வந்தோம் நாம் (நடுங்கி ஒடுங்கி) உணவும் உடையும் வீடு கல்வியும் வாழ்வின் அடிப்படைத் தேவைகளே தனிநபர் வாழ்வும் குடும்ப வாழ்வும் நலம் நிறைந்தால் மோட்சமதே முழுமூச்சுடனே நாட்டுப் பணியில் தோள்களை இணைக்க நாம் வந்தோம் (நடுங்கி ஒடுங்கி) பாரதத் தாயின் கெளரவம் வளமும் எங்கள் உயிரினும் இனிதாகும் யுகயுகமாக மனிதகுலத்தின் நலனைக் காப்பது அறமாகும் வாழ்வின் சக்தி அனைத்தையும் எங்கள் அன்னையின் தாளில் அர்ப்பணிப்போம் (நடுங்கி ஒடுங்கி) பாடல் பட்டியல் **********************************************************************************************மனிதனை மனிதன் ஆக்கிடவல்ல ஸர்வ கலாசாலை
மனிதனை மனிதன் ஆக்கிடவல்ல ஸர்வ கலாசாலை மாதவர் கேசவர் வழிவழி வந்த மந்திர தவச் சாலை ஹிந்து சங்கமெனும் சோலை வேதகீதை ராமாயண பாரத மந்திரங்களும் ஒலிக்கும் வள்ளுவம் வாசகம் அகம் புறம் என திருமந்திரங்களும் இசைக்கும் கல்வி பலகலை சாத்திர அறிவின் எல்லை கடந்து நிற்கும் அள்ள அள்ள குறையாத நற்செல்வ ஊற்றென பொன்மலை குவிக்கும் வேத பாரதம் எங்கே? எங்கே? எங்கே? தவ ரிஷி முனிவர் ஞானியர் யோகியர் சித்தர்கள் வழி வந்தோம் தவறி நம் பாதை விட்டு வழி மறந்து ஆட்டிடை குருளை ஆனோம் ஹிந்து உணர்விழந்து பேதம் பல கொணர்ந்து வேற்றுமையில் நாம் உழன்றோம் ஒன்றென நின்றால் உண்டு வாழ்வெனும் உண்மையும் கூட மறந்தோம் ஞான பாரதம் எங்கே? எங்கே? எங்கே? ஒவ்வொரு உயிரும் இறைவடிவம் எனும் மறைபொருள் மறந்ததனால் உடன்பிறந்தவரை அந்நிய மதங்கள் சூழ்ச்சிக்கு பலி தந்தோம்! நந்தனும் பாணனும் நம்மவரென்னும் எண்ணம் வளர்ந்து விட்டால் நம்மை வென்றிட உலகில் வேறு சக்தியும் தோன்றிடுமோ? ஹிந்து பாரதம் எங்கே? எங்கே? எங்கே? நாட்டின் நோயெது? நாடிய நாட்டு மருத்துவர் கேசவனார் நாடி நல்லவர் தேடி கூடி விளையாடிட வழி கண்டார் வலிமையுள்ளவன் வாக்கே வேதம் உண்மையை உணர்ந்ததனால் மந்திரம் ஹிந்து ஒற்றுமை சங்க லட்சியம் வெல்லு மென்றார் புதிய பாரதம் எங்கே? எங்கே? எங்கே? ஒன்றாய் ஓரிடம் ஒரு மணிநேரம் சந்திக்கவும் வேண்டும் நன்றாய் நாமும் நாட்டுநலன் கருதி சிந்திக்கவும் வேண்டும் உடல் மனம் அறிவு எனப்பல உயர்த்திடும் பயிற்சிகள் நன்றேதான் சாகாக் கல்வி 'ஷாகா' கல்வி ஒன்றே வழிமுறைதான் சங்க பாரதம் இங்கே! இங்கே! இங்கே! பாடல் பட்டியல் ********************************************************************************************** h2>மனிதா நீ மகத்தானவன் - மண்ணில் மனிதா நீ மகத்தானவன் - மண்ணில் பரம்பொருளின் உருவானவன் பாரதத்தாய் இளையமகன் பண்பாட்டில் மூத்த மகன் வரலாற்றை உருவாக்கும் தலைமகன் நீ (மனிதா நீ) மனம் வைத்தால் மலைகளும் உன் கைகளுக்குள் தூளாகும் கணப் பொழுதில் நதிகளுமே திசைமாறிப் பாய்ந்து வரும் மனம் வைத்தால் மண்ணிதனில் அம்ரு தமும் திரண்டுவரும் வானமிங்கு பூமி யுடன் விளையாட்டாய் ஒன்றிணையும் அழிவற்றவன் நீ....அழிவற்றவன் நீ உந்தன் உயிரினிலே நின்றுலவும் பரம்பொருளின் மகத்துவத்தை உணர்த்திடுவாயே (மனிதா நீ) கண்களிலே கனலிருக்கும் அசைவினிலே புயலிருக்கும் பொங்கிவரும் சினங் கண்டு காலனிங்கு ஓடிவிடும் மண்ணும் செந் நிறமாகும் மாமலையும் தாழ்ந்துவிடும் சீற்றத்தின் உச்சியிலே தாண்டவம் நடம் புரியும் உண்மையிலே நீ...உண்மையிலே நீ பெரும் சக்திகளின் முழுஉரு நீ குரல் கொடுத்து புதுயுகத்தை அழைத்திடுவாயே (மனிதா நீ) அண்டத்தில் வீரமகன் அக்னியைப் போல் பெருந்தீரன் கட்டளைக்கு அடிபணிந்து காலம்கூட நின்று விடும் உறுதி கொண்டு உழைத்தாலே சாதிப்பாய் எதையும் நீ துணிவு கொண்ட உள்ளத்துடன் சிங்கமென எழுவாய் நீ முயன்றாலே நீ...முயன்றாலே நீ உந்தன் முயற்சியெனும் பெரும் பலத்தால் மண்ணுலகை விண்ணுலகாய் மாற்றிடுவாயே (மனிதா நீ) பாடல் பட்டியல் **********************************************************************************************மஹா ஸங்க்ராந்தியின் மேன்மையுங் கேளிர்
மஹா ஸங்க்ராந்தியின் மேன்மையுங் கேளிர் ஆதவன் நாளும் வளர்ந்திடுவான் ஸ்வதந்த்ர பாரத ஜோதியும் ஒளிர இன்பம் எங்கும் பரவிடுமே ஹிந்துக்களனைவரும் ஒன்று கூடிட ஹிந்து தர்மமும் நாளும் ஓங்கிட வந்தேபாரத மாதரம் என்று நாம் நமதன்னையைப் போற்றிடுவோம் பாரத புத்ரர் சக்தி மிகுந்திட பரத அன்னை உலகிலுயர்ந்திட கீழ்த்திசை சூர்யன் மேனியைஒத்த பகவா த்வஜத்தினை வணங்கிடுவோம் பண்பும் கலையும் ஓங்கி உயர்ந்திட த்யாக சிந்தையில் நாமும் நிலைத்திட த்யாக ஜோதியாம் சூர்யதேவனை போற்றிப் போற்றி நாம் பணிந்திடுவோம் பாடல் பட்டியல் **********************************************************************************************மாணவர் உலகப் பேரொளியாலே
மாணவர் உலகப் பேரொளியாலே நாட்டின் இருளை நீக்கிடுவோம் புண்ணிய பாரதம் பாரினில் உயர்ந்தே புது எழில் பெற்றிடச் செய்திடுவோம் லட்சியம் கொண்ட வாழ்வினை அமைப்போம் பொறுப்பினை உணர்வோம் கடமையைச் செய்வோம் உடலின் மனதின் பயிற்சியாலே கடும் உழைப்பினை நல்கிடுவோம் தேச பத்தியும் தெய்வ சிந்தையும் நெஞ்சினில் தாங்கி வாழ்ந்திடுவோம் (மாணவர் உலக) எல்லா விதத்திலும் உயர்த்திடும் கல்வி கற்றிட வேண்டும் காலம் இதுவே கட்டுப்பாட்டினை சுயமாய்க் கொண்டே பள்ளியின் மேன்மை உயர்த்திடுவோம் மாணவர் நம்மிடை ஒற்றுமை ஓங்க பிணைந்திணைந்தே நாம் செயல்படுவோம் (மாணவர் உலக) பண்பாட்டின் வழி நடை உடை செயலும் சிந்தையில் மேன்மை கொண்டே வாழ்வோம் சீரிய ஒழுக்கம் பண்பினில் மேன்மை பணிவும் என்றும் கொள்வோம் நாம் செயல்களில் ஆக்கமும் ஊக்கமும் கொண்டே வாழ்வினில் ஜோதி ஏற்றிடுவோம் (மாணவர் உலக) பாரதத் தாயின் பெருமையும் வளமும் எங்கள் உயிரினும் மிக இனிதாகும் யுகயுகமாக மனித குலத்தின் நலன் காப்பது நம் அறமாகும் வாழ்வின் சக்தி அனைத்தையும் பாரத அன்னையின் தாளில் அர்ப்பணிப்போம் (மாணவர் உலக) பாடல் பட்டியல் **********************************************************************************************மாதவத்தினால் பாரதத்திலே புத்துணர்வு பாய்ச்சி
மாதவத்தினால் பாரதத்திலே புத்துணர்வு பாய்ச்சி மணிவிளக்கென வழி நடத்திடும் அமரனே நீ வாழி அன்னை பாரதியை அழித்தொழித்திடும் நோயைக் கண்டு நொந்தாய் அமைதியற்று அருமருந்து தேடிட அலைந்து திரிந்து வெந்தாய் சங்கடன மெனும் அமுதமளித்துயிர் காக்கவே விரைந்தாய் தீர்க்க தரிசியென நாடு வாழ்ந்திட அஸ்திவார மிட்டாய் (மாதவத்தினால்) ஹிந்து என்ற சொல் பழிச்சொல் லாகியே வழங்கி வந்த போது ஹிந்து ராஷ்ட்ரமோர் பகற்கனா வெனப் பேசி வந்தபோது வேதரிஷியைப் போல் எழுந்து நின்று நீ முழக்கம் செய்த போது இதயக் கோயிலை அடைத்த கதவுகள் பொடிந்து வீழ்ந்ததன்றோ! (மாதவத்தினால்) தூய வாழ்வினால் ஒழுக்கத் தீயினால் இடர்கள் வெந்துபோகும் தியாக சக்தியால் லக்ஷ்ய பக்தியால் தெய்வ சக்தி தோன்றும் சக்திக் குன்றென நிற்கும் பாரதம் உலகை வழி நடத்தும் சத்தியம் இதை வாழ்ந்து காட்டிட அவதரித்த கோனே (மாதவத்தினால்) நாடு எங்கணும் பரந்து நின்றுள கேசவா நீ வாராய் வந்து எங்களுடை இதயக் கோயிலில் உறைந்து ஊக்கி நிற்பாய் வைர நெஞ்சமும் வீர உள்ளமும் தியாகமும் படைத்தே லக்ஷியத்திலே ஊன்றி வாழ்ந்திட ஆசிகள் அளிப்பாய் (மாதவத்தினால்) பாடல் பட்டியல் **********************************************************************************************மாதவா! நின் தாள் பணிந்தோம்
மாதவா! நின் தாள் பணிந்தோம் மாதவா! நின் தாள் பணிந்தோம் அமுத மொழியாம் உந்தன் வாக்கு சொல்லினுக்கே சக்தி தந்தது ஆன்மநேயம் உந்தன் விழியில் வெள்ளமெனவே பெருகி வந்தது இன்பம் பொங்கும் சிரிப்பின் பேரொலி விண்ணிலெங்கும் எதிரொலித்தது (மாதவா நின்) ஞானத்தில் நீ ரிஷி குலத்தோன் சங்கரன் வழிவந்த பிறவி அமைதி தவழும் குழந்தையுள்ளம் முகத்தில் தேங்கி ஒளிபரப்பும் துயரில் வாடும் காட்சி கண்டால் பாய்ந்து வந்திடும் கருணை அருவி (மாதவா நின்) இன்பதுன்பம் புகழ்ச்சி இகழ்ச்சி அனைத்தும் ஒன்றெனக் கொண்ட வாழ்வு கீதை நெறி ஸ்திதப்ரக்ஞனாக அறத்தின் வடிவாய் வாழ்ந்த வாழ்வு பரதத்தாயின் தவப் புதல்வன் நவயுகத்தின் நாயகன் நீ (மாதவா நின்) மலை கலங்கினும் நிலை கலங்கா இமயமொத்த மனத்தி னுறுதி தியாகம், துணிவு, தூய்மை, எளிமை புனித மூட்டும் தெய்வப் பண்பு காணுவோர் தம் மாசுகளையே கணத்தில் பொசுக்கும் வேள்வித்தீ நீ (மாதவா நின்) ஆழங்காண இயன்றிடாத ஆழ்கடல் போல் ஆழ்ந்த நெஞ்சம் அருகில் வருவோர் வாழ்வை உயர்த்தும் அருள் கொழிக்கும் இனிய வடிவம் யோக ஈசன் கண்ணனாகப் போர்க்களத்தின் தலைமை ஏற்றாய் (மாதவா நின்) பாடல் பட்டியல் **********************************************************************************************மாதா கீ ஜய் பாரத மாதா கீ ஜய்
மாதா கீ ஜய் பாரத மாதா கீ ஜய் மாதா கீ ஜய் ஜய் பாரத மாதாகீ ஜய் இமயமலை தொடங்கி குமரிமுனை வரையில் பரந்து விரிந்த நில மடந்தை தவழ்ந்தோடிடும் நதிகள் அணிகளாய் அலங்கரிக்கும் எழில் மங்கை பாரதமே! அகில உலகுக்கும் அன்னம் அளிப்பாய் அன்ன பூரணி (மாதா...) இன்னுயிர்களிலே தன்னுயிர் கண்டிடும் அன்பு மனங்களை ஈன்றவளாம் அண்டம் வாழ்ந்திட தம் வாழ்வீந்திடும் தியாக முனிகளின் தாயவளாம் மண்ணிலுதித்த மானுடரெல்லாம் விண்ணையெட்ட வழிகாட்டும் சாரதா (மாதா...) அன்பும் அறமுமிகு நேயக் கண்களால் அவனியெங்கும் ஒளியேற்றுபவள் தொண்டு துறவெனும் தூயகரங்கொண்டு தரணியிதை அரவணைத்தாள்பவள் 'சர்வே பவந்து சுகினஹ' என்றே அருள் பொழிந்திடும் ஜகத் ஜனனீ... (மாதா...) பாடல் பட்டியல் **********************************************************************************************மாமலை யாழ்கடல் எல்லையில் கொண்ட
மாமலை யாழ்கடல் எல்லையில் கொண்ட பாரத தேசம் எழுந்தது காண் ஏகுவோம் நாம் வீறுடன் இன்றே பாரத தர்மம் காத்திடுவோம் (ஏகுவோம்) பாரத நாட்டை அடிமை யாக்கிட கனவுகள் காணும் அந்நியர் காண் பாரத வீரர் திரண்டெழுந்தே அன்னையின் மானம் காத்திடுவோம் (ஏகுவோம்) ஹிந்துஸ்தானின் வீதியிலெங்கும் ஆவினம் கதறி அழுவது கேள் ஹிந்துஸ்தானின் ஹிந்து மைந்தரும் அஞ்சி நடுங்கி வாழ்ந்திடவோ (ஏகுவோம்) வீரசிவாஜி பிரதாப சிம்மன் வளர்த்த தீயும் அணைந்திடுமோ ? வாஞ்சி நாதனும் கட்டபொம்மனும் வாழ்ந்த பூமியும் வீழ்ந்திடுமோ ? (ஏகுவோம்) வங்கம் எங்கே ? சிந்துவும் எங்கே ? வஞ்சகர் சூழ்ச்சியும் வென்றிடுமோ! வானம் வாழ்த்திட வையம் வியந்திட வங்கமும் சிந்துவும் பெற்றிடுவோம் (ஏகுவோம்) 'அன்றும் இன்றும் என்றும் இங்கே அதர்மம் அழித்திட நான் வருவேன்' என்றே கூறிய கண்ணன் வடிவம் நாமே என்று உணர்ந்திடுவோம் (ஏகுவோம்) பாடல் பட்டியல் **********************************************************************************************முழக்கிடுவோம் ஒன்றாய்க்கூடி பகவாக் கொடி நம் உயிர்நாடி
முழக்கிடுவோம் ஒன்றாய்க்கூடி பகவாக் கொடி நம் உயிர்நாடி அருணோதய வேளையில் தோன்றும் இருள் நீக்கும் காவி நிறத்தை திருவுருவில் கொண்டநம் குருவாம் (பகவாக்) ஆதவன் போல் கடமை ஆற்ற ஓய்வில்லா உழைப்பு நல்க ஞானத்தால் நல்வழி காட்டும் (பகவாக்) தியாகத்தால் உயிர்க்குலம் வாழ உயிர் வாழ்ந்த உத்தம மாந்தர் துறவியரின் அணிகலனாகும் (பகவாக்) தீச்சுடரின் திருவுடை வடிவம் மாசுகளை மாய்த்திடும் சக்தி தூய்மைக் கொரு உருவகமாகும் (பகவாக்) அஞ்சாமை வீரம் துணிவு அறிவாற்றல் ஆண்மை காட்ட முன்னேற்றப் பாதையில் ஊக்கும் (பகவாக்) வரலாற்றில் நாயகனாகி பரம்பரையின் காவலனாகி பாரதத்தின் ஆன்மாவாகும் (பகவாக்) திக்கெட்டும் இதனை ஏந்தி திக்விஜயம் செய்திட வாரீர் இதயத்தே பதித்து வாரீர். (பகவாக்) பாடல் பட்டியல் **********************************************************************************************ரக்ஷாபந்தன் திருநாளாம் பாரத ஒருமைப் பெருநாளே
ரக்ஷாபந்தன் திருநாளாம் பாரத ஒருமைப் பெருநாளே புனித பொன்னூல் இழை இழை தோறும் பாரத சரிதம் பேசுது கேள்! அன்னையின் மானம் காத்திட வேண்டி ஆயிரமாயிரம் பலிதானம் சபதமெடுப்போம் வீரர் நாமும் பாரத ஒருமை காத்திடவே (ரக்ஷாபந்தன்) தேச சேவையில் உறுதி ஓங்கிட கச்சையணிந்தே ஏகிடுவோம் பகவாக் கொடியின் பெருமை நாட்டிட, கங்கணம் பூண்டே ஏகிடுவோம் வளமை செழுமை பெருகிட நாட்டில் வீரர் நாமும் உழைத்திடுவோம் (ரக்ஷாபந்தன்) பாரத நாட்டில் வாழும் மக்களை பண்பின் வலியால் பிணைத்திடுவோம் பிரிவினை வாதம் வேருடன் களைந்தே ஒற்றுமை கீதமிசைத்திடுவோம் ஒன்றுபட்ட நம் பாரத சக்தியும் உலகை அன்பால் வென்றிடுமே (ரக்ஷாபந்தன்) பாடல் பட்டியல் **********************************************************************************************ராக்கி கட்டுவோம் நல்ல ராக்கி கட்டுவோம்
ராக்கி கட்டுவோம் நல்ல ராக்கி கட்டுவோம் இன்று ராக்கி கட்டுவோம் நம்மவராக்கிக் காட்டுவோம் ஒன்றாய்க் கூடி ஓடி ஆடி நன்றாய் நல்ல பாட்டுப் பாடி நாட்டுப் பற்று மிக்க நல்லவ ராக்கிக் காட்டுவோம் இன்று ராக்கி கட்டியே நம்மவராக்கிக் காட்டுவோம் காலை மாலை வேளையெல்லாம் காளையர் கூடிக் கபடியாடி வெல்லும் நல்ல வீரம் உள்ளவ ராக்கிக் காட்டுவோம் இன்று ராக்கி கட்டியே நம்மவராக்கிக் காட்டுவோம் கிராமம் நகரம் காடும் மலையும் குடிசையெல்லாம் சேவை செய்து நெஞ்சில் நல்ல ஈரம் உள்ளவ ராக்கிக் காட்டுவோம் இன்று ராக்கி கட்டியே நம்மவராக்கிக் காட்டுவோம் ஆலை தொழிற்சாலை கல்விச் சாலையெல்லாம் தேடிச்சென்று அன்பர்களை நல்ல நண்பராக்கிக் காட்டுவோம் இன்று ராக்கி கட்டியே நம்மவராக்கிக் காட்டுவோம் இல்லம் தோறும் நல்லவருண்டு எல்லோருக்கும் ராக்கி கட்டி வலிமையுள்ள தேசம் காப்பவ ராக்கிக் காட்டுவோம் இன்று ராக்கி கட்டியே நம்மவராக்கிக் காட்டுவோம் பாடல் பட்டியல் **********************************************************************************************ராஷ்ட்ர சக்தியின் ஜீவன் உன்னை
ராஷ்ட்ர சக்தியின் ஜீவன் உன்னை வாழ்த்தித் துதித்திட வாக்குமுண்டோ! முந்தையர்தம் மாதவத்தால் மணிவிளக்கெனவந் துதித்தாய் புவி வியந்திட செயல் புரிந்தே புத்துணர்வை ஊட்டும் உன்னை (வாழ்த்தி) ஞானம் கல்வி செல்வம் எல்லாம் நாட்டினுக்கே அர்ப்பணித்தாய்! பலனும் புகழும் வெறுத்துத் தூய தியாக ஒளியைப் பரப்பும் உன்னை (வாழ்த்தி) பற்றை எல்லாம் களைந்த பின்னும் கருமயோக வாழ்வை ஏற்றாய்! மக்கள் வாட்டம் கண்டு உருகும் புத்தனைப் போல் வாழ்ந்த உன்னை (வாழ்த்தி) பாரதத்தை தெய்வமாக்கி நாட்டுத் தொண்டினை பூஜையாக்கி பாலரை மாவீரராக்கி தொண்டுணர்வை வளர்க்கும் உன்னை (வாழ்த்தி) ஹிந்து என்றிட அஞ்சிக்கெஞ்சும் மனமயக்கம் நீக்கிவிட்டாய்! பெருமை கொண்டிடத் தலைநிமிர்ந்திட ஆத்மஞானம் அளித்த உன்னை (வாழ்த்தி) உலகை பாரதம் வழி நடத்திட உள்ளமதிலே வேட்கை கொண்டாய்! துயிலொழிந்தது கனவு பலிக்குது சக்தி எழுப்பிய முனிவன் உன்னை (வாழ்த்தி) பாடல் பட்டியல் **********************************************************************************************லக்ஷிய மிதனுடன் ஒன்றிய தொண்டன்
( " ஏகநிஷ்ட சேவகஹூம் " என்ற மெட்டு ) லக்ஷிய மிதனுடன் ஒன்றிய தொண்டன் எந்தன் மோக்ஷமும் இதுவே லக்ஷிய தாரகையாக நின்றிடும் உந்தன் திருவடி தொடர்ந்தேன் மனிதத் தன்மையை இழந்தே நானும் மாண்பு மறந்தே வாழ்ந்தேன் பித்தன் போலே உழன்றுழன்று நான் சித்தம் தேய்ந்து நின்றேன் ஞானி உன் அரும் உபதேசத்தால் ஞானமூண்டு எழுந்தேன் கர்ம வீர உன் புனித உருவினை கண்டே களித்திட வில்லை கேட்ட காதுகள் புனிதம் பெறும் உன் கனிமொழி கேட்டிடவில்லை சிறியேன் எந்தன் தீவினை எனினும் சிந்தை சோர்ந்திட வில்லை நீ எடுத்துள்ள கடும் சபதமதை நிறைவேற்றிட உழைத்திடுவேன் புனித லக்ஷியம் பூர்த்தியடைவதை எங்கண் கொண்டே காண்பேன் எந்தன் ஆவல் நிறைவேறிட நீ ஒன்றிடும் உள்ளம் அருள்வாய் ராஷ்ட்ர பக்தியே அன்றி வேறில்லை எந்தன் வாழ்வின் நோக்கம் சங்க மந்திரமும் பாதையும் எந்தன் வாழ்வின் தாரகமாகும் என்னுயிர் பாரதம் மாண்பு படைத்திட பாதை இது ஒன்றே தான் வானமிடிந்தென் தலையில் வீழ்ந்திட நெறியுடன் முழங்கியே வரினும் அண்டம் வெடித்தெனை விழுங்கிட வேண்டி 'ஆ' வென எதிர்பட வரினும் செந்நாவினையே நீட்டிச் சுடும் தீ சீறியெழுந்தே வரினும் எந்தன் நாவினைத் துண்டு துண்டாக்கினும் உந்தன் மந்திரம் ஒலிப்பேன் எந்தன் கால்களை வெட்டி வீழ்த்தினும் உந்தன் பாதையில் செல்வேன் உந்தன் பின்னே என்றும் வருவேன் எந்தன் தர்மமும் இதுவே உன் உபதேசம் என் உளமதிலே உயிரொலியாய் ஒலித்திடுது என் இரு கண்கள் எங்கு நோக்கினும் உன் உருவம் தோன்றிடுது புனித ! உன் நினைவாலே எல்லா புன்மை இருட்கணம் அழியும் கண்ணீர் மல்கிடும் விழிகளுடன் நீ திரும்பியே நோக்கிட வேண்டாம் மற்றோர் பாதையை கனவிலுமே நான் மாண்பெனக் கொண்டிட மாட்டேன் புனித ! உன்னையே அன்றி எனக்கு புகலிடம் வேறொன்றுண்டோ பாடல் பட்டியல் **********************************************************************************************லட்சியமொன்றே உயிரெனக் கொண்ட
லட்சியமொன்றே உயிரெனக் கொண்ட வீரனே பாதையை மறந்தாயோ நீ! வீரனே பாதையை மறந்தாயோ நீ ! ! இன்முகத்துடனே இன்னலை ஏற்று இன்ப போகமும் விட்டொழித்தாய் நீ எல்லாம் மறந்தே சோர்ந்தாயோ நீ எண்ணத் தீயும் அணைந்ததுவோ ! எண்ணத் தீயும் அணைந்ததுவோ !! (லட்சியம்) நந்த வனமாம் பாரதம் நாட்டினில் நச்சு விளைந்தே நாசம் தோன்றுது சதிமதி கொண்ட துரோகியர் அன்னையை அடிமை யாக்கிட முயன்றிடுறார் ! அடிமை யாக்கிட முயன்றிடுறார்!! (லட்சியம்) அன்னையின் அலறல் கேளாயோ நீ அரக்கர் முழக்கம் கேளாயோ நீ மோக மயக்கம் தீராயோ நீ கடமையை புரியாயோ ! உணர்வுடன் கடமையை புரியாயோ ! ! (லட்சியம்) வில்லினை எடுத்திடு நாணை முழக்கிடு போதும் போதும் உறக்கம் ஒழித்திடு பாரத நாடிது உலகினை வெல்ல சக்திகள் யாவும் திரட்டிடுவாய்! சக்திகள் யாவும் திரட்டிடுவாய்! ! (லட்சியம்) பாடல் பட்டியல் **********************************************************************************************லட்சியமே வடிவெடுத்த
லட்சியமே வடிவெடுத்த உன்னைப் போல உயருவோம் நாட்டுப் பணியில் ஒன்றுவோம் சரணடைந்தோம் திருவடியில் நாட்டுப் பணியில் ஒன்றுவோம் இந்த அரும்பு மெல்ல மலரும் எழில் மலராய் ஆகிடும் உன்னைப் போல எங்கெங்கும் நறுமணம் பரப்புவோம் உன்னைப் போல உயருவோம் (லட்சியமே) மலர்கள் தூவி வழிபடவே உன் சன்னிதி வரவில்லை சுயநலத்தை ஹோமமாக்கி வேள்வித் தீயில் அர்ப்பணம் உன்னைப் போல உயருவோம் (லட்சியமே) இதய தெய்வம் நீயேதான் பக்தி பொங்கும் சேவை செய்து உன்னை நினைந்து உருமாறி உந்தன் வடிவம் ஆகுவோம் உன்னைப் போல உயருவோம் (லட்சியமே) தெய்வ தீபமாகி நிற்கும் உந்தன் ஒளிக்கு இணையில்லை உந்தன் ஜோதி எம்முள்ளும் என்றும் நிலைத்து ஒளிவிடும் உன்னைப் போல உயருவோம் (லட்சியமே) உன்னைப் போல பணி செய்வோம் ஓங்கி வளரும் உன் பணி தேசம் தர்மம் பண்பாட்டைக் காக்கும் அரண் ஆகுவோம் உன்னைப் போல உயருவோம் (லட்சியமே) பாடல் பட்டியல் **********************************************************************************************லட்சியப் பாதையில் முன்னேறி வரும்
லட்சியப் பாதையில் முன்னேறி வரும் வீரா பின்னோக்காதே துணிவினை இழந்து விடாதே. ஆண்மையின் வடிவம் வீரமகன் நீ ஆற்றலில் உனக்கிணை இல்லை துாய்மையின் உருவம் தியாகச் சின்னம் தெய்வத்துணை உனக்குண்டு கானல் நீராம் மோக மாயையில் கணமும் மயங்கி விடாதே (துணிவினை) எத்தனை துாரம் எத்தனை காலம் என்றே சோர்ந்து விடாதே உலகம் என்னுடன் வருமோ என்று உள்ளம் ஏங்கி விடாதே லக்ஷிய மெய்திட உடல் பொருள் ஆவியை அளித்திடத் தயங்கி விடாதே (துணிவினை) உன்னை நம்பியே நாடு வாழுது நீயே நல்லாதாரம் உனது தோளுடன் தோளிணைந்திட உணர்ந்து வருகுது தேசம் ஓய்வொழி வின்றி தர்மப்பாதையில் ஏகிட மறந்து விடாதே. (துணிவினை) பாடல் பட்டியல் **********************************************************************************************வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! பாரத வந்தே மாதரம்! ஜெய பாரத வந்தே மாதரம்! தாயின் தாளில் வாழ்வாம் மலரால் அர்ச்சனை செய்திட விரைகின்றோம் தளர்ந்திட மாட்டோம் பெரும்புயல் வரினும் வழிபட விரைந்து செல்கின்றோம் (வந்தே மாதரம்! . . . இமய பர்வதம் சிரசாகிடவே எத்தனை உயர்ந்த நெற்றியடா! இணையடி தன்னை கடல் கழுவிட எத்தனை அழகிய தேசமடா ! பச்சை பசுமை ஆடையணிந்தாள் இறைவி தன்னைப் பாடுகிறோம்! (வந்தே மாதரம்! வான் புகழ் கங்கை கழுத்தினில் மாலை எத்தனை மாலைகள் நதியாலே! விந்திய மலையும் சாத்தபுராவும் ஒட்டியாணமாய் அணி செய்ய வஜ்ரக் கரமாய் ஸஹ்யாத்ரி மலை வீர பராக்கிரமம் விளக்கிடுது (வந்தே மாதரம்! எவரெதிரேயும் தலைகுனியாத தன்மானத்தின் வடிவமடா ! எங்கள் தாயை தாக்கிய படைகள் மண்ணுடன் மண்ணாய் மறைந்ததடா ! எதிரியை வென்று வாகை சூடினாள் ஏற்புடை அன்னை வாழியவே ! (வந்தே மாதரம்! பாடல் பட்டியல் **********************************************************************************************வந்தேமாதர கீதம் சொல்லி வந்தே பணிவோம் பாரதி பாதம்
வந்தேமாதர கீதம் சொல்லி வந்தே பணிவோம் பாரதி பாதம் புவியோர் விரட்டிட புகலிடம் தேடி தவித்தவர் வந்தது பாரதம் நாடி சேய் போல் கலங்கினர் பாய் மரத்தோடு போய் வரவேற்றாள் தாய் மனதோடு ஆஹா ஆஹா அன்னை அவள் தான் ஆறுதல் தந்திடும் சங்கரி உமைதான் முப்பது கோடி முகங்களை உடையாள் கைப்பிடி அளவொரு அன்னியர் படையால் தாழ்ந்தோம் தரணியில் ஆண்டுகள் ஆயிரம் தந்தோம் மீண்டிட களபலி ஆயிரம் வாராதிங்கே இனி ஒரு வீழ்ச்சி வருவது இனி எம் அம்மையின் ஆட்சி ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர் நாமே ஒருவருக்கொருவர் பகை கொள்ளோமே பலமலர் பூத்துக் குலுங்கிடும் சோலை பாசமலர்களாய் சேர்ந்தொரு மாலை ஆவோம் ஆவோம் அன்னை மகிழ்வாள் ஆனந்தம் கொண்டு நம் உச்சி முகர்வாள் பாடல் பட்டியல் **********************************************************************************************வருக வருக உலகமெல்லாம் வாழ்த்தும் யோகியே
வருக வருக உலகமெல்லாம் வாழ்த்தும் யோகியே நித்யமான தேகியே - ஸ்ரீ மாதவனே அருள் நிறைந்து வழியும் ஞானியே பாரத தேவிக்கிசைந்த பண்புகொண்டவா எம்மை பாவனராய் வாழ வைக்கும் நெறியில் நின்றவா பகலவன் போல் ஒளிவிளங்க வந்ததீரனே - நிலை தந்த வீரனே - வேதமந்த்ர ஸாரனே ஆன்ம சக்தி வீசுகின்ற திவ்ய வதனமும் அச்சம் நீக்கி ஆண்மை அன்பளிக்கும் வசனமும் அறிவும் அடக்கமும் துலங்க நின்ற நித்தனே -- பரி பூர்ண சுத்தனே - அவதார சித்தனே கர்ம பக்தி ஞானயோக முறைகள் யாவையும் கண்டுணர்ந்து தேசசேவை மோக்ஷமாம் எனக் காட்டி அந்த வழியில் நின்ற தெய்வ நீதியே - புண்ய தர்ம வாதியே - ஸத் நாத ஜோதியே கேசவரின் சிந்தை யாற்கிளர்ந்து பொங்கினாய் கேடிலாத எங்கள் இதய கமலந்தங்கினாய் கெதிக்கடர்ந்த திக்கெலாம் துதிக்கும் வங்கமே ராஷ்ட்ரீய சங்கமேல் - தலைமை தாங்கும் சிங்கமே பாடல் பட்டியல் **********************************************************************************************வாசமுள்ள பாசமலர் கேசவனே வாராய்
வாசமுள்ள பாசமலர் கேசவனே வாராய் தேசமென்ற ஓசையுடன் பேசும் குரல் தாராய் (வாசமுள்ள) பாரதத் திருமாதா பவனிவரும் தேரில் ஒற்றுமை ஒரு சக்கரம் - ஜாதி சேற்றில் புதைந்த கரம் நேரதன் பக்கலிலே நின்ற துணை ஆகும் தியாகமாம் மறுசக்கரம் - சுயநலப் பள்ளத்தில் வீழ்ந்த கரம் சாரதி யாய்வந்து தனியொருவனாய் நின்று தேரினை அசைத்துவிட்டாய் - இன்று தேசமெல்லாம் இழுக்கவைத்தாய் மறுபடியும் நீ பிறக்க வேண்டும் - எங்கள் மனதில் உன்போல் திறம் சுரக்கவேண்டும் (வாசமுள்ள) ஹிந்துவின் சுயநலம் களைந்திட உழைத்த உன் நெஞ்சே வேர்த்த தய்யா - நேசமுள்ள நெஞ்சங்களை சேர்த்தய்யா ஹிந்து ராஷ்ட்ரத்திலொரு தளிர்வர உன் இதயம் குருதியை வார்த்த தய்யா - பாசமுள்ள கோடி நெஞ்சை ஈர்த்ததய்யா சொந்த வாழ்விலொரு சந்திரன் போல் தேய்ந்தாய் தியாகத்தின் திருவுருவே - உந்தன் தேகம் கற்பகத் தருவே மறுபடியும் நீ பிறக்க வேண்டும் - எங்கள் மனதில் உன்போல் திறம் சுரக்க வேண்டும் (வாசமுள்ள) வான்புகழ் பாரதிக்கு வண்ணமாடம் தந்த நீ வாழ்ந்தது குடிசையிலே - உன்குடும்பம் வீழ்ந்தது துயரினிலே ஏன் எந்தையே நீ சுகத்தினை விட்டொழிக்கும் திறத்தினை எங்கு கற்றாய் - உள்ளச் சோர்வினை எங்கு விற்றாய்? ஆன்மாவால் நீ எழுதியெம் ஆழ்மனதில் அச்சடித்த ஆசைக்கனவுகளே - நாங்கள் ஆக்கும் நனவுகளே மறுபடியும் நீ பிறக்க வேண்டும் - உந்தன் திருவடியை நான் சுமக்க வேண்டும் (வாசமுள்ள) பாடல் பட்டியல் **********************************************************************************************வாரும் வீரர் ஒன்றாய்க் கூடி
வாரும் வீரர் ஒன்றாய்க் கூடி எதையும் எதிர்த்துச் செல்லுவோம் வானிடிந்து விழுகுதே கடல் பொங்கி வழியுதே மலைபுரண்டு வருகுதே இன்னுமேனோ தூக்கம் (வாரும்) இருள் வந்து சூழுதே மழை மிகப் பொழியுதே இடியும் காதைத் துளைக்குதே இன்னுமேனோ தூக்கம் (வாரும்) உஷ்ணம் மிகக் கொதிக்குதே வீடுபற்றி எரியுதே தாயும் எரிந்து மடிவாளே இன்னுமேனோ தூக்கம் (வாரும்) கஷ்டம் நெருங்கி வருகுதே மண்டையைப் பிளக்குது வாளை வீசி எழுங்களேன் இன்னுமேனோ தூக்கம் (வாரும்) அதோ உற்றுக் கவனியும் அபயக்குரல் கேட்குது சமூகம் நசுங்கி மடியுது இன்னுமேனோ தூக்கம் (வாரும்) பகைவன் வீட்டை இடிக்கிறான் எலியைப் போல அரிக்கிறான் அன்னை மிக அழுகிறாள் இன்னுமேனோ தூக்கம் (வாரும்) அன்னை உன்னைக் கூவுறாள் பதறி உன்னை அழைக்கிறாள் கண்சிவக்க எழுவாயே இன்னுமேனோ தூக்கம் (வாரும்) டண் டடண் டடண் டடண் பேரிகை முழங்குதே கச்சை கட்டி எழுவாயே இன்னுமேனோ தூக்கம் (வாரும்) பூம் புபூம் புபூம் புபூம் சமயம் மிகப் போகுதே வேலை எடுத்து வருவீரே இன்னுமேனோ தூக்கம் (வாரும்) டிக் டிடிக் டிடிக் டிடிக் சமயம் மிகப் போகுதே ரத்தம் கொதிக்க நில்லாயோ இன்னுமேனோ தூக்கம் (வாரும்) டக் டடக் டடக் டடக் குதிரை மீது ஏறியே கம்பீரமாகச் செல்லுவோம் இன்னுமேனோ தூக்கம் (வாரும்) டர்ர ரட்ட ரட்ட ரட் காடும் மலையும் தாண்டியே எதையும் கடந்து செல்லுவோம் இன்னுமேனோ தூக்கம் (வாரும்) பகவக் கொடியை ஏற்றவே அன்னை யின்னல் தீர்க்கவே எங்கும் ஒன்றாய்க் கூடுவோம் இன்னுமேனோ தூக்கம் (வாரும்) பாடல் பட்டியல் **********************************************************************************************வானுலகை விஞ்சிடும் வேதபூமி பாரதம்
வானுலகை விஞ்சிடும் வேதபூமி பாரதம் வாழ்வெலாம் அளித்திவள் புகழ்வளர்க்க ஏகுவோம் வானுலகை விஞ்சிடும் வேதபூமி பாரதம் எங்கெங்கும் திருக்கோயில் புனிதநீர் திருத்தலம் செங்குருதி சிந்தி வீரர் துாய்மைகாத்த திருவிடம் தர்மபூமி பாரதம் கர்மபூமி பாரதம் சுதந்திரத்துடன் ஸ்வதர்மம் காத்து என்றும் வாழுவோம் (வானுலகை) எங்கள் மண்ணில் உரிமைகோரி உலகனைத்தும் கூடினும் எங்கள் தாயைத்தீண்ட எண்ணிக் கோடிசேனை சூழினும் ஒரு சிறிதும் அஞ்சிடோம் ஒரு அணுவும் மண்கொடோம் ஒரு குழந்தை உள்ளவரை போர்க்கொடி பறந்திடும் (வானுலகை) அழகொழுகும் நதியெங்கும் அமுதநீர் வழங்குது எழில் கொஞ்சும் வண்ணமலர்ச் சோலை எங்கும் சூழுது வெற்றி மந்திரம் பொறித்த பொன்னிறக் கொடியுடன் வீறுகொண்டெழுந்து அன்னை மானங்காக்க ஏகுவோம். (வானுலகை) பாடல் பட்டியல் **********************************************************************************************விண்ணவர் போற்றும் பகவாக் கொடியின்
விண்ணவர் போற்றும் பகவாக் கொடியின் பண்ணிசை பாடி மகிழ்ந்திடுவோம் காவிக்கொடியின் பெருமையை நாமும் மேவிப் புகழ்ந்து பாடிடுவோம் அர்ஜுனன் ரதத்தில் பறந்தது பார் அரசர் பலரும் பணிந்த கொடி நந்தனை வென்றே ராஜ்ஜியம் நாட்டிய சந்திர குப்தனின் கொடியிதுவே! பாண்டிய சேர சோழ மன்னரின் கொடியும் பகவாக் கொடியிதுவே (காவிக்கொடியின்) தியாகம் துறவு தூய்மை போன்ற பண்புகளின் உரு இக்கொடியே! அறத்தின் உரு இக்கொடியின் கீழே பலியானோரும் பலகோடி பாரினைப் பண்பால் வென்றவரெல்லாம் பாரினில் நாட்டிய கொடியிதுவே (காவிக்கொடியின்) இன்றைய தேவையை உணர்ந்திடுவோம் இயற்றிடுவோம் ஓர் சபதமதை பாரத அன்னையைப் பாரின் குருவாய் மீண்டும் காண்போம் உறுதியிதே பணியில் வெற்றி கண்டிட வேண்டி நம்மை நாமே அர்ப்பணிப்போம் (காவிக்கொடியின்) பாடல் பட்டியல் **********************************************************************************************வீர கேசவர் காலடியைப் பின் தொடர்ந்து செல்கிறோம்
( ஏகதா ஆக்ஞாங்கிதாகே " -- என்ற மெட்டு ) வீர கேசவர் காலடியைப் பின் தொடர்ந்து செல்கிறோம் மோக்ஷமே இது என்று மனதிற் கொண்டு நாங்கள் செல்கிறோம் துன்பம் வழியில் வந்திடினும் பன்முறை நம்மைத் தாக்கிடினும் சங்க தியானமே மனதிற்கொண்டு பாறை போன்று நாம் நின்றிடவே தழுவிக் கொண்டுள்ளார் ஆத்ம பலத்தால் இன்பமாக நாம் சென்றிடவே சோர்ந்திடாமல் நாம் ஏகிடவே முழுமனதுடனே போகிடவே முத்துக்குளிக்கும் மக்கள் போல சங்கக் கடலில் மூழ்கிடவே பாதை காட்டியே முன்னே சென்று புனித வேலையைத் தந்துள்ளார் பாரத தேவியின் மக்கள் நாம் சிறந்த பாரதம் எங்களது என்ற உண்மையை மனதில் நாட்டி அணையும் மனதை மீண்டும் ஏற்றி வாழ்வு மூலமாய் ஜோதி வீசிட தூண்டிவிட்டுள்ளார் எங்களையே மனதில் உள்ளதாம் மாசுகளை சூழ்ந்துக் கொண்டதாம் பிணிகளினை மருந்து ஒன்றினைக் கையினிலேந்தி சொஸ்தமாக்கவே சேர்ந்துள்ளார் வைத்தியரான நம் வீரகேசவர் சங்க மருந்தைத் தந்துள்ளார் அமைதியுடனே வாழ்ந்திடவே வாதம் முழுதும் விட்டிடவே சொர்க்கலோகமே பாரத நாடு போல இதை ஆக்கிடவே இடைவிடாமலே முயன்று சென்று நாம் அவரைப் போலவே ஆகிடுவோம் பாடல் பட்டியல் **********************************************************************************************வீர கேசவர் வந்துள்ளார்
( " வீர கேசவ ஆயதே " -- என்ற மெட்டு ) வீர கேசவர் வந்துள்ளார் வீர கேசவர் வந்துள்ளார் வீர கேசவர் வந்துள்ளார் நம்மைத் துயிலினின்றும் எழுப்பவே வீரமிழந்த ஹிந்து தேசத்தின் வீற்றை மீண்டும் பெறச் செய்ய இருட்செறிந்த கார்முகில் குழுவிலே ஹிந்து பந்த மருந்திட ஸ்வதந்த்ரதாக சூர்யன் எழுதலை திரும்பவும் வரவேற்றிட உடல் எங்கும் பாயும் தன் ரத்தமே திரும்பவும் கொதித்திடச் செய்யவே தேசப் பணிக்காய் தியாக நெறியை திறனுடன் நமக்குரைத்திட தேசத்திற்கு ஹிதமே செய்குவீர் பலகோடி மக்களை ரக்ஷித்தீர் ஹிந்துக்கள் துர்தசை விருக்ஷத்தை களைந்து வேருடனெறிந்திட சுப சங்கம்தனை ஸ்தாபித்து எங்களை ஒன்றாய்ச் சேர்த்திட மறையும் ஹிந்து சுயமதிப்பை திரும்பவும் நிலைபெறச் செய்ய புவியில் நம் புகழ் நிலை பெற தேசத்தொண்டில் உயிர் நீத்த நீர் ஹிந்து தேச சரித்திரத்தை திரும்பவும் அலங்கரித்திட தீரமும் கம்பீரமும் நிறை வாழ்க்கையுடைய ஓர் மஹான் ஹிந்து எங்களை நல் நெறியில் திரும்பவும் செல்லச் செய்ய பாடல் பட்டியல் **********************************************************************************************வீரனே வெகுண்டெழுந்திடு
வீரனே வெகுண்டெழுந்திடு வீரனே வெகுண்டெழுந்திடு (வீரனே) நித்த நித்தம் எதிரியர்தம் சூளுரை முழங்கினும் நித்த நித்தம் பகைவர் படை வந்து நம்மைச் சூழினும் புத்தம் புதிய ஆயுதம் தரித்து வந்து தாக்கினும் புத்துணர்ச்சியோடு பாய்ந்து வெற்றி வாகை சூடிடு (வீரனே) நெட்டித்தள்ளு நாட்டைவிட்டு பாக்கிஸ்தானிப் பேய்களை கட்டிக் கடலில் ஆழ்த்தி விடு கருணையற்ற சீனனை தாயகத்து மண்ணைப் பிடித்து வைத்த நீசரை துரத்தி தெய்வ பூமியினை மீண்டும் தூய்மையாக்கிடு (வீரனே) நாட்டை இன்னல் சூழும் போது வீட்டிலே சுகிப்பதோ நாட்டினுக்கு உதவிடாத வாழ்க்கையுமோர் வாழ்க்கையோ நாடுகாக்க விரைந்திடாத மனிதனே நடைபிணம் ஆடிப்பாடிப் போர்க்களத்தில் வீறுடன் குதித்திடு (வீரனே) பாடல் பட்டியல் **********************************************************************************************வெற்றி வெற்றி வெற்றி என்று வீரர்களே வாருங்கள்
வெற்றி வெற்றி வெற்றி என்று வீரர்களே வாருங்கள் வேகமாக முன்னே சென்று காவிக்கொடியை நாட்டுவோம் அச்சமின்றி அடிமையின்றி, அவனிதனில் உரிமையை அடைந்திடுவோம் பாரத நன் நாட்டினது பெருமையை (வெற்றி) கட்டு இன்றி காளைபோல சுற்றிடுவோம் உலகிலே பாரதத்தின் வீர சக்தி பரப்பிடுவோம் விரைவிலே (வெற்றி) ஹிந்து தர்மம் எமது தர்மம் ஈடிலை இதற்குலகிலே எமது கொடி காவிக்கொடிக் கிணையில்லை இப்போரிலே (வெற்றி) நமக்கு இனி எதிரியில்லை நாடிடுவோம் வீரரே நாட்டு மக்கள் ஹிந்து மக்கள் என்று வீசிச்சொல்லுவோம் (வெற்றி) இடியும் மழையும் பசியும் பிணியும் இன்னல் தந்த போதிலும் நமது தர்ம சத்தியத்தின் கொடியை உலகில் நாட்டுவோம் (வெற்றி) மோசக்காரர் முட்டுக்கட்டை முன்னே நின்று தாக்கினும் முடிவிலா நம் தர்மக் கொடியை முகிலளாவ நாட்டுவோம் (வெற்றி) பாடல் பட்டியல் **********************************************************************************************வெற்றியே வெற்றியே
வெற்றியே வெற்றியே வெற்றியே தன் வாழ்வின் தாரக மந்திரமாகக் கொண்டானே பாதையில் முளைத்த பாதகங்களையே பாய்ந்து வென்றான் சிவாஜியே (வெற்றி) மாவீரர் பலர் மாண்புமிழந்து அன்னியன் ஆட்சியை ஏற்றபோது மாதர் கற்பும் மாசுபட்டு ஆலயம் சிதைந்து வீழ்ந்தபோது வீரத்தின் உரு தீரம் மிக்க சிவாஜி மன்னன் எழுந்தானே (வெற்றி) தன்னந்தனியாய் நின்ற போதும் தரணியை நடுங்கச் செய்தானே தருமம் என்றும் வென்றே தீரும் உண்மையை உலகில் நாட்டினனே வீரத்தின் உரு தீரம் மிக்க சிவாஜி மன்னன் துணிவிதுவே (வெற்றி) பாலர் சிறுவர் மலைவாழ் மக்களை சிங்கம் போலே மாற்றினனே அஞ்சிக் கிடந்த ஹிந்து மக்களை அஞ்சா நெஞ்சினர் ஆக்கினனே வீரத்தின் உரு தீரம் மிக்க சிவாஜி மன்னன் சாதனையே (வெற்றி) தீயோர் கயவர் வன்முறையாளர் சதிகள் நாற்புறம் சூழுதுகாண் கிராமம் நகரம் எங்கும் சென்று மக்கள் சக்தி திரட்டிடுவோம் வீரத்தின் உரு தீரம்மிக்க சிவாஜி மன்னன் வழி செல்வோம் (வெற்றி) பாடல் பட்டியல் **********************************************************************************************வேதாரண்யம் கரையில்
வேதாரண்யம் கரையில் வளர்ந்த வேதம் நம்ம சுதேசியம் வேண்டும் நமக்கொரு கப்பல் என்று வேகம் தந்தது சுதேசியம் உப்பை அன்று கையில் எடுத்து உரிமை கேட்டது சுதேசியம் உடுத்தும் உடையில் உணர்வில் மொழியில் உயிர் என உயர்ந்தது சுதேசியம் (வேதாரண்யம்) குப்புசாமியும் முத்துசாமியும் குளிர் நகை புரிந்தது சுதேசியம் குப்புற விழுந்தவன் முதுகினில் ஏறி குதித்தே ஆடுது விதேசியம் செப்பும் மொழி பதினெட்டும் - மிக செம்மை அடைந்தது சுதேசியம் செந்தமிழ் மறக்க ஆங்கிலம் கொழுக்க சீரழிப்பதே விதேசியம் (வேதாரண்யம்) தீப்பெட்டி செய்வதற்கும் நொறுக்குத் திண்பண்ட வகைகளுக்கும் திக்திக்கும் பானங்கள் தினம் புதுசா கிடைப்பதற்கும் மேலை நாடுகளாம் படையும் எடுக்குதடா! மெல்ல சுதேசியத்தை பாழாய் ஆக்குதடா! இன்னொரு சுதந்திரப் போரும் நடக்குது இன்றே எழுந்து வாருங்கள் (வேதாரண்யம்) பாரத தேசம் என்னுடை(ய) தேசம் என்பவர் திரண்டு வாருங்கள் அன்னிய நாட்டின் அடியினை வருடும் அவலம் மாற்றிட வாருங்கள் ஒன்றே தேசம் ஒன்றே மக்கள் ஒன்றே நாமென வாருங்கள் (வேதாரண்யம்) வேதாரண்யம் கரையில் வளர்ந்த வேதம் நம்ம சுதேசியம் வேண்டும் நமக்கொரு கப்பல் என்று வேகம் தந்தது சுதேசியம் வென்றே தீரும் சுதேசியம் வென்றே தீரும் சுதேசியம் வென்றே தீரும் சுதேசியம் (வேதாரண்யம்) பாடல் பட்டியல் **********************************************************************************************வேளை வந்தது காளையர் எழவே
வேளை வந்தது காளையர் எழவே வேத நல்பூமி அழைக்குது வாய்ப்பெதிர் நோக்கிப் பாய்ந்திட எண்ணும் பேய்ப்படை எல்லையில் கண்டிடு ஆயிரம் ஆண்டாய் வந்த மிலேச்சர் ஆற்றிய கொடுமை மறந்தாயோ வருமுன் அவரை வீழ்த்தாவிடிலோ வருந்தி மாய்வோம் அறியாயோ வெல்க நம் பாரத அன்னை என்றே வீறுடன் முழங்கி நடந்திடு (வேளை) தாயைத் தீண்டிய பாதமறுத்தே தாயைப் பழித்தோர் நாவறுத்தே நாடு பிடிக்க நோக்கிய கண்கள் புண்களாகிடச் செய்தனர் காண் வீர முந்தையர் தீர நினைவு உந்தி முந்திட நடந்திடு (வேளை) அன்பு மனைவியை அருமை மைந்தரை இன்புற வளர்த்த அன்னையினை உற்றார் உறவினர் நல்வாழ்வினையே விடுத்து நம் படைகள் போரிடுது கடும் பனியிலே காடு மலையிலே கண்ணிமை போலவர் காக்கின்றார் (வேளை) வழிவழியாய் நம் விடுதலை காக்க வாழ்வை யளித்தோர் மீதாணை தேசம் தெய்வம் தர்மம் வாழ கள பலியானவர் மீதாணை என்றும் இனி இவ்வெண்ணம் கொள்ளோம் என்று எதிரியர் கூறுவர் (வேளை) சீறி எழுந்த செந்நாகம் போல் கன்றினை காக்கும் பசுப்போல் வில்லடி வாங்கிய வேங்கை போல சொல்லடி தாங்கிய மானியைப் போல் சபதமெடுத்தே சூளுரை செய்தே பாரதம் காத்திட ஏகிடு (வேளை) ==================================================== மூன்றாம் பத்தி ("அன்பு மனைவியை") 82, 2/2/88 மற்றும் 13/6/92 பாமாலையில் இல்லை பாடல் பட்டியல் **********************************************************************************************வேற்றுமையில் ஒற்றுமை
வேற்றுமையில் ஒற்றுமை ஹிந்து தர்ம சாதனை வேற்றுமையில் ஒற்றுமை ஹிந்து தர்ம சாதனை பலமலர்கள் பூத்தபோதும் நந்தவனம் ஒன்று தான் பலமலர்கள் கோர்த்திணைந்து மாலையாவ தொன்றுதான் மாலையாக நம்மையாக்கும் ஜீவசக்தி ஹிந்துதான் ஜீவ சக்தி ஹிந்துதான், ஜீவசக்தி ஹிந்து தான் (வேற்றுமையில்) பலவழிகள் பலபாதை போகுமிடம் ஒன்றுதான் பலநதிகள் பாய்ந்து ஓடி கூடுமிடம் ஒன்றுதான் பல உருவம் பலபெயர்கள் தெய்வ சக்தி ஒன்றுதான் தெய்வசக்தி ஒன்றுதான், தெய்வசக்தி ஒன்றுதான் (வேற்றுமையில்) பாரதத்துப் பலமொழிகள் சிந்தனையோ ஒன்றுதான் பாரதத்து மாநிலங்கள் உடலிலங்க மாகிடும் பாரதத்தின் ஒருமைகாக்கும் ஆன்மசக்தி ஹிந்துதான் ஆன்மசக்தி ஹிந்துதான், ஆன்மசக்தி ஹிந்துதான் (வேற்றுமையில்) வேற்றுமையில் ஒற்றுமையைப் பெருமையாகக் கொள்ளுவோம் வேற்றுமையால் நஞ்சையூட்டும் வஞ்சகத்தை வெல்லுவோம் ராஷ்ட்ரதேவன் வெல்கவென்று ஒன்று கூடிப்பாடுவோம் ஒன்றுகூடிப் பாடுவோம், ஒன்றுகூடிப் பாடுவோம் (வேற்றுமையில்) ********************************************************************************************** பாடல் பட்டியல் **********************************************************************************************
Pages
▼
Pages
▼